நிலையான நகரம் நமக்கு இங்கே இல்லை Here We Have No continuing City 50-02-00 இப்பொழுது, எபிரேயர் 13-ம் அதிகாரத்தில் சில வசனங்களை வாசிக்க விரும்புகிறேன்; காரணம் எந்த ஒரு ஆராதனையும் தேவனுடைய வேதாகம வார்த்தையை வாசிக்காமல் முழுமை பெறாது. என்னுடைய வார்த்தை தவறிப் போய்விடும், ஒவ்வொருவருடைய வார்த்தையும்கூட தவறிப் போகும், ஆனால் தேவனுடைய வார்த்தையோ ஒரு போதும் தவறிப் போகாது. ஆனாலும், அவருடைய மகிமைக்காக நான் இதைக் கூறுகிறேன். தேவன் உங்களை ஆசீர்வதிப்பார். எபிரேயர்13:10-14: 10 . நமக்கு ஒரு பலிபீடமுண்டு, அதற்குரியவைகளைப் புசிக்கிறதற்குக் கூடாரத்தில் ஆராதனை செய்கிறவர்களுக்கு அதிகாரமில்லை. 11 . ஏனென்றால், எந்த மிருகங்களுடைய இரத்தம் பாவங்களினிமித்தமாகப் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரதான ஆசாரியனாலே கொண்டுவரப்படுகிறதோ, அந்த மிருகங்களின் உடல்கள் பாளயத்துக்குப்புறம்பே சுட்டெரிக்கப்படும். 12 . அந்தப்படியே, இயேசுவும் தம்முடைய சொந்த இரத்தத்தினாலே ஜனத்தைப் பரிசுத்தஞ்செய்யும்படியாக நகர வாசலுக்குப் புறம்பே பாடுபட்டார். 13 . ஆகையால், நாம் அவருடைய நிந்தையைச் சுமந்து, பாளயத்துக்குப் புறம்பே அவரிடத்திற்குப் புறப்பட்டுப் போகக்கடவோம். 14 . நிலையான நகரம் நமக்கு இங்கே இல்லை; வரப்போகிறதையே நாடித் தேடுகிறோம். (இப்பொழுது இங்கே என்னுடைய பாடப் பொருள்) நிலையான நகரம் நமக்கு இங்கு இல்லை; வரப் போகிறதையே நாடித் தேடுகிறோம். என்னுடைய குரல் அங்கே சிறிது சத்தமாக திரும்ப கேட்பதாக நினைக்கிறேன்.... மேல் மாடத்தில் (Balcony) இருக்கும் உங்களுக்கு, மற்றும் இரண்டாவது மாடத்தில் இருக்கும் எல்லோருக்கும் சரியாக கேட்கமுடிகிறதா? "நிலையான நகரம் நமக்கு இங்கு இல்லை" என்பதின் பேரில் கொஞ்சம் மீண்டுமாக பேச விரும்புகிறேன். அதற்காக என்னுடன் ஜெபித்துக் கொள்ளுங்கள். அதை விட அப்படி அங்கே வேறொன்றுமில்லை. 2. ஆபிரகாம் கல்தேயருடைய ஊர்.......ஊர் (Ur) என்கிற அந்த தேசத்தி லிருந்து புறப்பட்டு வந்த போது தேவனால் கட்டி உண்டாக்கப்பட்ட ஒரு நகரத்தை தேடிக் கொண்டிருந்தான் என்றே நான் நினைக்கிறேன். இப்பொழுது ஆபிரகாமுக்குள் ஏதோ ஒரு காரியம் இருந்து கொண்டிருந்தது அந்த மகத்தான ஊர் என்கிற நகரத்தை பார்க்க முடிந்தது. ஜனங்கள் ஒன்றாக குடியேறுவதற்காக உண்டாக்கப்பட்டு எங்கேயோ கட்டப்படிருக்கிற ஒரு நகரத்தின் மாதிரியாக அது இருப்பதை அவன் அறிந்திருந்தான். ஆகவே உள்ளுணர்வு அல்லது பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலினால் தேவன் கட்டி உண்டாக்கின அந்த நகரத்தை தேடினான். மேலும் அவன் அந்நிய தேசத்தில் ஒரு பரதேசியாக திரிந்து கொண்டு அந்நியர்களாகவும் யாத்ரீகர்களாகவும் தங்களை அறிக்கை செய்து, ஈசாக்கு, யாக்கோபு இவர்களைப் போல கூடாரங்களில் வாசம் செய்து கொண்டு ஒரு நகரத்தை தேடிக் கொண்டிருந்தான். அதன்பிறகு, நாம் அந்த நகரத்தை காண்கிறோம். 3. நீங்கள் எத்தனை இடங்கள் சுற்றித் திரிந்திருந்தாலும் எவ்வளவு தூரம் நீங்கள் சென்றிருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல, வீட்டைப் போல ஒரு இடம் அங்கே இருக்கவே முடியாது. அது சரியா? இங்கே எத்தனைபேர் இன்றைக்கு தங்கள் வீட்டை விட்டு தூரத்திலிருந்து வந்திருக்கிறீர்கள்? உங்கள் கரங்களை காணட்டும், வீட்டை விட்டு அப்பால் இருந்து வந்திருப்பவர்கள். ஓ....நான் "வரப்போகின்ற ஒரு நகரத்தை தேடிக் கொண்டிருக்கிற நாம் அந்நியர்களாகவும் யாத்ரீகர்களாகவும் இருந்து கொண்டிருக்கிறோம்" என்று நான் பாட விரும்புகிறேன். நான் பாடுவேன் அது எப்பொழுதும் மிகவும் பணிவாக இருக்கட்டும், வீட்டைப் போல ஒரு இடம் அங்கே இல்லை. திரும்பவும் வீட்டிற்கு செல்ல ஒரு சிறிய பயணத்தை எடுத்துக் கொள்வேனாக, நீங்களும் அப்படியே விரும்புகிறீர்கள் அல்லவா? இங்கு இருக்கிற ஒவ்வொருவரும் வீட்டுக்கு திரும்ப செல்லும்படியாக ஒரு பயணத்தை விரும்புகிறிர்கள் என்று நான் நம்புகிறேன். அப்படி இல்லையா, எங்கேயாவது சென்றிருந் தாலும், எதையாவது பார்த்திருந் தாலும் அது நீங்கள் வசித்த அந்த சிறிய பழைய நகரத்தில் நீங்கள் வசித்துக் கொண்டிருக்கிற அந்த பழைய இடத்தைப் போல நகரத்திற்கு வெளியில் எந்த ஒரு இடமும் இருக்க முடியாது. எனக்கும் கூட, இந்த மதிய வேளைக்கு பிறகு உங்கள் ஒவ்வொருவருடனும் கீழே உள்ள சாலைக்கு திரும்பி சென்று சற்று நடந்து கொண்டே ஒரு அருமையான மாலைப் பொழுதில் காரியங்கள் முழுவதையும் கலந்து ஆலோசிக்க விரும்புகிறேன். 4. இந்த நேரத்தில் அந்த முதலாவது காரியமானது என்னுடைய மனதிற்குள் நினைவுக்கு வருகிறது. வயதான சில ஆப்பிள் மரங்கள் சுற்றிலும் நின்று கொண்டிருக்க, துடைப்ப புற்கள் நிறைந்த வயல் வெளியில் நகரத்திற்கு வெளியே எளிமையாக கட்டப்பட்டிருந்த ஒரு வீடு இருந்து கொண்டிருந்தது, அங்கே எனது தகப்பனார் மற்றும் தாயார் இவர்களின் சிறிய குடும்பமானது உண்மையில் ஒரு எளிமையான இடத்தில் வசித்து வந்தனர்... 5. நாங்கள் மிக மிக ஏழ்மையில் இருந்து கொண்டிருந்தோம். தகப்பனாருக்கு அது ஒரு கடினமான நேரமாக இருந்தது. அவர் மிகவும் ஏழ்மையான ஒரு மனிதனாக இருந்தார். நாள் ஒன்றுக்கு எழுபத்தைந்து சென்ட் ஊதியத்திற்கு பெரிய மர துண்டுகளை அறுக்கும் ஒரு இடத்தில் வேலை செய்து வந்தார். என்னுடைய தகப்பனார் ஒரு மோசமான பழக்கத்தை உடையவராக இருந்தார், குடித்துக் கொண்டி ருந்தார். இதைக் கூறுவதற்காக நான் வருந்துகிறேன். ஆனால் அதுதான் உண்மை. அவர்......அவர்... என்னுடைய தகப்பனார் என்னுடைய கரங்களில் மரித்துப் போனார். அவர் கடினமாக உழைத்து விட்டு அவர் உள்ளே வரும் போது அவருடைய முதுகு சூரிய வெப்பத்தால் தாக்கப்பட்டு அவருடைய மேல் சட்டை அவருடைய முதுகில் ஒட்டிக் கொண்டிருக்கும் அம்மா அவருடைய முதுகில் ஒட்டிக் கொண்டிருக்கும் அந்த சட்டையை முதுகில் இருந்து எடுத்து விடுவதை நான் பார்த்திருக்கிறேன். அவர் என்ன செய்த போதிலும் நான் அதைக் கண்டு கொள்வதில்லை; அவர் என்னுடைய தகப்பனாராக இருக்கிறார். நான் எனது தகப்பனாரைக் குறித்து வெட்கப் படவில்லை. நான் என்னுடைய தகப்பனாரை நேசிக்கிறேன். இன்றோ அவர் மேலே கடந்து சென்று விட்டார். ஆனால் இன்னும் அவர் என்னுடைய தகப்பனாராக இருந்து கொண்டிருக்கிறார். 5. ஆகவே, வாலிபர்களே நினைவில் கொள்ளுங்கள்; உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு தந்தையும், தாயும் உங்களுக்கு இருப்பதற்கு, போதுமான அதிர்ஷ்டசாலிகளாக நீங்கள் இருப்பீர்களானால் அவர்களை நேசியுங்கள், அவர்களை கனப் படுத்துக்கள். இப்பொழுது அதை நீங்கள் அறிந்து கொள்ளவில்லை என்றால், உலகில் அவர்கள் ஒரு மகத்தான மனிதர்களாக இருந்து கொண்டிருந்தார்கள் என்று நீங்கள் நினைக்க கூடிய அந்த நேரமானது வந்து கொண்டிருக்கிறது. ஆகவே வாலிப தோழர்களே, அவர்கள் "வயதான மனிதன்" மற்றும் "வயதான ஸ்திரீ" என்று இப்படிப்பட்ட அவதூறான வாய் வார்த்தை களை ஒரு போதும் கூறாதீர்கள். அவர்கள் வயதான வயதான மனிதர் மற்றும் வயதான ஸ்திரீ அல்ல, அவர்கள் தந்தையும், தாயும் ஆவார்கள். மேலும் இந்த நாட்கள் ஒன்றில் இந்த இடத்தை விட்டு வெளியே சென்று மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அந்த சவப்பெட்டியை மண்ணுக்குள் கீழே இறக்கும் போது "சாம்பலில் இருந்து சாம்பலுக்கு மற்றும் புழுதியி லிருந்து..........என்று மேய்ப்பர் கூறும் போது ஒரு "வயதான மனிதன்" மற்றும் வயதான ஸ்திரீ என்று இருக்காது, அது ஒரு "தாய்" என்று தான் இருக்கும். நீங்கள் உங்கள் கையை பிசைந்து கொண்டு அழுது கதறிக் கொண்டிருப்பீர்கள் அது சரியே. இப்பொழுது அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் போதே மலர்களை அவர்களுக்குக் கொடுங்கள், உங்கள் தகப்பனாருக்கு மலர்களைத் தாருங்கள் அதுதான் சரி. இப்பொழுது, கீழ்ப்படிதலின் மூலம் சிறந்த மலர்களை நீங்கள் அவர்களுக்கு கொடுக்க முடியும். மேலும் அது பரிசுத்த வேதாகமத்தின் முதல் வாக்குத்தத்தமாக இருக்கிறது, "உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு கொடுத்திருக்கிற இந்த பூமியிலே உன்னுடைய நாட்கள் நீடித்திருக்கும்படி தகப்பனையும் தாயையும் கனம் பண்ணுவாயாக". 6. என்னுடைய தகப்பனார் ஒரு விவசாயப் பண்ணையில் வேலை செய்து வந்தார். நான் என்னுடைய தாயாரை நினைத்துப் பார்க்கிறேன். மூங்கில் மரத்தின் அடிப்பாகத்தைக் கொண்டு செய்யப் பட்ட பழைய மர நாற்காலிகளை நாங்கள் வைத்திருந்தோம். எத்தனை பேர்களுக்கு அதைப்பற்றி தெரியும்? மூங்கிலினால் சுற்றப்பட்ட அடிப்பாகம் உள்ள நாற்காலிகள். நல்லது, இங்கே நான் ஒரு நாட்டுப்புற மனிதன் மட்டுமல்ல, அப்படி இல்லையா? மேலும் ஒரு ஆந்தை வடிவிலான பெரிய பழைய சிம்னி மண்ணெண்ணெய் விளக்கை நாங்கள் வைத்திருந்தோம். அவைகள் வயதான ஆந்தைகளை நினைவுப் படுத்துகிறது இல்லையா? அதை நான் மட்டுமே சுத்தம் செய்வேன் ஏனென்றால் என்னுடைய கை மிகவும் சிறியதாக இருந்ததால் என்னால் அந்த அந்த சிம்னி விளக்கை சுத்தம் செய்ய முடிந்தது. மேலும் பழைய திரி அடுப்பு ஒன்றையும் சமையல் அறையில் வைத்திருந்தோம். தகப்பனார் மரத்தை வெட்டி எடுத்து வருவார்கள், நாங்கள் அதை உள்ளே கொண்டு வந்து அந்த அடுப்புக்கு பின்னால் அதை அடுக்கி வைப்போம். சிறிய குழந்தைகளாகிய நாங்கள் அவருக்கு உதவி செய்து பார்த்துக் கொள்வோம். மேலும் நாங்கள் ஒரு மேஜையை வைத்திருந்தோம். அந்த மேஜைக்கு பின்னால் நீண்ட இருக்கைகள் கொண்ட பலகை இருந்தது. தகப்பனார் பண்ணையிலிருந்து ஒரு துண்டு பலகையை எடுத்து வந்து அதை செய்திருந்தார். சிறிய பையன்களாகிய நாங்கள் எல்லோரும் போய் அதில் அமர்ந்து கொள்வோம். எங்களிடம் மூன்று நாற்காலிகள் மட்டுமே இருந்தது. நாங்கள் அதன் மேல் ஏறி அமர்ந்து கொள்வோம். 7. முன் பகுதியில் இருந்த அந்த சிறிய அறையை என்னால் நினைவு கூற முடிகிறது. அது தரையில் இருந்து முன்பகுதி ஒரு அறையாகவும், பின்பகுதி ஒரு சிறிய பாதி அறையாகவும் இருந்தது. அந்த சிறிய அறைகளில் ஒன்றில் ஒன்றில் இருந்து கொள்வோம்; நாங்கள் ஒரு பழைய அடுப்பு ஒன்றை வைத்திருந்தோம். அவைகளை குரங்கு அடுப்புகள் அல்லது சலவை அடுப்புகள் என்று அழைப்போம். மேலும் தாயார் அங்கேதான் சமையல் செய்வார்கள். மேலும் அவர்கள் "இரவு உணவு தயார்" என்று சத்தம் கொடுப்பார்கள். ஆகவே நான்.... ஓ அங்கே நாங்கள் ஐந்து சிறிய பிரன்ஹாம்கள் இருந்து கொண்டிருந்தோம். நாங்கள் ஓடிச் சென்று முகத்தை கழுவி கீழே தொங்கிக் கொண்டிருக்கிற தலைமுடியை சரி செய்து விட்டு பின்னால் உள்ள அந்த மேஜை மீது குதித்து விடுவோம். ஒரு மிகப்பெரிய பழைய மண்பானையில் இரவு உணவு சமைக்கப்பட்டு ஒரு பழைய மூன்று கால் வெந்நீர் கெண்டியின் மீது வைக்கப் பட்டிருக்கும். அவைகள் எத்தனை பேருக்கு ஞாபகம் இருக்கிறது? சொல்லுங்கள். நான் இரவு உணவை சாப்பிட விரும்புவேன் நாங்கள் எல்லோருமே அப்படித்தான் விரும்புவோம். 8. அவர்கள் மாட்டிறைச்சி மற்றும் முல்லிகன் ஸ்டுவை (Mulligan strew) எடுத்துக் கொண்டு வருவார்கள். முல்லிகன் ஸ்டுவ் என்றால் என்ன என்று எத்தனை பேருக்குத் தெரியும்? இங்கே நான் மட்டும் ஜரிஷ்காரனாக இருக்கிறேன் இல்லையா? எனவே அவர்கள் முல்லிகன் ஸ்டுவ் உணவை (வேகவைத்து எண்ணெயில் பொறித்த மாட்டிறைச் சியுடன் கூடிய ஒரு வகை உணவு) அங்கே வைத்து விடுவார்கள் என்னுடைய சாப்பிடும் தட்டானது ஒரு தகர தட்டு. வெளிப்படையாகச் சொன்னால் அது ஒரு வாளியின் மூடியைப் போல இருந்தது. அந்த கோப்பையானது கீழே சென்று உணவை எடுக்கும் ஒவ்வொரு முறையும் எனக்கு போதுமான அளவில் கிடைக்கும். நாங்கள் சோள ரொட்டியை ஒரு கடாயில் (கடாயில் சுடப்பட்ட சோள ரொட்டி அது எத்தனை பேருக்கு நினைவிருக்கிறது?) அதையும் வெட்டி நடுவில் அதை மேலே வைத்திருப்பார்கள். நான் அப்பாவின் அருகில் அமர்ந்து கொள்வேன்; ஏனென்றால் ஒவ்வொருவரும் அவரவர் ரொட்டியை உடைத்துக் கொள்வார்கள். அப்படியே அது என்னிடம் வரும்போது ரொட்டியின் மூலைப் பகுதியை எடுத்துக் கொள்வேன். அதன் மேல்பகுதி மொறுமொறு வென்று நன்றாக இருக்கும். ஆகவே இன்னுமாக நான் அதை விரும்புகிறேன். ஆம் ஐயா, நிச்சயமாக அப்படித்தான் செய்வேன். நான் பல நல்ல இடங்களிலும், சில சிறந்த இடங்களிலும் உணவு அருந்தியிருக்கிறேன். தேசத்தில் உள்ள என்னுடைய ஊழியக்கார நண்பர்கள் அழைத்துச் சென்றதை இரவு உணவுக்காக என்னை நான் நினைத்துப்பார்க்கிறேன். அதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். ஆனால் நண்பர்களே, அந்த பழைய மேஜைக்கு பின்னால் அமர்ந்து, என்னுடைய தந்தையை பார்த்துக் கொண்டு அவருடன் எண்ணெயில் பொரிக்கப்பட்ட அந்த உணவை இன்னும் ஒரு முறை அவருடன் நான் சாப்பிட முடிந்தால், என்னிடம் இருக்கும் எல்லாவற்றையும் கொடுத்துவிட நான் தயாராக இருக்கிறேன், இனி மேல் ஒரு போதும் நான் அப்படி செய்ய முடியாது. அது சரி. இனி எப்பொழுதுமே அதைச் செய்ய முடியாது. ஆகவே வாலிபர்களே, உங்கள் குழந்தை பருவத்தை சந்தோஷமாக அனுபவியுங்கள் தேவனை நேசியுங்கள். 9. அங்கே சுற்றிலுமாக என்னுடைய சகோதரர்கள் அமர்ந்திருப்பதைக் காணும்போது நன்றாக இருக்கும். அவர்களில் சிலர் நித்தியத்தில் இருந்து கொண்டிருக்கிறார்கள். இனிமேல் நான் ஒரு போதும் நான் அப்படி செய்ய முடியாது. "இங்கே நமக்கு நமக்கு நிலையான நகரம் இல்லை, ஆனால் வரப்போகிற ஒன்றை நாம் தேடிக் கொண்டிருக்கிறோம்.' நாங்கள் உள்ளே வரும் போது நான் என்னுடைய அப்பாவைக் கவனிப்பது வழக்கம், அவர் என் அளவிற்கு சிறியவராக இருந்து கொண்டிருந்தார். ஆனால் திடகாத்திரமாக இருப்பார், மேலும் தன்னுடைய மேல் சட்டையை இப்படியாக சுருட்டி வைத்துக் கொள்வார். அங்கே வெளியே வயதான ஆப்பிள் மரம் ஒன்று எங்களுக்கு இருந்தது. அந்த மரத்தில் ஒரு பழைய கண்ணாடியுடன் ஒரு கை கழுவும் தட்டை அதன் மேலே வைத்திருந்தார்கள். மேலும் தானிய சாக்கில் செய்யப்பட்ட ஒரு துண்டையும் மேலே வைத்திருந்தனர். நாங்கள் அங்கே சென்று அந்த பழைய பெஞ்சை கழுவி சுத்தம் செய்வோம். அந்த மரத்தைச் சுற்றிலும் ஒரு சிறிய பெஞ்ச் போடப்பட்டிருந்தது. அவர் தன்னுடைய அலை அலையாக இருக்கும் தலை முடியை சீவிக் கொண்டிருக்கும் போது நான் அப்பாவை பார்ப்பேன், அந்த தசைகள் அவரது புஜத்திற்கு கீழே வலிமையாக இருந்து கொண்டிருக்கும். "ஓ......என் அப்பா ஆயிரம் ஆண்டுகள் வரை இருக்க வேண்டும் என்று நினைப்பேன். எனது அப்பாவை எனக்கு மிகவும் பிடிக்கும். மேலும் "அவர் எவ்வளவு வலிமையானவர்" அவர் வாழவேண்டும், வாழ வேண்டும், வாழவேண்டும் அவர் "வலிமையானவராக இருக்கிறார்" என்று நினைத்தேன். ஆனால் அவர் ஐம்பத்தி இரண்டாவது வயதில் மரித்துப் போய்விட்டார். நிலையான நகரம் நமக்கு இங்கு இல்லை. 10. இப்பொழுது, "ஓ..., அந்த வீடு எவ்வளவு பெரியது" என்று நினைத்தேன். அதற்கு கீழே பெரிய மர உத்திரங்கள் பதிக்கப்பட்டு வெளியில் தட்டையான பலகைகள் வைக்கப்பட்டிருந்தது. ஓ......எப்படியும் அந்த வீடு நூற்றுக்கணக்கான வருடங்களுக்கு நிலைத்து நின்று கொண்டிருக்கும்." என்று நினைத்தேன் இன்று ஒரு வீடு கட்டும் திட்டம் (Housing Project) அங்கே நடந்து கொண்டிருக்கிறது. நிலையான நகரம் நமக்கு இங்கு இல்லை. ஆனால் அந்த வரப்போகின்ற ஒன்றை நாம் தேடிக் கொண்டிருக்கிறோம். அது சரி. சற்று முன்புதான் நான் இங்கு வந்து கொண்டிருந்தேன். இப்பொழுதும் கூட என்னுடைய இதயத்தில் ஒரு பெரிய பாரம் கொண்டவனாக இருந்து கொண்டிருக்கிறேன். ஓ தேவனே, இருபது வருட காலத்திற்குள்ளாக இந்த இடம் எப்படிப்பட்ட வித்தியாசமான ஒன்றாக மாறிப்போனது? நிலையான நகரம் நமக்கு இங்கு இல்லை. வரப்போகிற ஒன்றை நாம் தேடிக் கொண்டிருக்கிறோம். ஆகவே நான் என்னுடைய அப்பாவை நினைத்து பார்த்தேன். மேலும் நாங்கள் ஒவ்வொரு சனிக்கிழமை இரவு நகரத்திற்கு சென்று மளிகை சாமான்கள் கட்டணத்தை செலுத்திவிட்டு வந்தது எனக்கு நினைவு இருக்கிறது. ஒவ்வொரு முறையும் மளிகை சாமான்களுக்கு உரிய கட்டணத்தை செலுத்தி வருவோம். திரு. குரோபர் (மளிகை கடைகாரர்) எங்களுக்கு ஒரு சிறிய பையில் சாக்லேட் மிட்டாய் கொடுப்பார். எங்களுடைய மளிகைக்கட்டணம் வாரத்திற்கு மூன்று டாலர்கள் வரை இருந்து கொண்டிருக்கும் என்று நினைக்கிறேன். ஆகவே என்னுடைய அப்பா சுமார் நான்கரை டாலர் வரையிலும் வைத்திருப்பார். 11. எனவே, அம்மாவுக்கு சில பொருட்கள் கிடைக்கும்... என்னுடைய மனைவி இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். அது என்ன வகையான பொருட்கள் என்று சொல்ல நான் பயப்படுகிறேன், காரணம் ஒவ்வொரு முறையும் நான் அதில் ஏதாவது ஒரு தவறு செய்து விடுகிறேன். எப்படி இருப்பினும் அது சிறிய காரியமாக இருக்கிறது, அவர்கள் வழக்கமாக சட்டைகள் செய்வார்கள் என்பது உங்களுக்கு தெரியும். ஒரு சமயம் என்னுடைய சபையில் நான் கூறின ஒன்று எனக்கு நினைவுக்கு வருகிறது. நான் மோசமாக ஒன்றை சொல்லிவிட்டேன். தாழ்மையான இரவைக் கொண்டிருப்பதற்காக புதன் கிழமை இரவு நான் சபைக்கு போய்க் கொண்டிருந்தேன். என்னுடைய சபை பாடல் குழுவினர் அனைவரும் பின்னால் உட்கார்ந்து கொண்டிருந்தனர். கங்காம் (g-a-n-g-h-jan-j-gingham) ஜிங்ஹாம் என்று எதையோ கூறினேன். அது என்ன என்று சிந்திக்க முயற்சி செய்து கொண்டிருந்தேன். மேலும் அந்த அங்கே சாலையின் கீழே சிறிய இடத்தில் ஜீங்ஹாம் - ஜீங்ஹாம் (Gingham) என்று அழைக்கப்படும் குடிசைகள் இருந்து இருந்து கொண்டிருந்தது. ஆகவே அதைப்பற்றி சிந்திக்க முயற்சி செய்தேன் மேலும் அதைக் கூறின போது நான் தவறு செய்து விட்டதாக நிச்சயமாகவே உணர்ந்தேன். மேலும் ஐரின் வைஸ்ஹார்ட் (Irene Wiseheart) என்கிற ஒரு சிறிய பெண் எங்கள் பாடகர் குழுவில் பாடிக் கொண்டிருந்தாள். "சகோதரி வைஸ்ஹார்ட் அதைப்பற்றி நான் மறந்து விட்டால் பின்னால் திரும்பும் பொழுது அது என்ன என்று என்னிடம் கூறு என்று நான் சொன்னேன். அதனால் அது போன்ற பொருட்களைப் பற்றி என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. 12. மேலும் "இப்பொழுது இந்தக் கூடாரத்தில் புதன்கிழமை இரவானது இங்கே தாழ்மையான இரவாக இருந்து கொண்டிருக்கிறது "என்று கூறினேன். "இப்பொழுது சகோதரர்களாகிய நீங்கள் அனைவரும் வேலைக்குரிய ஆடைகளை முழுவதுமாக அணிந்து கொள்ளுங்கள். நான் என்னுடைய ஆடைகளை அணிந்து கொண்டு பிரசங்கிக்க போகிறேன்" "நீங்கள் அனைவரும் உங்கள் முழுமையான ஆடைகளுடன் வெளியே வாருங்கள். மேலும் பெண்களாகிய நீங்கள் அனைவரும் உங்களுடைய ......அணிந்து கொள்ளுங்கள்" என்று கூறி விட்டு திரும்பி நடந்து கொண்டிருந்தேன். நான் பின்புறம் திரும்பினேன், அவள் "ஜிங்ஹாம் - ஜிங்ஹாம்" என்று கூறினாள். "உங்களுடைய வேட்டை நாய் உடைகள்" என்று கூறி விட்டேன். மேலும் ஓ, நான் எனக்கு கிடைத்த ஒரு மிக மோசமான ஒரு காரியமாக இருந்தது. எல்லோரும் என்னைப் பார்த்து சிரிக்க ஆரம்பித்தனர். ஆகவே, "நல்லது நான் யூகத்தில் சொல்லி விட்டேன். "என்னவாக இருந்தாலும் கீழே இருக்கின்ற அந்த சிறிய குடிசைகளில் உள்ள பொருட்களாக இருக்கும்". ஆகவேதான் நான் அப்படி கூறி விட்டேன்" என்று கூறினேன். அதன் பிறகு ஒரு நாள் இரவு நான் வீட்டிற்குள் ஓடினேன். நான் ரோந்து பணியில் இருந்து கொண்டிருந்தேன். வழக்கமாக நான் அந்த பழைய பெரிய சிகப்பு நிற கை குட்டைகளை எடுத்துச் செல்வேன். வேட்டையாடுகிற போது சிகப்பு நிறக் கைக்குட்டையை நீங்கள் வைத்திருக்க வேண்டும் என்று உங்களுக்குத் தெரியும். நான் எனது சட்டைப் பையில் ஒன்றை எடுத்துச் செல்வேன். நாங்கள் இரண்டு சிறிய அறைகளில் வசித்து வந்தோம் ஒருநாள் நான் தாமதமாக வந்தேன் தெருவை வேகமாக கடந்து, சீக்கிரமாக சபைக்கு செல்ல வேண்டும் என்பதற்காக உள்ளே ஓடினேன், நான் அந்த அறையில் என் உடைகளை மாற்றிக் கொண்டேன். நான் அங்கே பிரசங்கித்து கொண்டிருந்தேன் உங்களுக்கு அது தெரியும் எனக்கு வியர்த்துக் கொண்டிருந்தது, பின்னால் திரும்பி அந்த கைக் குட்டையை எடுத்துக் கொண்டேன், இப்படியாக அதை அசைத்துக் கொண்டிருந்தேன். மேலும் நான் கவனித்த போது அது பெரிய பழைய சிவப்பு நிறக் கைக்குட்டையாக இருந்தது. என்னுடைய மனைவி என்னைக் கவனித்துக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன்" ஓ நல்லது" என்று கூறிக் கொண்டேன். "நான் சிறியவர்களாகிய அவர்களுக்கு பயந்து கொண்டிருந்தேன். பயந்து விழுங்கிக் கொண்டிருந்தேன் நான் அறிந்த வரையில் மோசமான இந்த இரண்டு காரியங்கள் சபையில் நடந்து விட்டது. 13. அப்பா சனிக்கிழமை இரவு எங்களை அழைத்துக் கொண்டு மளிகை சாமான்கள் கட்டணத்தை செலுத்துவதற்கு கீழே சென்றது மற்றும் அந்த சிறிய பழைய சாக்குப்பையில் இருக்கும் மிட்டாய்களை பெற்றுக் கொண்டது எனக்கு நினைவு இருக்கிறது. மேலும் நாங்கள் ஒரு பழைய சரக்கு வாகனம் (Jersey wagon) ஒன்றை வைத்திருந்தோம். நீங்கள் அதை இங்கே பக்கவாட்டு பலகை என்று அழைப்பீர்கள் என்று நான் நம்புகிறேன் அல்லது என்னவாக இருந்தாலும் அவர்கள் பின்னால் கொஞ்சம் வைக்கோல்களை வைத்திருப்பார்கள், அது குளிராகவே இருந்து கொண்டிருக்கும் எனவே நாங்கள் போர்வைகளை போர்த்திக் கொண்டு கீழே செல்வோம். மேலும் பனி தூறிக் கொண்டே இருக்கும் அவர்கள் மளிகைக் கட்டணத்தை செலுத்துவார்கள். ஆகவே இந்த ஐரிஸ் சிறியவர்கள் எல்லாம் அங்கே வெளியே அமர்ந்து கொண்டு மிட்டாய் வருவதற்காக காத்துக் கொண்டிருப்பார்கள். நாங்கள் வெளியே வந்ததும் அந்த மிட்டாய் உடைக்கப்பட்டு ஒவ்வொருவருக்கும் சமமாக பங்கிடபட்டிருக்கும். அதை ஒரு குச்சியால் அடிக்கும் போது அது பல துண்டுகளாக உடைந்து போய் விடும். அந்த சிறிய ஒவ்வொருவருடைய நீல நிற கண்ணும் அது சரியான அளவில் இருக்கிறதா என்று கவனித்து கொண்டிருக்கும், அவர்களை ஒரு போதும் ஏமாற்றி விட முடியாது. அப்படியே அங்கே அமர்ந்து அதை சாப்பிட்டுக் கொண்டிருப்போம். 14. மேலும் வழக்கமாக அவர்களிடம் நான் தந்திரமாக ஏமாற்றி விளையாடுவேன். அப்பொழுதே அதை நாங்கள் சாப்பிட மாட்டோம். அதை மென்று சாப்பிட முடியாது, ஏனென்றால் அந்த பழைய குச்சிமிட்டாய் மதிப்பு வாய்ந்தது. நாங்கள் அதை சிறிது நேரம் சப்பிக் கொண்டிருப்போம், பின்னர் அதைப் பிடித்துக் கொள்வோம், சிறிது நேரம் காத்திருந்து விட்டு பிறகு மீண்டும் அதை சப்பிக் கொள்வோம் உங்களுக்கு அது தெரிந்திருக்கும். நான் அவர்களை ஏமாற்றி விளையாடியது எனக்கு நினைவு இருக்கிறது. நான் கொஞ்ச நேரம் என்னுடைய துண்டு மிட்டாயை சப்பிவிட்டு ஒரு துண்டு காகிதத்தில் சுற்றி வைத்துக் கொள்வேன். திங்கள் கிழமை வரை அதில் சிலவற்றை வைத்திருப்பேன். பிறகு மீண்டும் நான் அதை சப்பி விட்டு, "நீங்களும் அதில் கொஞ்சம் வைத்திருக்க வேண்டாமா"? என்று அந்த சிறுவர்களிடம் கூறுவேன். மேலும் அந்த துண்டு மிட்டாயை வைத்தி ருப்பேன் அழுக்கு எல்லாம் அந்த காகிதத்தின் மீது ஒட்டிக் கொண்டிருக்கும் ஆகவே அவைகள் நன்றாக இருந்தது. மேலும் தேவையென்றால் நாளைக்கு நான் சென்று முழு சாக்லெட் (Hershey's), பெட்டியை வாங்கலாம் என்று நினைப்பேன். ஆனால் அது அது ஒரு போதும் அதைப் போல் சுவையாக இருக்காது. அது தான் உண்மையான மிட்டாய். 15. அந்த பழைய நாட்கள் எவ்வளவு சிறந்ததாக இருந்தது, மேலும் பள்ளி நாட்கள் வரும் போது நாங்கள் எப்படியாக பள்ளிக்கு சென்று கொண்டிருப்போம் என்பதை எல்லாம் நினைவு கூற முடிந்தது. உடுத்திக் கொள்ள ஆடைகள் எங்களிடம் இல்லை. போதுமான கொஞ்ச உடைகளை மட்டுமே வைத்துக் கொண்டு முறைப்படி செல்ல முடிந்தது. குளிர்காலம் முழுவதும் அம்மாவின் காலணியில் ஒன்றையும் அப்பாவின் காலணியையும் அணிந்துகொண்டு பள்ளிக்குச் சென்றது எனக்கு நினைவிருக்கிறது. அது சரிதான். அதை திறந்தவாய் காலணி (Boot-n-gagger) என்று நாங்கள் கேலியாக அழைப்போம். ஒரு காலில் அம்மாவின் காலணியையும் மற்ற காலில் அப்பாவின் காலணி ஒன்றையும் போட்டுக் கொண்டிருப்பேன் ஆகவே இதை கூறுவதற்கு மிகவும் மோசமாக இருக்கிறது, ஆனால் அதுதான் உண்மை. அந்த குளிர் காலத்தில் அணிந்து கொள்ள எனக்கு சட்டைகள் இல்லை. ஆகவே சாலைக்கு மேலே வசித்து வந்த வேதன் (wathen) என்கிற வசதி படைத்த ஒரு பெண்மணி சிறிய மேல்சட்டை ஒன்றை கொடுத்தார்கள் அதன் மேல் ஒரு சிறிய கழுகு சின்னம் இருந்தது. அந்த மேல்சட்டையை அணிந்து கொண்டு பள்ளிக்குச் செல்வேன். அங்கே மேலே உட்கார்ந்து கொண்டிருந்ததை நான் நினைத்துப் பார்க்கிறேன். அது ஒரு வகை வெப்பமான நேரமாக இருந்தது. உங்களுக்கு தெரியும் அந்த ஆசிரியை "வில்லியம்" என்று கூப்பிட் டார்கள். "ஆம் அம்மா இருக்கிறேன் என்றேன். "உனக்கு வெப்பமாக இல்லையா? அந்த மேல் சட்டையை கழட்டி வைத்துக் கொண்டால் நல்லது" என்று அவர்கள் கூறினார்கள். ''நான் அந்த மேல் சட்டையை கழட்ட முடியாது. என்னிடம் எந்த ஒரு சட்டையும் இல்லை. ஆகவே "ஏன்.....நான் ....நான் ... முடியாது அம்மா - இல்லை" "எனக்கு சற்று குளிர்ச்சியாக இருக்கிறது" என்று கூறினேன். அங்கே மேலே ஒரு பெரிய அடுப்பு ஒன்றை அமைத்திருந்தார்கள். "உனக்கு ஜலதோஷம் பிடிக்காமல் இருக்கவேண்டுமானால் நீ சென்று அந்த அடுப்பின் பக்கத்தில் அமர்ந்து கொள்" என்று கூறினார்கள். "இல்லை, வேண்டாம் அம்மா" என்று கூறிவிட்டேன். எனக்கு அதிக வெப்பமாக இருந்தது. ஆனால் என்னால் அந்த மேல் சட்டையை கழட்டி விட முடியவில்லை. எனக்கு வேறு எந்த சட்டையும் இல்லை. 16. ஆகவே நான் என்னுடைய முதல் சட்டையை பெற்றுக் கொண்ட அந்த வசந்த காலம் எனக்கு நினைவிருக்கிறது. எனக்கு உறவினர் ஒருத்தி இருந்தாள், என்னுடைய அப்பாவினுடைய தங்கையின் மகள் "லூயிசில்லி ஹாரே" (Lucille Hare) என்ற பெண் இருந்தாள். அவர்கள் எங்களை பார்க்க வந்திருந்தனர் மேலும் அவள் போன பிறகு அவளுடைய ஆடைகளில் ஒன்றை விட்டு விட்டு சென்று விட்டாள். நான்... நான் அந்த பாவாடையின் மேல் பகுதியை வெட்டி எடுத்து விட்டு ஒரு சட்டையைப் போல மடித்து வைத்துக் கொண்டு நான் பள்ளிக்குச் சென்றேன் மேலும் அது சிறியதாக இருந்தது. ஆடைகளின் ஓரங்களில் அவர்கள் வைக்கும் அந்த பொருள் என்ன? (Rickelty-rickelty) யா? அல்லது அப்படி ஏதோ ஒன்று அது உங்களுக்கு தெரியும். நான் அதை மறந்து விட்டேன். அது எல்லா இடங்களிலும் கோணல் பின்னல் (Rick-Rack) என்றே இருந்து கொண்டிருக்கும். 17. அந்த குன்றின் கீழே ரிவிட்டி, ரிவிட்டி, ரிவிட்டி, ரிவிட்டி (rivity, rivity, rivity, rivity) என்று சொல்லிக் கொண்டு மற்ற சிறு பையன்களைப் போல நாங்கள் இப்படி சறுக்கிக் கொண்டிருக்க மாட்டோம். நாங்கள் எப்படியாவது சறுக்கி சென்று கொண்டிருப்போம். அங்கே அந்தப் பழைய சாப்பிடும் தட்டின் மேல் உட்கார்ந்து கொண்டு சறுக்கிச் சென்று கொண்டிருப்போம் எல்லாம் சரி...ஆனால் சில பையன்கள் சறுக்கு வண்டி வைத்திருந்தனர். அப்படியே கொஞ்ச நேரம் கழித்து அந்த அடிப்பகுதி வெளியில் வரும். ஆகவே எங்களிடம் சறுக்கு வண்டிகள் இல்லை. மேலும் நாங்கள் கீழே உள்ள ஆற்றுக்குள் இறங்கிச் இறங்கிச் செல்வோம். மேலும் நான் பெரிய பழைய மரத்துண்டு ஒன்றை எடுத்து அதன் மீது ஒரு வயரைச் சுற்றிலும் கட்டி அதை அந்தக் குன்றின் உச்சிக்கு அதை இழுத்துச் செல்வேன். பிறகு அந்த மரத்துண்டின் மீது சவாரி செய்து சறுக்கிக் கொண்டே அந்த குன்றின் கீழே வந்து விடுவோம். அந்த இடத்தில் நடந்த ஒரு சம்பவத்தை நான் ஒரு போதும் மறக்க மாட்டேன். அங்கு லாயிட் போர்டு (Lloyd Ford) என்ற ஒரு பெயர் கொண்ட ஒரு பையன் இருந்தான் சகோதரர் கிரஹாம் அவர்களை நீங்கள் என்னுடைய அஸோஸியேட் போதகர் இங்கு எங்காவது இருந்து கொண்டிருப்பார். லாயிட் போர்டுக்கு (Lloyd Ford) அவர் ஒரு வேலையை பெற்றுக் கொடுத்தார். அது உலகப்போர் நடந்து கொண்டிருந்த நேரம் ஆகவே வழி காண்பிப்பவர் (guide) அல்லது பத்திரிகைகள் விற்பனை செய்பவர் (Book Seller) அல்லது அப்படி ஏதோ ஒரு வேலை கிடைத்தது. ஆகவே அவர் சாரணர் உடை போன்ற ஒன்றை அணிந்து கொண்டார். மேலும் எல்லா இடங்களிலும் யுத்தங்களும், ராணுவங்களுமாக இருந்து கொண்டிருந்தது உங்களுக்கு தெரியும். ஆகவே... ஒ நான் ஒரு ராணுவவீரனைப் போல உடை அணிந்து கொள்ள எவ்வளவாக விரும்பினேன். 18. படைவீரர்கள் படை முகாம்களில் இருந்து மேலே வந்து, அங்கே சாலையில் கட்டுக் கோப்புடன் நடந்து செல்வதை நான் பார்ப்பேன். நாங்கள் பள்ளியில் ஓரு பழைய கம்பம் ஒன்றை வைத்திருந்தோம், அதில் கொடியை ஏற்றி வைத்திருப்போம், ராணுவவீரர்கள் அந்த வழியாக வரும்போது கொடிக்கு வணக்கம் செலுத்துவார்கள். ஓ... "எப்படி..." என்னுடைய இதயம் சற்று துடித்தது. நான் போதுமான அளவு பெரியவனாகும் போது, படையில் சேர்ந்து விடுவேன். எனக்கு அணிந்து கொள்ள நிறைய ஆடைகள் கிடைக்கும். ஆகவே நான் இராணுவத்தில் சேர முடியும்" இப்படி நினைப்பேன். ஆனால் நான் போதுமான அளவு வளர்ந்து விட்ட போது அவர்களுடன் என்னை அழைத்துக்கூடச் செல்லமாட்டார்கள். ஆனால் யாரோ ஒருவர் என்னை ஏற்றுக் கொண்டார். அது சரியே. நான் இன்று ஒரு சேனையில் இருந்து கொண்டிருக்கிறேன். என்னுடைய சீருடையை உங்களால் பார்க்கமுடியாமல் இருக்கலாம், ஆனால் அது எப்படியும் இருந்து கொண்டிருக்கிறது என்று எனக்குத் தெரியும். அது உள்ளே இருந்து கொண்டிருக்கிறது. நான் கர்த்தருடைய சேனையில் இருந்து கொண்டிருக்கிறேன். 19. ஆகவே அந்த யுத்தத்தில் தன்னார்வ தொண்டு (Volunteers) செய்ய ஒவ்வொரு காரியமாக முயற்சித்துக் கொண்டிருந்தேன். என்னை ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும் என்னைக் கூப்பிடக்கூட மாட்டார்கள். ஊழியக்காரர்கள் வகுப்பில் வைத்துக் கொள்ளக்கூட ஒரு போதும் அவர்கள் என்னை அழைத்ததே இல்லை. மதபோதகர் ஆவதற்கான கல்வி என்னிடம் மிகவும் மோசமாக இருப்பதாக யூகித்துக் கொண்டேன். அதன் பிறகு ஒரு நான் ஊழியக்காரனாக இருக்கும் படியாக அவர்கள் எதுவுமே அவர்கள் எனக்காக பரிந்துரை எதுவும் செய்யவில்லை. அதனால் அங்கே இருந்து நான் வெளியேறிவிட்டேன். ஆனால் எப்படியோ அல்லது மற்றொரு விதமாக, கல்வி பயிற்றுவிக்கப்படாமல், என்னுடைய எல்லா பலவீனங்களுடன் கூட ஒருநாள் தேவன் புதிய வேலை ஒன்றை அனுப்பினார். நான் அதற்கு பதில் அளித்தேன். இப்பொழுது அவருடைய சேனையில் இருந்து கொண்டிருக்கிறேன். பாவத்திற்கும், தீமைக்கும் எதிராகவும், நீதிக்கு எதிரான இதுவரை இல்லாத அந்த மகத்தான போரில் ஒரு ஊதியத்தில் என்னால் முடிந்த அளவு சிறப்பாக போர் செய்து கொண்டிருக்கிறேன். 20. "லாயிட் அநத கால்சட்டையை நீ வெளியில் அணிந்து வரும்போது எனக்கு தருவாயா? என்று கேட்டது எனக்கு நினைவிருக்கிறது. சரி நான் அதை உனக்கு தருகிறேன்" என்று அவன் கூறினான். மேலும் நான் பார்த்ததிலேயே அது மிக நீளமான ஒரு கால்சட்டையாக இருந்தது. அவன் அந்த கால்சட்டையை அணிந்திருந்தான். ஒரு முறை நான் அவனைப் பார்த்த போது அதை தவறவிட்டுவிட்டு வந்திருந்தான். "லாயிட் அந்த கால்சட்டை என்னவாயிற்று? என்று கேட்டேன். "பில்லி நான் அதைக் கண்டுபிடிக்க முடியுமா? என்று பார்க்கிறேன் என்று கூறிவிட்டு சுற்றிலுமாக பார்த்தான். "இல்லை ஐயா, அம்மா அதை அப்பாவுடைய உடைகளுடன் சேர்த்து வைத்து விட்டார்கள். மேலும் நாய்களுக்கு படுக்கை விரிப்பாக பயன்படுத்தி விட்டு அதை அப்பால் எறிந்து விட்டு இருப்பார்கள். மேலும் எனக்கு எஞ்சியிருப்பது இந்த ஒருகால்சட்டை மட்டுமே" என்று கூறினான். 'அதை எனக்கு கொண்டுவா" என்று கூறினேன். மேலும் அது கிளிந்துபோய் பழைய கால்சட்டையைப் போல இப்படி கயிற்றால் பக்கவாட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்தது. நான் அந்த சட்டையை எடுத்து அணிந்து கொண்டு வீட்டிற்குச் சென்று அதை வைத்தேன். அந்த ஒற்றைக் கால்சட்டை பார்ப்பதற்கு எவ்வளவு நன்றாக இருந்தது. "நான் அதை நன்றாக இருப்பதாக உணர்ந்தேன்" அதை நான் நான் பள்ளிக்கு அணிந்து செல்ல விரும்பினேன். ஆனால் அதை அணிந்து கொண்டு எப்படி பள்ளிக்குச் செல்லப் போகிறேன் என்று எனக்கு தெரியவில்லை. ஆகவே அதை என் மேல் சட்டைக்குள் வைத்தேன். 21. மேலும் ஒரு நாள் அந்த மரத்துண்டின் மீது அமர்ந்து கொண்டு சவாரி செய்து அந்த குன்றின் கீழே சென்று விட்டேன். மேலும் 'ஒ, நான் எழுந்து நின்று "என்னுடைய காலை காயப்படுத்துக் கொண்டேன்" வ்யூ.....ம்.. என்று சொல்லிக் கொண்டேன். என்னுடைய காலுறைகள் உங்களுக்கு தெரியும், அவைகளில் பெரிய ஓட்டைகள் நிறைய இருந்தன. "நான்... கொஞ்சம் மோசமாகவே என்னுடைய காலை காயப்படுத்திக் கொண்டேன்" என்று சொல்லிக்கொண்டேன். "நான் மேல்சட்டைக்குள் வைத்திருந்த என்னுடைய சாரணர் பையன்களுக்கு உரிய கால்சட்டை சற்று நினைவுக்கு வந்தது. நான் அந்த கால்சட்டையை அணிந்து கொண்டு கொஞ்சம் நொண்டிக் கொண்டு இப்படி பள்ளிக்கு நடந்து சென்றேன், மேலும் அந்த ஒற்றைக் கால்சட்டையை ஒவ்வொருவரும் கவனித்துக் கொண்டிருந்தனர். மேலும் நான் சில கணக்குகளை முன்னால் சென்று கரும்பலகையில் செய்ய வேண்டியிருந்தது. ஒரு காலுக்கு மட்டுமே உறை அணிந்திருந்தேன். ஆகவே அவர்கள் என்னை பார்த்து விடாமல் இருப்பதற்காக பக்கவாட்டில் சென்று இப்படியாக நின்று கொண்டு அந்தக் கணக்கை செய்தேன். என்னைக் கவனித்துக் கொண்டிருக் கிறார்களா என்று வெளியே பார்த்தேன், எல்லோரும் நான் ஒற்றைக் கால்உறை அணிந்திருந்ததை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தனர். நான் அழவேண்டியதாயிற்று. ஆகவே அவள் என்னை கீழே வரும்படி கூறினாள். ஆனால்......ஓ நான்... அங்கே ஏதோ ஒரு சில காரியங்கள் இருந்தது. அதைக் குறித்து நான் வெட்கப்படவில்லை, இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியால் இன்று எனக்கு ஒரு ஜோடி கால் உறைகள் இருக்கிறது. அது சரியே. பிறகு அங்கே என்னுடைய குழந்தைப் பருவத்தில் எத்தனையோ பெரிய சம்பவங்கள் நிகழ்ந்து விட்டது. அதை அணுகுவதற்கு எனக்கு நேரமில்லை. 22. ஒரு காரியம் நீண்ட நாட்களுக்கு முன்பு அல்ல. டெக்சாஸ் (Texas) நகரத்தில் ஒரு எழுப்புதல் கூட்டத்திற்காக நான் போய்க் கொண்டிருந்தேன். வீட்டிற்கு வந்து மனைவி, மற்றும் நான் குழந்தை, நாங்கள் சாலையில் சென்று கொண்டிருந்தோம். மேலும் நான் மிகவும் களைத்துப் போய் இருந்தேன், சற்று விழுந்து விடுவதைப் போல சாய்ந்து விட்டேன். என்னால் நிற்க முடியாமல் இருந்தேன். வீட்டிற்கு செல்லும் அந்த வழியில் நான் வண்டியை ஓட்டிக் கொண்டு இருந்தேன் பிறகு அப்படியே தூங்கி விடுவேன், ஆகவே சுமார் இரண்டு மைல் தொலைவிற்கு வண்டியை ஓட்டி விட்டு பிறகு நிறுத்தி விடுவேன். நான் தூங்குவதற்கு செல்வேன் பிறகு விழித்துக் கொள்வேன். ஆகவே சிறிது தூரம் சென்றவுடன் எனக்கு தூக்கம் வந்து விடும் அதனால் ஏறக்குறைய வண்டி சாலையை விட்டு அகன்று சென்று விடும் பிறகு நான் நிறுத்தி விடுவேன். "இது மிகவும் மோசமாக இருக்கிறது ஆனால் நான் வீட்டுக்கு போக வேண்டும்" என்று நினைத்தேன். ஆகவே வாகனத்தை நிறுத்தி வைத்து விட்டு காருக்குள்ளேயே படுத்து கொண்டு தூங்குவதற்கு முயன்றேன். சிறிது நேரத்திற்குப் பிறகு நான் கண் விழித்த போது என்ன நடந்திருந்தது? என்று உங்களுக்குத் தெரியுமா? சாலையை விட்டு அகன்று பசுக்கள் மேயும் புல்வெளியின் வழியாக நான் காரை ஓட்டிக் கொண்டிருந்தேன். என் கை வெளியில் தொங்கிக் கொண்டிருந்தது, "சகோதரியே இதை நம்புங்கள், நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் அவ்வளவு தான். எப்பொழுதுதாவது நீங்கள் சுகத்தை பெற்றுக் கொண்டிருப்பீர்களானால் இதையும் நம்புங்கள்" என்று கூறிக் கொண்டிருந்தேன். சாலையை விட்டு விலகி அங்கே அந்த மேய்ச்சல் புல் தரையின் வழியாக வந்து விட்டேன், அப்படியே தூங்கி விட்டேன். அங்கே ஒரு பெரிய கூட்டமே கூடி காத்திருந்தனர். ஆகவே நானும் என் மனைவியும் வாகனத்தை எடுத்துக்கொண்டு அப்படியே சாலைக்கு மேலே சென்று விட்டோம். 23. நான் அங்கே இருந்த அந்தப் பழைய பள்ளிக் கட்டிடத்தின் வழியாக கடந்து சென்றேன், அதுவும் கூட போய்விட்டது, நிலையான நகரம் நமக்கு இங்கு இல்லை. ஆகவே அங்கே இருந்து மிஸ்டர் வேதன் (Mr.Wathen] அவர்களுடைய கார் ஓட்டுனர் வழக்கமாக இருக்கும் அந்த இடத்திற்கு நேராக கடந்து நேராக கடந்து சென்றேன் அவர்கள் அங்கே வசித்தார்கள். அங்கே ஒரு தண்ணீர் குழாய் இருந்தது அதில் தண்ணீர் குடிக்க விரும்பினேன். மேலும் ஒரு முறை தாவீது அந்த கிணற்றிலிருந்து தண்ணீர் குடிக்க விரும்பினதைப் போல நான் நினைத்தேன். ஆகவே நான் அங்கே இறங்கிச் சென்று தண்ணீரை இறைக்க ஆரம்பித்தேன், மனைவியும், குழந்தையும் ஊதா நிறப் பூக்களை பறித்துக் கொண்டிருந்தார்கள். நான் அந்த பழைய வேலியின் குறுக்காக சாய்ந்து கொண்டு, அந்த பழைய குன்றை கவனித்துக் கொண்டிருந்தேன் அங்கே நாங்கள் பயன்படுத்திய அந்த பள்ளிக்கூடம், அந்த பழைய மரங்கள் மற்றும் அந்த வசந்த காலத்தில் சர்க்கரைசாறு மரத்திலிருந்து தட்டி அது மேலே வரும் பொழுது அவைகளை இனிப்பை உறிஞ்சிக் குடிப்போம். உங்களுக்கு தெரியும். நான் நினைத்து பார்த்தேன். ''ஓ" அந்த பையன்கள் எல்லோரும் வரிசையாக நின்று கொண்டு ஒருவர் மீது ஒருவர் இப்படியாக மிதித்துக் கொண்டு கைகளை தோள்களில் போட்டுக் கொண்டு கொடியை மேலே பிடித்துக் கொண்டு போய் கொண்டிருந்ததை நான் கற்பனை செய்து பார்க்க முடிந்தது, அந்த ஆசிரியர் கையில் ஒரு நீளமான பிரம்பை வைத்துக் கொண்டு எங்களை வரிசையில் நிற்கும்படி செய்து கொண்டிருப்பார். மேலும் நான் அந்தக் குன்றின் மேல் இருந்த பயன்படுத்திய அந்த பழைய வீட்டைக் கவனித்தேன், இப்பொழுது அங்கே குடியிருப்பு வீடுகள் கட்டுமான திட்டம் (Housing Project) நடந்து கொண்டிருந்தது. கீழே இருந்த பழைய பள்ளிக் கட்டிடமும் போய் விட்டது. ஆகவே என்னுடைய இதயம் கனக்க ஆரம்பித்தது. "நிலையான நகரம் நமக்கு இங்கு இல்லை." ஆனால் வரப்போகிற ஒன்றை தேடிக்கொண்டிருக்கிறோம். 24. வழக்கமாக என்னுடன் பழகிய அந்த சிறுவர்கள் என் நினைவுக்கு வந்தனர். "நான் யோசித்துப் பார்த்தேன். ரால்ஃப் பீல்ட்ஸ் (Ralph Fields) அவன் எங்கே இருக்கிறான்? ஹாவர்டு ஹிக்கின்ஸ் (Howard Higgins) அவன் இப்பொழுது எங்கே இருக்கிறான்? அவனும் மரித்துப் போய்விட்டான். என்னுடைய சகோதரன் எங்கே இருக்கிறான்? அவனும் கடந்து சென்று விட்டான். "நிலையான நகரம் நமக்கு இங்கு....." தந்தை எங்கே இருக்கிறார்? அவரும் கடந்து சென்று விட்டார். சார்லஸ் (Charles) எங்கே இருக்கிறான்? அவனும் போய்விட்டான். எட்டுவர்டு? [Edward] அவனும் போய்விட்டான். 'ஒ தேவனே கூடிய விரைவில் இந்த பூமியில் இருக்கின்ற யாராவது சிலர் கவனித்துப்பார்த்து பில் எங்கே இருக்கிறான்? அவனும் கடந்து சென்றுவிட்டான்" என்று கூறுவார்கள் என்பதை நான் நினைத்து பார்த்தேன். நிலையான நகரம் நமக்கு இங்கு இல்லை. நான் அதை நினைத்துப் பார்க்க துவங்கினேன். என்னுடைய இதயம் படபடக்க ஆரம்பித்தது. என் சகோதரனுக்குச் செய்த சிறிய தந்திரமான காரியம் ஒன்றை நான் நினைத்துப் பார்க்கிறேன். வருத்தப்படக்கூடிய அப்படிப்பட்ட எந்த ஒரு காரியத்தையும் ஒருபோதும் நீங்கள் செய்து விடாதீர்கள். ஒரு நாள் நாங்கள் பள்ளிக்கு போகும் போது அம்மா வறுத்த சோளத்தை (POPCORN) கொடுத்து அனுப்பியது எனக்கு நினைவிருக்கிறது. நாங்கள் அதை மற்ற குழந்தைகளுடன் சாப்பிட முடியாது. நாங்கள் எப்பொழுதுமே அந்த குன்றை சுற்றி சென்று அங்கே வைத்துதான் அதை சாப்பிடுவோம் ஏனென்றால் நாங்கள் மற்ற குழந்தைகள் வாங்க முடிந்த இறைச்சி கலந்த அந்த ரொட்டியை (sandwitches] நாங்கள் வாங்க முடியாது. ஆகவே வழக்கமாக நாங்கள் ஒரு ஜாடி வைத்திருப்போம். அதில் பச்சைப் பயறுகள் மற்றும் சோள ரொட்டியுடன் பக்கத்தில் இரண்டு கரண்டிகள் இருக்கும், ஜாடி முழுவதும் இப்படி நிறைந்திருக்கும். உங்களுக்கு தெரியும். ஆகவே நாங்கள் எல்லோரும் ஜாடிக்குப் பக்கத்தில் அமர்ந்து கொண்டு ஜாடியில் இருந்து கரண்டியால் எடுத்து, எங்களுடைய ரொட்டியை ஒருவருக்கொருவர் முன்னும் பின்னும் நகர்த்தி கொண்டு சாப்பிடுவோம். அந்த குழந்தைகளுக்கு முன்பு அதைச் சாப்பிட நாங்கள் வெட்கப்படுவோம். ஆகவே நாங்கள் அந்த குன்றிற்கு அப்பால் ஓடிச்சென்று அங்குள்ள மரங்களுக்கு பின்னால் இருந்து கொண்டு அதை சாப்பிடுவோம். 25. அம்மா எங்களுக்கு கிறிஸ்துமஸ் சமயத்தில் சோளப் பொரி கொடுத்ததை நான் நினைத்து பார்க்கிறேன். நாங்கள் அதை ஒரு பையில் வைத்து பள்ளிக்கூடத்திற்கு எடுத்து சென்று அதை பொருட்கள் வைக்கும் அறையில் (Cloak Room) வைத்து விட்டு செல்வோம். மேலும் இங்கே சிறிய மோசமான ஏமாற்று வேலை ஒன்றை செய்தேன், நான் கையை உயர்த்தினேன். "வில்லியம் உனக்கு என்ன வேண்டும்" என்று ஆசிரியர் கூறினார். "என்னை மன்னிப்பீர்களா" என்று நான் கூறினேன். "ஆம் ஐயா நான்" என்று கூறினேன். ஆகவே நான் கட்டிடத்திற்கு வெளியே பொருட்கள் வைக்கும் அறைக்கு சென்றேன், அந்த பைக்குள் என்னுடைய கையை விட்டு சோளப் பொரியில் கை நிறைய எடுத்துக் கொண்டேன். பள்ளிக்கு பின்புறம் சென்று உணமையில் என் பங்கு வீதம் இருக்கும் அந்த சோளப் பொரியை சாப்பிட்டேன். நான் ஒரு போதும் மறக்க மாட்டேன். சாப்பாட்டு வேளை வந்த போது நாங்கள் வெளியே சென்று பக்கெட்டில் இருந்த எங்களுடைய சோளப் பொரியை எடுத்துக் கொண்டோம். என்னுடைய பங்கை நான் பெற்றுக் கொண்டேன். என்னுடைய சகோதரன் அந்தப் பையை கவனித்து விட்டான். மேலும் அதில் பாதி அளவு காணாமல் போய் விட்டிருந்தது. "அங்கே ஏதோ காரியம் நடந்திருக்கிறது அப்படி இல்லையா? சொல்' என்று கூறினான். "நான்தான் உண்மையில் அதை செய்தேன்" என்று கூறினேன். ஹா ...ஹா ... என்ன நிகழ்ந்தது என்று எனக்கு தெரியும். அவனுடைய சோளப் பொரியை நான் சாப்பிட்டு விட்டேன். ஆனாலும் மீதி இருந்ததை அவன் என்னுடன் பகிர்ந்து கொண்டான். 26. ஆகவே அங்கே அங்கே இருந்த வேலியின் மீது சாய்ந்து கொண்டு, இந்த காரியங்கள் எல்லாவற்றையும் நினைத்துப் பார்த்தேன், இருந்து கொண்டிருந்த அந்த ஒருவனும் மேலே கடந்து சென்று விட்டான் மருத்துவமனையில் இருந்து என்னை கூப்பிட்டுக் கொண்டிருந்து விட்டு அவன் மரித்துப் போய்விட்டான். அப்பொழுது நான் அரிசோனாவில் இருந்து கொண்டிருந்தேன். இது பல வருடங்களுக்கு முன்பு நடந்தது. நண்பர்களே, எனக்கு முன்பாக நூறு மில்லியன் டாலர்கள் பணம் வைக்கப்பட்டிருந்தாலும், எனக்குள்ள எல்லாவற்றையும் கொடுத்து விடுவேன் என் கைநிறைய சோளப்பொரியை அவனுக்கு கொடுக்க முடிந்தால், கை நிறைய நான் எடுத்துக் கொண்ட அந்த சோளப் பொரியை மீண்டும் அவனிடம் கொடுக்க முடியுமானால் இனி அப்படி செய்ய முடியாது. அவன் கடந்து போய்விட்டான். "எவ்வளவு கடினமாக அவன் வாழ வேண்டியிருந்தது, சிறுவனாக இருக்கும் போதே அவன் மரித்துப் போய்விட்டான்" என்பதை நினைத்து பார்த்தேன். மேலும் எப்படியாக நாங்கள் எங்களுடைய உடைகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வோம். அவன் மரிப்பதற்கு சற்று முன்பு அவனுடைய கரத்தை அவன் இதயத்தின் மீது வைத்துக் கொண்டு "நான் மீண்டும் பில்-ஐ பார்ப்பதற்கு ஒரு போதும் இனி உயிர் வாழ மாட்டேன்" ஆனால் "அவன் எனக்குப் பிடித்தமான ஒரு சகோதரனாக இருந்தான்" என்று அவனிடம் சொல்லுங்கள்" என்று கூறி இருக்கிறான். எனவே அங்கே நான் சென்ற போது அவற்றை சிந்தித்து கொண்டிருந்தேன். நான் கதறி அழ ஆரம்பித்தேன். "நீங்கள் ஏன் வீட்டிற்கு வந்து ஓய்வு எடுக்கக் கூடாது" என்று மனைவி கேட்டாள். மேலும் என்ன நடந்து கொண்டிருந்தது என்று அவள் பார்த்திருந்தாள், பிறகு அவள் என்னை அழைத்து சென்றாள் நாங்கள் சாலையில் சென்று கொண்டிருந்தோம். வாழ்க்கை என்பது ஒரு சிறு குழந்தையைப் போல் இருந்து பின்பு அது வாலிப பருவமாகி விடுகிறது. நான் விரைந்து சென்று கொண்டிருக்கிறேன். 27. நான் ஒரு வாலிபனாக இருந்தேன்; நான் -நான் அந்தப் பெண்கள் வாழ்ந்து கொண்டிருந்த விதத்தை பார்த்தேன். நான் ஒரு போதும் பெண்களையோ, ஸ்திரீகளையோ விரும்பியதில்லை. காரணம் அவர்கள் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நான்- நான் போதுமான அளவிற்கு பார்த்து விட்டேன். காரியம் எதுவாக இருப்பினும் பெண்கள் மீது எனக்கு ஒரு மரியாதை உண்டு அது உண்மை. அவள் எப்படிப்பட்டவளாக இருந்தாலும், அவள் வெள்ளையாகவோ அல்லது வேறு எந்த வண்ணத்தில் இருப்பினும் எனக்கு கவலை இல்லை, அவள் உண்மையிலேயே ஒரு கண்ணியமிக்கவளாக இருந்து கொண்டிருப்பாளானால், அவள் உயர்ந்த மரியாதைக்கு தகுதியானவளாக இருக்கிறாள். தேவன் அதை அறிந்திருக்கிறார். ஆகவே நான் சிறிய பையனாக இருந்த போது என்னுடைய இதயத்தில் ஒரு நோக்கம் இருந்தது, நான் ஒரு போதும் பெண்களுடன் எந்த ஒரு காரியமும் வைத்துக் கொள்ளாதவனாக இருந்தேன். என் வாழ்நாள் முழுவதும் ஒரு வேட்டைக்காரனாக இருந்து வந்திருக்கிறேன். நண்பனே நான் அப்படியேதான் செய்து கொண்டிருந்தேன். மேலும் நான் காட்டிற்குள் வசித்துக்கொண்டு இரவு முழுவதும் வேட்டையாடிக் கொண்டிருப்பேன். ஏனென்றால் அங்கே தான் இயற்கையின் மூலம் நான் தேவனை அறிந்து கொண்டேன். பதினேழு வயது அல்லது பதினெட்டு வயதான போது எனக்கு நினைவு இருக்கிறது, அல்லது அதற்கு பிறகு இருக்கலாம், மற்ற பையன்களைப் போலவே எனக்கும் சில நண்பர்கள் இருந்தனர், ஜேம்ஸ் பூலி [James Poole) என்கிற அந்த நண்பனுடைய தந்தை ஒரு கார் வைத்திருந்தார் மேலும் சிறிய பெண் ஒருத்தி அவனுடன் இருந்தாள். அவள் என்னைப் பார்க்க வேண்டும் என்று விரும்பினாள். மேலும் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பது உங்களுக்குத்தான் தெரியும். நான் அந்த சிறிய பெண்ணை பார்த்தேன். பார்த்ததிலேயே அவள் மிகவும் அழகான ஒரு சிறு பெண்ணாக இருந்தாள். முத்துக்களைப் போன்ற பற்கள், புறாவைப் போல கண்கள், வாத்தைப் போன்ற கழுத்து. ஓ, நான் பார்த்ததிலேயே மிகவும் அழகான ஒரு பெண்ணாக இருந்தாள். எனவே "அவள் உன்னைச் சந்திக்க விரும்புகிறாள் பில்" என்று கூறினான். மேலும் நான் "ஓ" என்று கூறிவிட்டு "ஒரு பெண்ணுடன் எப்படி பேசுவது என்று எனக்குத் தெரியாது.""என்னால் அதைச் செய்யமுடியாது" என்று கூறி விட்டேன். மேலும் "ஒ.....மேலே வா" என்று அவன் கூறினான். ஆகவே அவளிடத்தில் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தேன். சிறிது நேரம் சென்ற பின்பு "அப்பாவின் பழைய காரை நான் வைத்திருக்கிறேன்" "நாங்கள் எங்கள் பெண் சிநேகிதிகளுடன் ஒரு பயணம் செல்லப் போகிறோம்" என்று அவன் கூறினான். "நல்லது, அது ஒன்றும் மோசமானதாக இருக்க முடியாது" என்று நினைத்துக் கொண்டேன். 28. ஆகவே நாங்கள் வெளியில் சென்றோம். அங்கே ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு இறைச்சி கலந்த ரொட்டி துண்டுகளை [sandwiches] வாங்கினோம். மேலும் நான் உள்ளே சென்று சில குளிர்பானங்கள் [cokes] சாண்ட் விட்ச்களை வாங்கிக் கொண்டு திரும்பவும் வெளியில் வந்தேன். பிறகு அந்த ரொட்டி துண்டுகளை (sandwiches) சாப்பிட்டோம். பின்னால் இருந்த குளிர்பான பாட்டில்களை எடுக்க திரும்பிய போது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது நான் வெளியில் வந்து விட்டேன், என்னுடைய சிறிய பெண் சிநேகிதி சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தாள். நல்லது, நான் எப்பொழுதுமே பெண்கள் சிகரெட் புகைப்பதைக் குறித்து _ நான் ஒரு கருத்தை உடையவனாக இருந்தேன், இப்பொழுதும் கூட அதை நான் மாற்றிக் கொள்ள முடியாது. அது ஒரு கீழ்த்தரமான, மிகவும் ஒழுக்கக் கேடான, சீரழிவைக் கொண்டிருக்கிறதான, ஒரு பெண் செய்யக் கூடாத காரியமாக அது இருக்கிறது. நான் இங்கே அந்த வகையில் சுவிசேஷத்தை பிரசிங்கித்து கொண்டிருக்கவில்லை. உங்களுடைய போதகர் அதை செய்வார். ஆனால் பெண்களாகிய நீங்கள் புகை பிடிக்கிறவர்களாக இருந்தால் கிருபையில் இருந்து விலகி அப்பால் சென்றுவிடுகிறீர்கள். ஒரு பெண் சிகரெட் புகைப்பதை பார்க்கிற போது அது எப்படிப்பட்ட ஒரு கீழ்த்தரமான காரியமாக இருக்கிறது. என்னைப் பொறுத்த மட்டில் அது மிகவும் மோசமான காரியமாக இருக்கிறது. மாறாக அவள் எந்த நேரத்திலும் குடிபோதையில் இருப்பதை நான் பார்க்க விரும்புவேன். 29. மேலும் கவனியுங்கள், கேடு விளைவிக்கும் காரியங்களைப் பற்றி நீங்கள் பேசுகிறீர்கள். ரஷியா அதை செய்யும் என்று நீங்கள் கவலைப்பட வேண்டாம். ரஷியா நம்மை காயப்படுத்தப் போவதில்லை. நம்மை நாமே காயப்படுத்திக் கொண்டிருக் கின்றோம். நம்முடைய ஒழுக்க சிதைவுகளே நம்மை காயப்படுத்திக் கொண்டிருக்கிறது. நம்மை நாமே கெடுத்துக் கொண்டிருக்கிறோம். புகை பிடிக்கும் பழக்கம் கொண்ட எண்பது சதவீத பெண்களின் குழந்தைகளுக்கும் கூட அவர்கள் பாலூட்டும் போது எட்டு மாதத்திற்குள்ளேயே அந்த குழந்தையானது மரித்துப் போய் விடுகிறது. தாயானவள் ஊட்டும் தாய்ப்பாலின் வழியாக அந்த நிகோடின் என்கிற விஷமானது சென்று அந்த சிறு குழந்தையை கொன்று விடுகிறது என்று மருத்துவர்களின் புள்ளிவிவரம் சொல்கிறது. அந்த கேடுவிளைவிக்கும் காரியங்களை ஐந்தாம் படையைச் சேர்ந்தவர்கள் (Fifth Columnist) (உளவாளிகள்) ஏன் செய்ய வேண்டும்......? நான் இப்பொழுதும் சொல்கிறேன், இந்த உலகத்திற்கு இன்று என்ன தேவைப்படுகிறது, ஒரு புதிய ஜனாதிபதி அல்ல, பழைய பாணியிலான பரிசுத்த பவுலின் எழுப்புதலும், அந்த புனித வேதாகமத்தின் பரிசுத்த ஆவி சபைக்குள்ளாக மீண்டும் திரும்பி வருதலுமே அதற்கு தேவையாக இருக்கிறது. சரியாக அதுவே தேவையாக இருக்கிறது. 30. மேலும் ஸ்திரீயானவள், எப்படி அவர்களால் புகை பிடிக்க முடிகிறது. ஒரு ஸ்திரீயானவள் புகை பிடித்துக் கொண்டிப்பதை பார்க்கும் போது பார்ப்பதற்கு அது ஒரு பயங்கரமான காரியமாக இருக்கிறது என்று நான் நினைத்தேன். நல்லது, அது என்னுடைய இதயத்தை சற்று சுக்குநூறாக்கி விடுகிறது என்னால் அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனுடன் செய்வதற்கு எந்த ஒரு காரியமும் இல்லை. அதனால் நான் அவளை விட்டு விட்டேன். கர்த்தருடைய தூதன் எனக்கு தூதன் எனக்கு தோன்றிய நேரமாக அது இருந்தது. அவள் என்னைப் பார்த்து சிரித்தாள், என்னை ஒரு பெண்தன்மை கொண்ட ஒரு பையன் என்று அழைத்தாள். அந்த இடத்தில் இருந்து என்னை வீட்டிற்கு நடந்து போகும்படி செய்துவிட்டாள். "அது சரியே". "நல்லது நீ ஒரு பெண்தன்மை கொண்டவன், நான் உன்னுடன் கூட எங்கும் பயணம் செய்ய முடியாது" என்று கூறினாள். "நீ அப்படிச் செய்ய வேண்டியதில்லை" என்றேன். "நீ புகைப்பிடிப்பதில்லையா?" என்றாள். "இல்லை அம்மா" என்றேன். "ஏதேனும் குடிக்க மாட்டாயா? என்றாள். "இல்லை அம்மா" என்றேன். "உனக்கு என்னதான் பிடிக்கும்?" என்றாள். "மீன் பிடிக்கச் செல்வது, வேட்டையாட செல்வது" என்று கூறினேன். தொடர்ந்து அவள் அதில் ஆர்வம் காட்டவில்லை. அதைப்பற்றி நினைத்தேன். எப்படி இருந்தாலும் அது தான் அந்த வழியாக இருந்தது. இன்று அதை நினைத்து நான் சந்தோஷப்படுகிறேன். அது சரி ஆமென். கவனியுங்கள் நண்பர்களே, ராபின் பறவை கொத்துவதால் ஆப்பிள் பழம் சேதமடைவதில்லை ஆப்பிள் பழத்தை காயப்படுத்துவது ராபின் பறவை அல்ல; ஆப்பிள் பழத்தின் மையப்பகுதியில் உள்ள பூச்சிதான் அந்த ஆப்பிள் பழத்தை கொன்று விடுகிறது. அப்படியேதான் நம் மத்தியில் இருக்கின்ற பாவமானது நம்மை சேதப்படுத்திக் கொண்டு இருக்கிறது. (அது சரி). நம் மத்தியில் இருக்கின்ற பாவமே நம்மை கொன்று கொண்டிருக்கிறது. 31. இப்பொழுது நான் எப்படி திருமணம் செய்து கொண்டேன் என்று தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள் என்று நினைக்கிறேன். நான் என் மனைவியை சந்தித்த போது, அவள் மிகவும் அன்பான ஒரு கிறிஸ்தவ பெண்ணாக இருந்தாள், நான் அப்பொழுது சுமார் இருபத்தி மூன்று இருபத்தி நான்கு வயது நிரம்பியவனாக இருந்தேன். அவள் மிகவும் இனிமையான, தாழ்மையான சுபாவம் உடையவளாக இருந்தாள். நான் அவளை சந்தித்து சபைக்கு அழைத்துச் சென்றேன். அவள் சபைக்கு சென்றாள். அவள் மிகவும் ஒரு அன்பான பெண்ணாக இருந்தாள். இங்கே இருக்கின்ற இந்த எல்லா ஜனங்களுக்கும், ஜெபர்ஸன்வில்-ல் இருந்து வந்திருந்த என்னுடைய நண்பர்களுக்கும், இங்கே எனக்கு முன்பாக அமர்ந்து கொண்டிருக்கிற அவளைக் குறித்து தெரியும் அல்லது அவளை நன்கு அறிந்திருந்தனர், மேலும் எவ்வளவாக அவள் ஒரு இனிமையான பெண்ணாக, அருமையான பெண்ணாக இருந்தாள். இன்று அவள் கல்லறையில் இருந்து கொண்டிருக்கிறாள். ஆனால் அவளுடைய சரீரம் மட்டுமே அங்கு இருந்து கொண்டிருக்கிறது. அவளுடைய அவளுடைய ஆத்துமா கிறிஸ்துவுடன் கூட இருந்து கொண்டிருக்கிறது. மேலும் அவள் மிகவும் கிறிஸ்தவ நற்பண்பு கொண்ட அடக்கமுள்ள ஒரு பெண்ணாக இருந்தாள். மேலும் அவளுடன் சிறிது நேரம் சென்று கொண்டிருந்தேன். ஒரு நல்ல குடும்பத்தில் இருந்து வந்திருந்தாள். அவளுடைய தந்தை, அந்த நேரத்தில் மன அழுத்தம் கொண்டவரைப் போல இருந்தார். அவர் ஒரு மாதத்திற்கு ஏறக்குறைய அறுநூறு டாலர் வரையிலும் சம்பாதித்தார், பென்சில்வேனியா (Pennsylvania Rail Road] இரயில் பாதையில் ஒரு உடன் அமைப்பாளராக இருந்தார். நான் குழிகள் தோண்டும் வேலையில் ஒரு மணி நேரத்திற்கு இருபது சென்ட்கள் (Cents) சம்பாதித்து கொண்டிருந்தேன். ஆகவே அந்தப் பெண்ணை கல்யாணம் செய்து கொள்ள முடியாது என்று நான் நினைக்கவில்லை. 32. அவளுடன் நேரத்தை செலவிட முடியுமானால் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் அவளுடன் போய்க் கொண்டிருப்பேன், அவள் மிகவும் நல்ல பெண்ணாக இருந்தாள் ஒரு மனிதனுக்கு நல்ல மனைவியாக இருந்து கொண்டு அந்த மனிதனை மாற்றி விடுவாள். ஆகவே, ஒன்று நான் அவளை விட்டுவிட வேண்டும் அல்லது என்னை திருமணம் செய்து கொள்ளும்படி அவளிடம் கேட்க வேண்டும். அப்படி கேட்பதற்கு எனக்கு போதுமான தைரியம் இல்லை. ஒரு யோசனை தெரிந்தது, எப்படி என்று நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். நான் அவளுக்கு கடிதம் ஒன்றை எழுதி, அவளிடம் "என்னை திருமணம் செய்து கொள்வாயா?" என்று கேட்பேன். மேலும் "அன்பான தோழியே, என்னை ஏற்றுக் கொள்வாயா" "நல்லது. ...நான் ...." இப்பொழுது அது... அது... அப்படி இருக்க முடியாது. அது மிகவும் கொஞ்சமாக இருந்தது. அதை நீங்கள் எப்படி அழைக்கிறீர்கள்; மென்மையான ஒரு விதத்தில் நான்...நான்... அவளிடம் பேச முடியும். ஆனால் இங்கே... ஏதாவது செய்தே ஆகவேண்டும் என்று நான் நினைத்தேன். ஏனென்றால் அந்தப் பெண்ணின் நேரத்தை எடுத்துக் கொள்வது சரியாக இருக்காது. ஆகவே அவளுக்கு நான் ஒரு கடிதம் எழுதினேன். மேலும் அந்த காலை வேளையில் நான் வேலைக்குச் சென்று விட்டேன். நான் ஒரு பொதுத்துறை நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். ஆகவே மிகவும் பதட்டத்துடன் அந்த கடிதத்தை பெட்டியில் போட்டுக் கொண்டிருந்தேன் அது ஒரு திங்கள் கிழமை காலை வேளையாக இருந்தது. அந்த பெட்டிக்குள் அதை போட்டு விட்டேன். மேலும் நாள் முழுவதும் நான் அதைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன். "இன்றிரவு, ஒ...ஒ. நான் அதை இன்றிரவு கேட்கப் போகிறேன். அவளுடைய அம்மா என்னை மேலே வரவழைத்து முழுவதுமாக என் மேல் கரியை பூசப் போகிறார்கள்" என்று நினைத்தேன். ஆகவே நான் மேலே சென்றேன். அந்த இரவு முழுவதும் அப்படியே தான் இருந்து கொண்டிருந்தேன். 33. ஆகவே புதன்கிழமை அவளை சந்தித்து அவளை அழைத்துக் கொண்டு சபைக்குச் செல்வதாக இருந்தேன். மேலும் புதன் கிழமை இரவு நான் சிறிது பதட்டமாக இருந்தேன், எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை."நான் அங்கு சென்று என்ன செய்யப் போகிறேன்" என்று நினைத்தேன். எனவே அம்மாவிடம் சென்று "ஹோப் ஏதும் அழைத்தாளா?" என்று கேட்டேன். "இல்லை" என்றார்கள். "ஏதாவது கடிதம் வந்ததா?" "இல்லை" "நல்லது பெட்டிக்குள் விழாமல் அது மேலே ஒரு வேளை தொங்கிக் கொண்டிருக்கலாம். "இங்கேதான் ஏதோ காரியம் நிகழந்து இருக்கிறது" என்று நான் நினைத்தேன். ஆகவே நான் மேலே சென்று வெளியிலிருந்து கொண்டு ஒலி எழுப்பினேன். அவள் வெளியில் வந்து, "உள்ளே வாருங்கள்" என்றாள். ஓ..ஓ அங்கே அவளுடைய அம்மா இருக்கும் இடத்திற்கு என்னை அழைத்துச் செல்வாள், நிச்சயமாக நான் அதை அடைந்து கொள்வேன்" என்று நினைத்தேன். ஆகவே "நீ தயாராக இருக்கிறாயா?" என்று கூறினேன். "நாம் சபைக்கு நடக்கலாம்" என்று அவள் கூறினாள். "ஓ எல்லாம்...எல்லாம் சரி சரியாக நடக்கும்" என்று நான் நினைத்தேன். நான் உள்ளே சென்றேன். மேலும் திருமதி புரும்பக் (Mrs.Brumbacks) ஹோப்- ன் தாயார் என்னை பார்த்து. "ஹலோ பில்" என்றார்கள். "நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்று கூறினேன். இருப்பினும் கொஞ்சம் பதட்டத்துடன் நான் இருந்து கொண்டிருந்தேன். எந்த நேரத்திலும் எந்த காரியம் வேண்டுமானாலும் நிகழலாம் என்று நினைத்தேன். அப்படிப்பட்ட மன அழுத்தமான நிலையில் நீங்கள் எப்படி உணருவீர்கள் என்று உங்களுக்கே தெரியும். 34. எனவே நாங்கள் வெளியில் வந்து சபைக்குச் சென்றோம். அந்த இரவில் நேர்மையான அந்த சகோதரர் டேவிஸ் [Bro.Davis] பிரசங்கித்ததைக்கூட என்னால் கேட்க முடியவில்லை. அவர் கொஞ்சம் பிரசங்கித்துவிட்டு சென்றுவிட்டார். அவர் என்ன கூறினார் என்று எனக்குத் தெரியவில்லை. ஏதோ நிகழப் போகிறது என்பதால் நான் பயந்து கொண்டிருந்தேன். மேலும் நான் அவளை கவனித்தேன். ''ஓ... அவள் அழகாக இருக்கிறாள் அல்லவா" ஆகவே நான்.... இந்த உலகம் எப்படி நிச்சயமாக இருப்பதைப் போல அவள் இவை எல்லாவற்றையும் என்னிடம் கூறப் போகிறாள், "பிறகு இரவு வீட்டில் தங்குங்கள்" என்று கூறப் போகிறாள் என்று நினைத்தேன். ஆகவே அவள் என்னிடம் என்ன சொல்லப் போகிறாள் என்பதற்காக நான் தயாராகிக் கொண்டேன். சபை முடிந்த பின்பு அந்த அழகான நிலவின் வெளிச்சத்தில் நாங்கள் திரும்பி நடக்க ஆரம்பித்தோம். தெருவில் பேசிக் கொண்டே வந்தோம். அடர்ந்த செடிகளின் வழியாக சந்திரன் ஒளிர்ந்து கொண்டிருந்தது, மேலே சென்று கொண்டிருந்தது. நான் அவளையே கவனித்துக் கொண்டிருந்தேன். "இந்த இரவு கடைசி இரவாக இருக்கப் போவதை வெறுத்தேன். அப்படித்தான் இருக்க போகிறது என்று யூகித்தேன். நடந்து மேலே சென்றேன். "இரவு உங்களுக்கு எப்படி இருந்தது?" என்று கூறினேன். "நன்றாக இருந்தது. நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்" என்று கூறினாள். "எனக்கு மயக்கம் வருவதற்கு முன், பெண்ணே சீக்கிரம் எதையாவது என்னிடம் கூறி விடு...வீட்டிற்குள் சென்று மூடிவிடாதே" என்று நினைத்தேன். நாங்கள் சிறிது நேரம் நடந்து சென்றோம், "ம்... நிச்சயமாகவே இரவு நன்றாக நன்றாக இருந்தது" என்று கூறினேன். "ஆம் அப்படித்தான் இருக்கிறது" என்று அவள் கூறினாள். "நல்லது ஏன்...சீக்கிரம் எதையாவது கூறு...." என்று நினைத்தேன். எப்படி இருந்தாலும் பெண்கள் இரகசியங்களை மூடியே வைத்திருப்பார்கள் என்று உங்களுக்கு தெரியும். 35. மேலும் நான் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தேன். "நல்லது, "அவள் வீட்டிற்கு அருகில் மிகவும் நெருங்கி வந்து கொண்டிருந்தாள்" "ம்..ம்...இந்த வாரம் ஏதாவது கடிதம் உனக்கு கிடைத்ததா?" என்று கூறினேன். "ம்....ம்..." என்று அவள் கூறினாள். அவ்வளவுதான். "என்னுடைய கடிதம் உனக்கு கிடைத்ததா?" என்றேன். "ம்....ம்...." என்றாள். ஓ......நான் உண்மையிலேயே அனலாக எரிந்து கொண்டிருந்தேன். "நல்லது...ம்......"அதை வாசித்துப் பார்த்தாயா?" என்று கூறினேன். "ம்......ம்..." என்று கூறினாள். நான், "அதைப் பற்றி என்ன நினைக்கிறாய்" என்று கூறினேன். "எல்லாம் சரியாக இருந்தது என்று கூறினாள். வ்யூ, நான்.... முழுவதையும் வாசித்து விட்டாயா... வாசித்தாயா நீ வாசித்தாயா? என்று கூறினேன். "ஆமாம் நான் முழுவதையும் வாசித்தேன்" என்று கூறினாள். "அதைப்பற்றி என்ன நினைக்கிறாய்?" என்றேன். அவள் "எல்லாம் சரிதான்" என்றாள். நல்லது, நாங்கள் திருமணம் செய்து கொண்டோம், எப்படி என்று எனக்குத் தெரியவில்லை; நாங்கள் உடனே மணம் புரிந்து கொண்டதைப் போல இருந்தது. அது அப்படித்தான் இருந்தது. 36. நல்லது, என்னுடைய அடுத்த சிரமம் அவளுடைய அம்மா அப்பாவிடம் கேட்க வேண்டியதாகும். நல்லது, அதை எப்படி அணுகுவது என்று எனக்கு தெரியும். சார்லி புரும்பெக் (Charlie Brumbeg] அவர்களை நான் ஒரு போதும் மறக்க மாட்டேன். எனக்கு தெரிந்தவரை இந்த மாலை வேளையில் அவர் இங்கு அமர்ந்து கொண்டிருக்கலாம். மேலும் அவளுடைய தாயார் மிகவும் பழைய காலத்து தோற்றம் கொண்டவராக மிகவும் சிறந்த பெண்மணியாக, ஒரு மேலான வகுப்பைச் சார்ந்தவர்களாக இருந்தார்கள். அப்படியே சார்லியும்கூட ஒரு நல்ல தாழ்மைான வயதான சகோதரராக இருந்தார். ஆகவே நான் அவரிடமே கேட்டுவிடுவது நல்லது என்று நினைத்தேன், மேலும் அவரே அவளிடம் பேசட்டும் என்று நினைத்தேன். நான் அந்தப் பெண்ணிடம் பேசுவதை விட இந்த மனிதருடன் பேசிவிடுவது நல்லது என்று நினைத்தேன். ஆகவே...ஒரு நாள் இரவு நான் புறப்பட்டு சென்றேன். "இன்னும் தந்தையிடம் நீங்கள் கேட்கவில்லையா?" என்று ஹோப் கூறினாள். "இல்லை" என்றேன். "நீங்கள் - நீங்கள் அதை செய்திருக்க வேண்டும்" என்றாள். "நான் அதை செய்திருக்க வேண்டும் ஆனால் நான் இன்னும் கேட்கவில்லை' என்றேன், அப்படியே இரவு நான் புறப்பட தயாரான போது பின்னர் சந்திப்போம் பில்லி" என்று அவர் கூறினார். நான் "ம் சார்லி" என்றேன். "ஒரு நிமிடம் வெளியே வர முடியுமா? நான் உன்னிடம் கொஞ்சம் பேசலாமா?" என்று அவர் கூறினார். தாழ்வாரத்திற்கு வெளியே நடந்தோம், மேலும் நான் கொஞ்சம் வியர்த்தபடி நடுங்கிக் கொண்டிருந்தேன். நான் "சார்லி" என்றேன். "நான்-நான் உங்களிடம் சில காரியங்களை கூற வேண்டும்"என்று கூறினேன். "ஓ,.. நீ அவளை பெற்றுக் கொள்ள முடியும் பில்லி, அவளிடம் நன்றாக நடந்து கொள்" என்று கூறினார். ஓ, இந்த நாளிலும் கூட நான் அவரை நேசிக்கிறேன். "சார்லி, நீங்கள் வாழ்ந்து கொண்டிருப்பதைப் போல நான் அவளுக்கு செய்ய முடியாது. நீங்கள் அவளுக்கு வாங்கிக் கொடுக்கும் ஆடைகளைப் போல நான் வாங்கிக் கொடுக்க முடியாது. ஆனால் நான் என் முழு இருதயத்துடன் அவளை நேசிப்பேன் என்று வாக்குக் கொடுக்கிறேன். என் கரங்களில் இருந்து இரத்தம் வரும் வரையிலும் நான் அவளுக்காக ஒரு வாழ்க்கையை வாழ்வேன். மேலும் அவளுக்கு எப்படி நான் உண்மையாக இருக்கவேண்டும் என்று என்று எனக்கு தெரியும்" என்று கூறினேன். அவர் ஜெர்மனி தேசத்தை சார்ந்தவராக இருந்தார். அவர் அவருடைய பெரிய கரங்களை என் மேல் போட்டுக் கொண்டு, "பில், நிறையப் பணம் வைத்திருக்கும் ஒருவர் அவளை மோசமாக நடத்துவதை விட, நீ அவளை அடைந்து கொண்டு அவளுக்கு நல்லவனாக இருப்பதையே நான் விரும்புகிறேன்" என்று கூறினார். "நன்றி சார்லி அவர்களே" என்று கூறினேன. 37. நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். வீட்டைப் பராமரிக்க தொடங்குவதற்கு எங்களிடம் எதுவும் எதுவும் இல்லை. மாதம் நான்கு டாலர்கள் வாடகை கொண்ட ஒரு சிறிய இடம் மட்டுமே எங்களுக்கு இருந்தது. ஆகவே நான் அந்த பழைய சிறிய இடத்திற்குள் சென்றேன், மடித்து வைத்துக் கொள்ளும் வகையில் யாரோ சிலர் எங்களுக்கு கொடுத்திருந்த பழைய மாடல் கட்டில் அங்கே இருந்தது. அந்த பழைய மடித்துக் கொள்ளும் மெத்தை உங்களுக்கு நினைவிருக்கிறதா? வைக்கோல் அடர்த்தியாக அதன் மேல் சுற்றப்பட்டிருக்கும். நாங்கள் பழைய பொருட்கள் விற்கும் கடையில் இருந்து மேஜையையும், நாற்காலிகளையும் தேடிக் கண்டுபிடித்து வாங்கி, நாங்களே அதற்கு வர்ணம் பூசி வைத்திருந்தோம். அதைப் போலவே அதற்கு வர்ணம் பூசியிருந்தேன். ஜானிஜோபர்ஸ் என்கிற கடையில் இருந்து மெழுகு துணி வகையிலான இரண்டு தரை விரிப்புகளை வாங்கினோம். உபயோகித்த பொருட்களை (Second Hand) விற்பனை செய்யும் அந்த ஜானிரோபர்ஸ் கடை நல்ல லாபம் பெற்று வந்தது. ஒன்றே கால் டாலர் மதிப்பு இருக்கும் என்று நினைக்கிறேன். ஆகவே அதை வாங்கினோம். மேலும், நான் மிஸ்டர் வெபர்ஸ் [Mr.Weber's] என்பவரிடம் சென்று ஒரு சமையல் அடுப்பை வாங்கினேன், அவர் குறைந்த விலையில் பொருட்களை விற்கும் வணிகராக இருந்தார். ஆகவே அதற்காக ஒரு டாலர் மற்றும் சிலவற்றை அவரிடம் கொடுத்தேன், மேலும் ஒரு டாலர் எழுபத்தி ஐந்து சென்ட் பணம் கொடுத்து தட்டுகளை வாங்கிக் கொண்டேன். ஒரு பொதுசேவை நிறுவனத்திடம் இருந்து ஐஸ் பெட்டி (Ice Box) ஒன்றை ஐம்பது சென்ட் மதிப்பிற்கு வாங்கிக் கொண்டேன். நாங்கள் குடும்பத்தை பராமரிப்பதற்காக சென்றோம். 38. ஆனால் நண்பர்களே, அது சற்று இந்த பூமியின் மேல் ஒரு சொர்க்கம் போல் இருந்தது. நாங்கள் ஒருவருக்கொருவர் என்று இருந்தோம். அந்த சமயத்தில் தான் நான் மனமாற்றம் அடைந்து ஒரு ஊழிக்காரனாக மாற்றப்பட்டு பிரசங்கித்துக் கொண்டிருந்தேன். நான் என் முழு இருதயத்துடன் தேவனை நேசித்தேன். நாங்கள் ஒருவருக்கொருவர் நேசித்தோம், கவனித்துக் கொண்டோம் அவ்வளவு தான். எனவே கவனியுங்கள், மகிழ்ச்சி என்பது நீங்கள் உங்களுக்கு சொந்தமாக எவ்வளவு உலகப் பொருட்களை வைத்திருக்கிறீர்கள் என்பதில் இல்லை, ஆனால் உங்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கிற பங்கில் எப்படி நீங்கள் திருப்தி கொண்டிருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே அது இருக்கிறது. அது சரியே. அதை நினைவு கூறுங்கள். நாங்கள் கொண்டிருந்தது அவ்வளவு தான். நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும் அன்பாகவும் இருந்து கொண்டிருந்தோம். நான் ஒரு சிறிய சபையைக் கொண்டிருந்தேன். அங்கே அவர்கள் அதை எனக்கு கட்டி தந்தனர்; அந்த சிறிய கூடாரமானது இன்றும் கூட ஒரு நினைவுச் சின்னமாக நின்று கொண்டிருக்கிறது. ஆகவே இந்த எளிமையான சுவிசேஷத்தைக் கேட்பதற்காக ஜனங்கள் பெரிய கூட்டமாக தூரத்திலிருந்தும் சமீபத்தில் இருந்தும் வந்தனர். ஆகவே நாங்கள் அற்புதமாக நடத்திக் கொண்டிருந்தோம். 39. ஒரு அன்பான சிறிய பையன் எங்கள் வீட்டில் பிறந்ததை நான் நினைத்து பார்க்கிறேன். அவனை நாங்கள் பில்லி பவுல் [Billy Paul] என்று அழைத்தோம். விரைவில் நான் அர்கன்ஸாஸ்-ல் [Arkansas] இருந்து செல்லும் போது என்னுடன் அவனை அழைத்து வர விரும்புகிறேன். இப்பொழுது அவனுக்கு பதினான்கு வயது ஆகிறது. சிறிது காலம் கழித்து பதினொரு மாதங்கள் சென்ற பின் சாரோன் ரோஜா என்கிற பெயரில் மற்றொரு - மற்றொரு அன்பான இனிமையான சிறியவள் வந்தாள். பில்லி பிறப்பதற்கு சற்று முன்பாக போதுமான பணத்தை சேமித்து வைத்து விட்டு, சிறிது காலம் ஓய்வு எடுக்க விரும்பினேன். மேலும் நாங்கள்....நான் மேலே உள்ள டோவாஜியாக் (Dowagiac]ல் உள்ள மிக்ஷிகன் (Michigan) என்ற இடத்திற்கு ஜான் ரயான் (John Ryan] என்ற பெயர் கொண்ட, வெண்மையான தாடியும், வெண்மையான தலைமயிரும் கொண்ட ஒரு வயதான மனிதருடன் ஒரு கூட்டத்திற்கு சென்றேன். நான் அங்கு சென்றேன். அந்த சாலையின் மேல் திரும்பி வந்து கொண்டிருந்தேன். நான் மிஷாவாகா (Mishawaka] வழியாக வந்த போது எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்த அந்த அடையாளத்தைப் பார்த்தேன். எல்லா இடங்களிலும் இருந்து வந்து கொண்டிருந்தனர். 'அந்த ஜனங்கள் எப்படிப்பட்ட ஜனங்களாக இருக்கிறார்கள்" என்று நினைத்துப் பார்த்தேன். நான் மேலே சென்றேன், அவர்களில் சிலர் போர்டு வாகனம் (T model Ford Car) மற்றும் சிலர் கெடிலாக்ஸ் (Cadillacs) கார்களிலும் வந்து கொண்டிருந்தனர். மேலும் நான் தங்குவதற்கு எந்த இடமும் இல்லை என்று அவர்கள் என்னிடம் கூறினர். நீங்களும் தான் என்று கூறிவிட்டு அங்கே ஒரு மாநாடு (Conference) நடந்து கொண்டிருக்கிறது என்று கூறினார்கள். பெந்தேகொஸ்தே மக்கள் அந்த மாநாட்டை நடத்திக் கொண்டிருந்தனர். பெந்தேகொஸ்தே அசெம்ப்ளி. (P.A.OF.J.C) அது ஒரு பெந்தேகொஸ்தே அசெம்ப்ளி (P.A.OF.J.C] என்கிற ஸ்தாபனம் அதற்கு அழைப்பு விடுத்திருந்தனர் என்று நம்புகிறேன். 40. பலவிதமான ஜனங்களை நான் பார்த்தேன். "அது ஒரு மார்க்க சம்பந்தமான ஒரு கூட்டமாக இருக்கிறது, ஆகவே நான் உள்ளே செல்வேன் என்று நினைத்தேன்". நான் ஒருபோதும் அப்படி ஒரு மிக அதிகமான கூச்சலை என் வாழ்க்கையில் கேட்டது இல்லை. எனவே ஒ....சபை ஒழுக்கம் என்பது அவர்களிடம் இல்லாமல் இருந்தது. அவர்கள் கூச்சலிட்டுக் கொண்டும், சத்தமிட்டுக் கொண்டும் தொடர்ந்து அப்படி செய்து கொண்டிருந்தனர். "என்ன உலகம் இது?" என்று நினைத்தேன். நான் சுற்றிலுமாக கவனித்தேன', அங்கே அவர்களுக்கு கூடாரம் இருந்தது. உங்களில் சிலருக்கு அந்த மனிதனுடைய பெயர் தெரிந்திருக்கும். அவருடைய பெயர் ராஃப் [Rev:Raugh] சங்கை ராஃப் என்பதாக இருந்தது. இங்கே யாராவது சங்கை ராஃப் அவர்களை அறிந்திருக்கிறீர்களா? ஆம் இங்கு சிலர் அவரைக் குறித்து அறிந்துள்ளனர். அது அவருடைய சபையாக இருந்தது. நல்லது, அவர்கள் வெறுமனே அவர்களுடைய கைகளை தட்டிக் கொண்டும், தொடர்ந்து நடனமாடிக் கொண்டும் இருந்தனர். சபையில் நடனமாடிக் கொண்டிருப்பது ஒரு பயங்கரமான காரியமாக இல்லையா? நல்லது, அது அவமானமாக இருக்கிறது" என்று கூறிக் கொண்டேன். எனவே உண்மையிலேயே போதுமான அளவு வெறுப்புடன் ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டிருந்தேன். இப்படிப்பட்ட சில காரியங்கள் இருந்த போதிலும் ஏதோ சிறிய ஒரு காரியம் என்னை பிடித்துக் கொண்டது. "சரி பரவாயில்லை" என்று நினைத்தேன். 41. நான் என்னுடைய பணத்தை எண்ணிக் கொண்டிருந்தேன். கடைசியாக இரண்டு டாலர் மற்றும் பதினைந்து சென்ட் என்னிடம் இருந்தது. நான் வெளியில் போய் இருந்து கொள்ளலாம் என்று நினைத்தேன். "நல்லது பயணிகள் தங்கும் இடத்தில் நான் தங்க முடியாது காரணம் என்னிடம் அதற்கு போதுமான பணம் இல்லை. வீட்டிற்கு எரிபொருள் [Gasoline] வாங்குவதற்கு மட்டுமே என்னிடம் பணம் இருந்தது. அதனால் அப்பால் சென்று வெளியில் தங்குவதற்காக போய் கொண்டிருந்தேன். எனவே நான் அந்த இரவில் வெளியே சென்று சோள வயலில் போய் தூங்கினேன். என்னிடம் மிகச்சிறந்த உடைகள் இல்லை என்பது எனக்குத் தெரியும். அடுத்த நாள் காலை அப்படியே நான் ஆராதனைக்குச் சென்றேன். அன்று, ஓ ஊழியக்காரர்கள் பிரசங்கித்துக் கொண்டிருந்ததை எப்படியாக நான் கவனித்தேன், அந்த இரவு "ஒவ்வொரு ஊழியக்காரர்களும் மேடைக்கு வாருங்கள்" என்று அழைத்தனர். நூற்று ஐம்பதுக்கும் அதிகமானஊழியக்காரர்கள் மேடைக்கு வந்தனர். அவர்களுக்கு ஒரு மாநாடு நடந்து கொண்டிருந்தது. சர்வதேச அளவிலான ஒரு மாநாடு. அவர்கள் அனைவரும் அந்த மேடையின் மேல் அமர்ந்திருந்தனர். "நீங்கள் அனைவரும் சாட்சி சொல்வதற்கான நேரம் நமக்கு இல்லை" என்று அவர் கூறினார். நான் மேலே சென்றேன். மேலும் அவர் "நீங்கள் யார்? மற்றும் நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? என்று மட்டும் சுருக்கமாக சொல்லுங்கள்" என்று அவர் கூறினார். எனவே என்னுடைய முறை வந்தது, நான் ஒரு சுவிஷேசகர், வில்லியம் பிரன்காம், ஜெபர்ஸன்வில்" என்று கூறிவிட்டு அமர்ந்து கொண்டேன். நல்லது, அந்தக் குழுவில் நான் மட்டுமே இளவயது ஊழியக்காரன் என்பதை அறிந்து கொண்டேன். பல தரப்பட்ட போதகர்களை அவர்கள் கொண்டு கொண்டு வந்திருந்தனர். மேலும் அந்த இரவு வயதான ஒரு கருப்பு இனத்தைச் சேர்ந்த மனிதரை செய்தி கொடுக்கும்படியாக தெரிந்து கொண்டனர். அவருடைய தலையில் கொஞ்சமே தலைமயிர் இருந்து கொண்டிருந்தது அவர் போதகர்கள் அணிந்து கொள்ளும் பட்டுத்துணி காலர் வைத்த பழைய கோட் ஒன்றை அணிந்திருந்தார். வயதான ஏழை மனிதராகிய அவர் இப்படியாக மேடைக்கு வந்தார். ஆகவே ஒ, நான் மிகவும் வருந்தினேன் அந்த வயதான ஏழை மனிதருக்கு உதவி செய்ய விரும்பினேன். அவர் வெளியே வந்தார். தென் பாகத்தில் அந்த மாநாட்டை அவர்கள் நடத்த முடியாமல் இருந்தது, காரணம் அவர்கள் வெள்ளை மற்றும் கருப்பினத்தவர்கள் இரண்டு சாராருமே அங்கே இருந்தனர். 42. ஆகவே அந்த வயதான மனிதர் அங்கு நின்று கொண்டிருந்தார், உங்களுக்கு தெரியும். மேலும் அந்த எல்லா போதகர்களும் இயேசு என்ன செய்தார் மற்றும் இதுபோன்று எதையாவது அன்று பேசிக் கொண்டிருந்தனர். ஆனால் அவர் ஒன்றும் பேசவில்லை....அவர் தன்னுடைய பாடப் பொருளை யோபுவின் புத்தகத்தில் இருந்து எடுத்து, "நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிற போது நீ எங்கேயிருந்தாய்?, அப்பொழுது விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப்பாடி தேவபுத்திரர் எல்லாரும் கெம்பீரித்தார்களே?" நல்லது. அங்கே இருந்த அந்த ஊழியக்காரர்கள் பூமிக்குரிய காரியங்களை சபைக்குள் கொண்டுவந்து கொண்டிருந்தனர். அவர் பரலோகங்களுக்கு அப்பால் சென்று திரும்பவுமாக கீழே வந்து. உலகம் உருவாக்கப்படுவதற்கு பத்து இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பே மீண்டுமாக அடிவானத்தில் திரும்பி வந்தார். வானவில் அவருடன் இருந்தது. என்று கூறினார். அந்த நேரத்தில் அவர் கால்களை ஒன்றாக சேர்த்து கீழே உதைத்துக் கொண்டு சத்தமிட்டு மேலே குதித்துக் கொண்டு "தேவனுக்கு மகிமை. உங்களுக்கு போதிப்பதற்கு எனக்கு போதுமான வாய்ப்பு இங்கே இல்லை" என்று கூறினார். "நல்லது அது ஒரு முதியவரை அப்படி நடந்து கொள்ளச் செய்யுமானால் அதில் இருந்து எனக்கு கொஞ்சம் கிடைக்கும் என்றால் எனக்கு அது அப்படி செய்யாதா?" "அதில் எனக்குக் கொஞ்சம் வேண்டும், எனக்கு என்ன தேவையென்றால் அதுவே எனக்கு தேவை. ஆகவே அந்த இரவில் சோள வயலுக்கு சென்று, நான் ஜெபம் செய்ய துவங்கினேன். "தேவனே அதில் நான் கொஞ்சம் எனக்கு பெற்றுக் கொள்ளட்டும்" என்று அப்படியே"அந்த ஜனங்களில் இருந்து கொண்டிருக்கும் ஆவியை எனக்கு தாரும்" என்று கூறினேன். மேலும் அங்கே சோள வயல்வெளியில் ஒரு வழியாக அந்த இரவில் ஜெபித்துக் கொண்டிருந்தேன். 43. நான் வைத்திருந்த சில கோடை காலத்தில் போட்டுக் கொள்ளும் கால் சட்டைகளை எடுத்துக் கொண்டேன். மற்ற எல்லாம் அங்கே அந்த சோள வயலில் இருந்தது. ஆகவே நான் அவைகளை என்னுடைய இருக்கையில் வைத்து விட்டு, அந்த இரவில் என்னுடைய காரில் இருந்த இரண்டு இருக்கைகளை வெளியே எடுத்து அவைகளை ஒன்றாக என்னுடைய கால் சட்டைகள் மீது அழுத்தியிருக்கும்படி வைத்தேன். மேலும் நான் என்னுடைய சிறிய கால்சட்டையை வைத்திருந்தேன். ஒருவருக்கும் என்னை தெரியாது, ஆகவே மேல்சட்டை, சிறிய பனியன் மற்றும் கால் சட்டைகளை அங்கே அவைகளின் மீது வைத்தேன். அடுத்த நாள் காலை நான் எழுந்த எழுந்த போது அவைகள் எல்லாமே பளிச்சென்று இருந்தது. காலை உணவிற்கு பிறகு கூட்டம் பத்து மணிக்கு துவங்கியது. அவர்களுடன் காலை உணவை உண்பதற்கு நான் போகவில்லை, ஏனென்றால் கொடுப்பதற்கு என்னிடம் பணம் இல்லை. ஆகவே நான் அவர்களுடன் சாப்பிடவில்லை. ஆனால் அவர்கள் என்னை ஒவ்வொரு காரியத்திலும் என்னை வரவேற்றனர். ஒரு சிறிய நண்பனைத் தவிர அங்கே ஒருவரையும் எனக்கு தெரியாது. அவனுடைய பெயரும் எனக்கு மறந்து விட்டது. சிறிய சுருள்முடியைக் கொண்ட அவன் வயலின் வாசித்தான். 44. ஆகவே அடுத்த நாள் காலையில் நான் சென்று கீழே அமர்ந்தேன், மேலும் சிறிது நேரம் கழித்து, மற்றொரு மனிதர் உள்ளே வந்து கீழே உட்காருவதை கவனித்தேன், ஒரு கருப்பின மனிதர் என் பக்கத்தில் வந்து அமர்ந்தார். மேலும் ஒரு கூட்ட ஜனங்கள் அங்கே அமர்ந்திருந்தனர். ஆகவே நான் அங்கேயே உட்கார்ந்து கொண்டிருந்தேன். "நாங்கள் ஆராதனையை துவங்கப் போகிறோம்" என்று அவர் கூறினார். மேலும் அவர்கள் பேசிக்கொண்டும், அவர்கள் வைத்திருந்த அவர்களுடைய இலக்கியம் சம்பந்தப்பட்டவைகளை விற்பனை செய்து கொண்டும் இருந்தனர். மேலும் "கடந்த இரவு ஜெபர்சன்வில்-ல் இருந்து வந்த பிரன்காம் என்ற ஒரு ஊழியக்காரர் மேடையில் இருந்தார்". "மேடையின் மீது இருந்த அந்த மனிதர் ஒரு வாலிபராக இருந்தார்" "அவர் மேலே வந்து காலை செய்தியை கொடுக்க வேண்டுமாக நாங்கள் விரும்புகிறோம்" என்று கூறினார். தேவனுடைய கிருபை, நான் ஒரு போதும் ஒரு ஒலிபெருக்கியை பார்த்தது கூட பார்த்ததில்லை (Microphone) அவர்கள் அங்கே ஒரு ஒலிபெருக்கியை (Mic) வைத்திருந்தனர். "நல்லது, இந்த கால்சட்டை மற்றும் பனியனோடு என்னால் முடியாது" என்று நினைத்தேன். உண்மையில் நான் கொஞ்சம் இப்படியாக கீழே பதுங்கினேன். "ஜெபர்சன்வில்-ல் இருந்து வந்த வில்லியம் பிரன்காம் என்பவர் எங்கே இருக்கிறார்?" என்று யாருக்காவது தெரியுமா? என்று அறிவிப்பு செய்தார். மேலும் "அவர் இங்கே மேலே வந்து செய்தி கொடுக்க கொடுக்க வேண்டுமாய் நாங்கள் விரும்புகிறோம்" என்று கூறினார். அங்கே ஏறக்குறைய ஜனங்கள் ஐந்நூறு பேர் அமர்ந்திருந்தனர். "அவர்கள் முன்னிலையில் என்னால் முடியாது. வேண்டாம் ஐயா, நான் மிகவும் நாட்டுப்புறத்தை சேர்ந்தவன்" என்று கூறிவிட்டு கீழே அமர்ந்து கொண்டேன். ஆகவே அவர் "யாராவது வெளியில் இருக்கிறீர்களா, நாங்கள் வில்லியம் பிரன்காம் என்பவரைகூப்பிட்டுக் கொண்டிருக்கின்றோம்" என்று அதையே இரண்டு அல்லது மூன்று முறை அறிவிப்பு செய்து விட்டார். "கடந்த இரவு என்ன ஜெபம் செய்து கொண்டிருந்தாய்?" நீ அந்த ஜனங்களுடன் பழக விரும்பினால் எழுந்து நில்" என்று ஏதோ ஒன்று என்னிடம் கூறியதைப் போல நான் நினைத்தேன். "கர்த்தாவே வெறுமனே அந்த கால்சட்டை மற்றும் பனியனுடன் நான் அப்படி செய்ய முடியாது" "வேண்டாம் ...அப்படியே நான் அங்கு உட்கார்ந்து விட்டேன். மேலும் அவர் அதை மீண்டுமாக அறிவித்த போது இந்த கருப்பின மனிதர் என்னை உற்று பார்த்து விட்டு "உங்களுக்கு அந்த மனிதனை தெரியுமா? என்று கேட்டார். நான் அந்த இடத்தில் ஒன்று பொய்யைக் கூற வேண்டும். அல்லது - அல்லது அல்லது அவரிடம் எதையாவது சொல்லித்தான் ஆக வேண்டும். "கவனியுங்கள் கூட்டாளியே இப்பொழுது இதை உங்களுக்குள் மட்டுமே வைத்துக் கொள்ளுங்கள்" "நான் தான் அவன். ஆனால்... பாருங்கள்?" என்றேன். "நல்லது எழுந்திருங்கள் வெள்ளைக்கார மனிதரே, அப்படியே எழுந்திருங்கள்" என்று கூறினார். "வேண்டாம் "நான் போட்டிருக்கும் இந்த கால்சட்டையை இங்கே பாருங்கள்" என்றேன். "நீங்கள் என்ன விதமான உடை அணிந்திருக்கிறீர்கள் என்று அந்த ஜனங்கள் பார்க்க மாட்டார்கள்" என்று அவர் கூறினார். அவர்கள் உங்களுடைய பேச்சைக் கேட்பதற்கு மட்டுமே விரும்புகிறார்கள்" என்று கூறினார். "பாருங்கள், நான் எழுந்திருக்க முடியாது" "நான் அதை செய்ய முடியாது, நீங்கள் அமைதியாக இருங்கள்" என்று கூறினேன். "யாருக்காவது அவர் எங்கே இருக்கிறார் என்று தெரிந்தால்....." என்று இன்னுமாக கூறிக்கொண்டேயிருந்தார். "அவர் இங்கே இருக்கிறார். அவர் இங்கே இருக்கிறார்" வ்யூ ...ம்..அவர் கூறிவிட்டார். இங்கே தான் இருக்கிறார்" என்று அவர் "நான் நினைத்தேன், "ஓ என்னுடைய இருதயம் சற்று உணர்ச்சி வசப்பட்டதைப் போல் என்னால் உணர முடிந்தது, முழங்கால்கள் மிகவும் பலவீனமாகி, மேலும் என் தோள்கள் கீழே சரிவது போல இருந்தது. ஏதோ ஒன்று என்னை மேலே தூக்கிச் செல்வதைப் போல இருந்தது. கால்சட்டை மற்றும் பனியன் அணிந்து கொண்டிருப்பதை உணர்ந்தவாறு நான் மேலே சென்றேன். நான் அங்கே சென்று, "ஜனங்களே எனக்கு அதிகமாக பேசத் தெரியாது..." என்று கூறினேன். உண்மையில் அந்த போதகர்களுக்கு முன்பு யாரால் பிரசங்கிக்க முடியும். ஒ..நான். "நான் இயேசுவை நேசிக்கிறேன் என்று மட்டுமே சொல்ல விரும்புகிறேன், மேலும் ஆ... மேலும் ஆ... என்று கூறினேன். அது எப்படி இருந்திருக்கும் என்று உங்களுக்கு தெரியும் நான் அங்கிருந்து நடக்க ஆரம்பித்தேன், "நல்லது சகோதரர் பிரன்காம் அவர்களே எங்களுக்காக சிறிது நேரம் பேசுங்கள்" என்று அவர் கூறினார். 45. நான் திரும்பி பார்த்துவிட்டு "நான் - நான் - சற்று எனக்கு என்ன சொல்வது" என்று தெரியவில்லை என்று கூறினேன். ஒரு பாடப் பொருள் எனக்கு நினைவுக்கு வந்தது,"அதன்பிறகு அவன் அழுதான்" அது அந்த செல்வந்தனை குறித்த காரியமாக இருந்தது, அவன் நரகத்தில் இருந்து தன் கண்களை ஏறெடுத்து மேலே பார்த்தான். ஆகவே நான் அந்த பாடப் பொருளை எடுத்துக் கொண்டேன். "அதன் பிறகு அவன் அழுதான்" இப்படியாக நான் பேசிக் கொண்டிருந்தேன், பிறகு முதலாவது காரியம் என்னவென்று உங்களுக்கு தெரியமா? ஏதோ ஒன்று என்னை தாக்கியது. நான் சிறிது நேரம் என்னையே இந்த உலகத்திலிருந்து மறந்து விட்டேன். மேலும் ஒவ்வொருவரும் கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர். அந்த ஆராதனை முடிந்த போது நான் வெளியில் சென்றேன், மேலும் டெக்ஸாஸ் (Texas) ல் இருந்து வந்திருந்த பெரிய உருவம் கொண்ட நபர் மாடு மேய்ப்பவர்கள் அணியும் காலணிகள் மற்றும் பெரிய தொப்பி ஒன்றை அணிந்தவராக "நான் ஒரு பிரசங்கி" என்று கூறினார். "நல்லது, சகோதரனே என்னுடைய கால்சட்டை மிகவும் மோசமாக இல்லை. அவரிடம் மாடு மேய்ப்பவரின் காலணிகள் மற்றும் பெரிய தொப்பி இவைகள் இருந்தது. அவர் எப்படி ஒரு போதகராக இருக்கிறார்"? என்று நினைத்தேன். மேலும் அவர், "நீங்கள் ஒரு சுவிஷேகர் என்று கூறியதை நான் கேட்டேன், கீழே டெக்சாஸ் நகரத்தில் நடக்கும் இரண்டு வார எழுப்புதல் கூட்டங்களுக்கு உங்கள் பதிவு செய்ய விரும்புகிறேன்" என்று கூறினார். நான் அவருடைய பெயரை குறித்துக் கொண்டேன்.' ஓ கர்த்தாவே. நீர் மகத்தான காரியங்களை எனக்காக செய்து கொண்டு இருக்கிறீர்" என்று கூறினேன். நான் எல்லாவற்றையும் குறித்துக் கொண்டேன். 46.கால்சட்டை அணிந்து கொண்டு கோல்ப்(Golf) விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்த ஒரு கூட்டாளி ஒருவர் மேலே நடந்து வந்து, "நான் ப்ளோரிடா-வில் [Florida) இருந்து வந்திருக்கிறேன். இரண்டு வாரங்கள் முழுவதும் நீங்கள் அங்கு இருக்க விரும்புகிறேன்" என்று கூறினார். நான், அவர்கள் வெறும் சாதாரண ஜனங்களாக இருந்ததை பார்த்தேன். எனவே முதல் காரியம் இந்தியர்களுக்கான பகுதியிலிருந்து வந்திருந்த ஒரு பெண் மேலே வந்து, நான் அங்கே அவர்கள் இடத்திற்கு வர வேண்டும் என்று விரும்பினாள். நல்லது எனக்கு ஒரு வருடத்திற்குப் போதுமான அழைப்புகள் இருந்தன, நான் அந்த பழைய போர்டு காருக்குள் அப்படியே குதித்தேன். அது பாதி நகர்ந்து காருடன் நான் சாலைக்கு கீழே சென்று விட்டேன். நான் வீட்டிற்குள் விரைந்து சென்றேன், மனைவியை சந்தித்து அன்பே நான் உன்னிடம் சில காரியங்களை கூற வேண்டும். நான் மிக சிறந்த ஜனங்களை சந்தித்தேன்" மேலும் அந்த ஜனங்கள் வெறுமனே கூச்சலிட்டுக் கொண்டும், மேலும் கீழும் குதித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் தங்கள் மார்க்கத்தைக் குறித்து வெட்கப்படவில்லை. நான் பார்த்ததிலேயே அது மிகச்சிறப்பாக இருந்தது என்று கூறினேன். "அவர்கள் எங்கே இருக்கிறார்கள்?" என்று அவள் கேட்டாள் "இங்கே கவனி, நான் பிரசங்கிப்பதற்கான முழு காரியத்தையும் இங்கே தான் பெற்றுக் கொண்டேன் என்னால் பிரசங்கிக்க முடியும் அதை மேலும் மேலும் என்னால் பிரசங்கித்துக் கொண்டே இருக்க முடியும். மேலும் அவர்கள் என்னை ஏற்றுக் கொண்டனர் உனக்கு தெரியுமா?" என்று கூறினேன். "அப்படியா?" என்றாள் "கவனி, நான் என்னுடைய வேலையை விட்டுவிட்டு இப்பொழுதே போகப் போகிறேன்" என்றேன். "நல்லது, நம்மிடம் எந்த பணமும் இல்லையே" என்றாள். "எவ்வளவு பணம் இருக்கிறது? என்று கேட்டேன்." "போர்டு வாகனத்திற்கு (Ford car) செலுத்த வேண்டிய பன்னிரெண்டு டாலர்கள் மட்டுமே நம்மிடம் இருக்கிறது" என்று கூறினாள். "நீங்கள் போகும் பொழுது எந்த ஒன்றையும் எடுத்துச் செல்ல வேண்டாம்", எந்த ஒரு குறிப்பையும் எடுத்துச் செல்ல வேண்டாம். அல்லது நீங்கள் இரண்டு வஸ்திரம் வைத்திருந்தால் அதில் ஒன்றை உன் சகோதரனுக்கு கொடு'' மேலும் அவர் 'நான் நான் - நான் உன்னுடனே இருப்பேன்" என்று வேதாகமத்தில் அவர் கூறியிருக்கிறார். "அதுதான் வழியாக இருக்கிறது" என்றேன். எனவே "நீ என்னுடன் வருவாயா"? என்று கூறினேன். அவளுடைய இருதயம் ஆசீர்வதிக்கப்படுவதாக. "ஆம் நான் உங்களுடன மட்டுமே இருப்பேன்" என்று அவள் கூறினாள். எனவே நான் என்னுடைய அம்மாவிடம் சென்று கூறினேன்."அன்பே எல்லாம் சரிதான், அதை நீ உணர்ந்து கொண்டால் நல்லது" என்று அம்மா கூறினார்கள். 47. நல்லது, நான் சென்று அவளுடைய அம்மாவிடம் சொல்ல வேண்டும். அப்படி இல்லையென்றால் அது நன்றாக இருக்காது. "வில்லியம்" என்று அழைத்தார்கள், மேலும் அவர்கள் "அவள் உன்னுடைய மனைவியாக இருக்கிறாள். நீ விரும்பினால் அவளை கூட்டிச் செல்லலாம்". ஆனால் என்னுடைய மகள் போதை மருந்துகள் மற்றும் அந்த குப்பைக் கூட்டத்தின் மத்தியில் இருப்பதை நான் விரும்பவில்லை" என்று கூறினார்கள். ..ம்... குப்பை? நண்பர்களே, அவர்கள் எதை குப்பை என்று நினைத்தார்களோ அது எனக்கு மிகவும் சிறப்பானதாக இருப்பதை நான் கண்டுபிடித்தேன். அது சரியே. மேலும் இதை நான் மரியாதையுடன் கூறுகிறேன். மேலும் அவர்கள்"அங்கே இதைப் போன்று கூச்சலிட்டுக்கொண்டும், தொடர்ந்து அதையே செய்து கொண்டும் இருக்கிறார்கள். எனவே "நீ ஏன் அவர்களிடம் சென்று அவர்களுக்கு ஒரு மேய்ப்பனாக இருக்கக் கூடாது? அதன்பிறகு ஒருநாள் அவர்கள் உனக்கு ஒரு தங்கும் இடத்தையும் மற்றவைகளையும் கட்டித் தருவார்கள்" என்று கூறினார்கள். அது அப்படி இல்லை... ஓ..., நான் எனவே அப்படியே ஹோப் (Hope] அழ ஆரம்பித்து விட்டாள். நான் "சரி பரவாயிலலை" என்றேன். "நான் உங்களுடன் தான் செல்வேன்" என்று அவள் கூறினாள். ஆனால் எப்படி இருப்பினும் நான் அதை விரும்பவில்லை... அவர்கள் கூறியது அவளை எவ்வளவாக காயப்படுத்தி விட்டது அப்படியே நான் மேலே சென்று விட்டேன். நண்பனே, அந்த சிறிய பெண் அப்படிப்பட்ட குப்பையுடன் இருப்பது தான் அவளுக்கு நன்றாக இருந்தது. அதற்கு பின்பு கொஞ்ச நாள் கழித்து நான் அவளை அடக்கம் செய்தேன். சரியாக துயரமானது அங்கே அமர்ந்து கொண்டிருந்தது. 48. இன்னும் சில நிமிடங்களில் விரைவாக பதினைந்து நிமிடங்களில் நான் சென்று விடுவேன். அங்கே தான் துக்கம் என்னை தாக்கியது. இப்பொழுது என்னுடைய தவறுகள் என்னவாக இருந்தாலும் அது உங்களுக்கு ஆதாயமாக இருக்கட்டும். எதற்காக நான் கஷ்டப்பட வேண்டியிருந்ததோ அதன் மூலம் நீங்கள் நீங்கள் செழிப்பாக இருப்பீர்கள். சில நேரங்களில் இங்கே மேடையின் மீது நின்று கொண்டிருக்கும் போது நான் சிரிப்பதை நீங்கள் பார்த்தீருப்பீர்கள், அங்கே அதற்கு கீழே என்ன இருந்து கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கு தெரியாது. அதற்கு ஒரு விலை கொடுக்கப்பட்டிருக்கிறது என்பது தேவனை தவிர வேறு யாருக்கும் தெரியாது. திடீரென என்னுடைய மனைவி நோய்வாய்பட்டாள். முதலாவது காரியம் நான் என்னுடைய தந்தையை இழந்து விட்டிருந்தேன். அவரைக் காண்பதற்கு வீட்டுக்கு ஓடினேன். அப்படியே அவரை என் கரங்களில் தூக்கிக் கொண்டேன். அவர் என்னை பார்த்து புன்னகை செய்தார். ஒரு மருத்துவர் அவருக்கு ஒரு மருந்தை கொடுத்திருந்தார். அது அவரை கொன்று போட்டது. அந்த மருந்தின் அளவை அவருடைய இதயம் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அது அவரைக் கொன்று போட்டது. நிச்சயமாகவே அங்கே அதைக் குறித்து நான் எதுவும் கூறவில்லை. மருத்துவரின் உதவியாளர் மருத்துவரின் தவறுகளை பலமுறை மூடி மறைத்து விட்டார். மருத்துவர்களுக்கு எதிராக எனக்கு ஒன்றுமில்லை அதனால் அதைப்பற்றி நான் எதுவும் கூறவில்லை. 49. சிறிது காலத்திற்கு முன்பு இங்கே கலிபோர்னியாவில் [California) மரித்துப் போன இந்த குழந்தைக்காக யாரோ ஒரு பெண் தேவன் பேரில் தன்னுடைய நம்பிக்கையை வைத்தாள், ஒவ்வொரு செய்திதாள்களும் மாத இதழ்களும் அதை நாடு முழுவதிலும் வெளியிட்டிருந்தனர். ஆனால் அதே நேரத்தில் அங்கே அந்த விடுதலையின் பேரில் ஒருவர் கூட போதுமான விசுவாசம் கொண்டிராமல் ஒவ்வொருவரும் அந்த நாளிதழ்களையும், மாத இதழ்களையும் பரிகாசம் செய்தனர். மேலும் தேவன் ஆயிரக்கணக் கானவர்களை சுகப்படுத்தினார். அவற்றை பத்திரிக்கைகளில் பிரசுரிக்க நீங்கள் அவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் அல்லது அது போன்ற ஏதாவது கொடுக்க வேண்டும். ஆனால் இங்கே கவனியுங்கள், நான் உங்களுக்கு சில காரியங்களை கூறுவேனாக. "வாருங்கள் நாம் வழக்காடுவோம்" என்று வேதாகமம் சொல்கிறது. அது சரிதானே? கவனியுங்கள். அதே நேரம் அந்த படம் வெளியிடப்பட்டு நாடு முழுவதும் அந்த தெய்வீக சுகமளித்தல் ஜனங்களுக்கு கூறப்பட்டுக் கொண்டிருந்த போதிலும் மேலும் மருத்துவர்களால் கைவிடப்பட்ட ஆயிரக்கணக்கான காரியங்களில் அந்த தெய்வீக சுகமளித்தலின் பேரில் ஜனங்கள் நம்பிக்கை வைக்கவில்லை அங்கே அதைக் குறித்து சொல்வதற்கு ஒன்றுமில்லை. அது சரி தானே? கவனியுங்கள். வாருங்கள் வழக்காடுவோம். ஆண் வாத்து குழம்பின் சுவைதான் பெண் வாத்திலும் இருக்கிறது. அதை நான் உங்களுக்கு கூறட்டும். ஒருவர் தெய்வீக சுகத்தை பெற்றுக் கொள்வதற்கு போதிய விசுவாசம் கொண்டிராமல் இழக்கப்பட்டு போனால் மூடத்தனம் என்று முத்திரை குத்தி விடுவார்கள். பிறகு மருத்துவர் ஒரு காரியத்தில் ஒருவரை இழந்து விடுவார். என்றால் அதையும் மூடத்தனம் என்று முத்திரை குத்தி குத்தி விடுவார்கள். ஆண் வாத்து குழம்பில் இருக்கும் சுவைதான் பெண் வாத்து குழம்பிலும் இருக்கிறது அது சரியே? ஆனால் நண்பர்களே, என்னதான் மருத்துவ விஞ்ஞானமும், ஊழியக்காரர்களும் அறிந்திருக்கிறபடி ஜனங்களுடைய நன்மைக் காகவும், தேவனுடைய மகிமைக்காகவும் நாம் எல்லோரும் ஒன்றாக இணைந்து கிரியை செய்து கொண்டிருக்கிறோம். அதை தான் நாம் செய்ய வேண்டும். 50. ஆனால் எப்படி இருந்த போதிலும் மருத்துவர் தவறாக அளவுக்கு அதிகமாக மருந்தை கொடுத்ததால் அது என் தந்தையை கொன்று போட்டது. பிறகு என்னுடைய சகோதரன் ஒரு கார் மோதி விபத்தில் கழுத்து நரம்பு உடைந்த நிலையில் என்னுடைய மற்றொரு சகோதரனுடைய கரங்களில் மரித்துப் போய்விட்டார். என்னுடைய மைத்துனியும் மரித்துப் போனாள். மேலும் என்னுடைய மனைவியும் நோய்வாய்ப்பட்டு இருந்தாள். ஓ, அந்த 1937-ம் வருடம் வெள்ளம் வந்து அங்கே ஒரே துயரமாக இருந்தது. ஒரு போதும் அதை நான் மறக்க முடியாது என்னுடைய மனைவி மரணத்தருவாயில் படுத்துக் கொண்டிருந்தாள். அவளுக்காக நான் ஜெபித்துக் கொண்டிருந்தேன். மேலும் எனக்கு தெரிந்த எல்லாவற்றையும் செய்து கொண்டிருந்தேன். ஆகவே எல்லா நேரத்திலும் இப்படி கவனித்துக் கொண்டு ஜெபம் செய்து கொண்டிருந்தேன். சபைக்குச் சென்று "அவள் மரித்துக் கொண்டிருக்கிறாள்" என்று கூறினேன். "இல்லை, அதுதான்..." "நிச்சயமாக அவள் எல்லோரையும் போல மரணத்தை நோக்கி சென்று கொண்டிருந்தாள்" என்று கூறினேன். என்னுடைய இரண்டு குழந்தைகள், அவர்கள் இருவருமே சுகவீனமாக இருந்தனர். நாடு முழுவதும் வெள்ளம் வேகமாக அடித்து சென்று கொண்டு இருந்தது. ஆகவே அவர்கள் என் மனைவியை வெளியே எடுத்துச் சென்று தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் நான் ரோந்து பணியில் இருந்து கொண்டு இருந்தேன். தெருக்களில் மேடு பள்ளமான இடங்களில் சென்று நான் ஜனங்களை வெளியில் கொண்டு வர முயற்சித்துக் கொண்டிருந்தேன். 51. அந்த பயங்கரமான இரவை என்னால் ஒரு போதும் மறக்கவே முடியாது. அதை நினைக்கின்ற பொழுது, அது ஒரு ஆபத்தான நேரமாக இருந்தது. நான் சரக்கு வாகனம் ஒன்றை வைத்திருந்தேன், சிறிய ரோந்து படகு வாகனம் ஒன்றையும் எடுத்துக் கொண்டேன். அப்படியே சாலையில் மேற்பகுதிக்கு வந்து கொண்டிருந்தேன். யாரோ சிலர் "செஸ்நெட் (Chesnet Street) தெருவுக்கு மேலே உள்ள அணைக்கட்டின் சுவர்கள் உடைந்துவிடும் நிலையில் இருக்கிறது" என்று கூறினார்கள். மேலும் "அங்கே ஒரு பெண்மணி தன்னை காப்பாற்றும்படியாக கூச்சலிட்டுக் கொண்டிருந்தாள், ஒருவரும் அவளை கொண்டு வர முடியவில்லை. நான் ஆற்றிற்கு மேல்பகுதியில் இருந்தேன், படகு மூலம் சென்றால் அதை செய்ய முடியும் என்று நினைத்து அப்படியே அந்த படகை எடுத்து தண்ணீர் மேல் அமர்த்தி புறப்பட்டேன். எனவே நான் அங்கே நோக்கி பார்த்தேன், அந்த தாயானவளின் குரலைக் கேட்டேன். அப்பொழுது சுமார் இரவு பதினொரு மணி இருக்கும், அங்கே "என்னைக் காப்பாற்றுங்கள்... என்னை காப்பாற்றுங்கள்.." என்று தாழ்வாரத்தில் நின்று கூச்சலிட்டுக் கொண்டிருந்தாள். நான் அந்த படகை எடுத்துக் கொண்டு கடப்பதற்கு முயற்சித்துக கொண்டிருந்தேன். கீழே இறங்கி மறுபக்கம் வெளியில் வந்தேன், தெரு முழுவதும் தண்ணீர் அடித்துச் சென்று கொண்டிருந்தது. மறுபடியுமாக திரும்பி வர முயற்சி செய்தேன், கடைசியாக அந்த தாழ்வார கம்பத்தில் மோதினேன். அந்த தாயானவள் மயக்கமடைந்து விட்டாள். நான் அவளை மேலே தூக்கி எடுத்து படகிற்குள் கிடத்திவிட்டு நான்கு அல்லது ஐந்து குழந்தைகளையும் உள்ளே கொண்டு வந்து சேர்த்துவிட்டு, கடைசியாக திரும்பி மீண்டும் கரைக்கு சென்று விட்டேன். மேலும் நான் கரைக்குச் சென்ற சிறிது நேரதத்தில் யாரோ ஒருவர், "என் குழந்தை...என் குழந்தை" என்று யாரோ சொல்லிக்கொண்டு இருந்தார்கள். சரி, அந்தப் பெண் ஒரு சிறிய குழந்தையை அங்கேயே விட்டு விட்டு வந்து விட்டாள் போலும் என்று நினைத்தேன், மீண்டுமாக நான் அங்கே சென்று அந்த அந்த வீட்டிற்குள் ஓடி அந்த சிறிய குழந்தையை தேடிக் கண்டுபிடித்தேன், அந்த சிறுமிக்கு சுமார் இரண்டு அல்லது மூன்று வயது இருக்கும் எதைப்பற்றியோ அவள் பேசிக் கொண்டிருந்தாள். அது என்னவென்று எனக்குத் தெரியவில்லை. 52. நான் அங்கே இருந்தேன், அந்த அணையின் சுவர் முழுவதுமாக உடைந்து, கட்டிடத்திற்கு அப்பால் செஸ்ட் நெட் (Chestnut Street) தெருவில் மேல்பகுதி வரை தண்ணீர் சென்று கொண்டிருந்தது. ஆகவே நான் என்னுடைய படகிற்குள் குதித்து தண்ணீருக்குள் கையை நீட்டி அந்த கயிற்றை பிடித்துக் கொள்ள வேண்டியிருந்தது.. பிறகு மோட்டார் இன்ஜின் (Engine) இன்ஜின் (Engine) அருகில் சென்றேன் அதை என்னால் இயங்க வைக்க முடியவில்லை. தண்ணீரின் மேல் நாங்கள் மிதந்து கொண்டிருந்தோம். சந்தை தெரு (Market Street) வழியாக வெளியே வந்தேன். பெரிய அலைகள் பக்கவாடடில் மோதிக் கொண்டிருந்தது. எந்த நிமிடத்திலும் நான் அடியில் சென்று விடக்கூடும் என்று நினைத்தேன். அங்கே அந்த படகிலேயே கீழே முழங்கால் படியிட்டேன்."எனக்குத் தெரியும் தேவனே, நான் உமக்கு கீழ்ப்படியவில்லை என்று எனக்குத் தெரியும்." என்று கூறினேன். மேலும் நண்பர்களே நான் நம்புகிறேன்; அந்த ஜனங்கள் என்னை உள்ளே அழைத்தபோது திரும்பவும் நான் அங்கே சென்றிருந்தால் சுகமளிக்கும் வரமானது சரியாக அப்பொழுதே அங்கே வெளிப்படுத்தப்பட்டிருக்கும். அது தேவனுடைய திட்டமாக இருந்தது. ஆனால் அவர் என்னிடம் என்ன செய்யக் கூறினாரோ அதில் நடப்பதற்கு தவறிவிட்டேன். தேவன் என்னிடம் என்ன செய்ய கூறினாரோ அதற்குப் பதிலாக அந்த ஜனங்கள் என்ன கூறினார்களோ அதற்கு நான் செவி கொடுத்து விட்டேன். ஒரு போதும் நீங்கள் அப்படி செய்து விடாதீர்கள். தேவன் உங்களிடம் என்ன கூறினாரோ அதை பின்பற்றி அதேயே செய்யுங்கள். அதன்பிறகு துன்பங்கள் தொடர்ந்தது. 53. ஆகவே நான் ஜெபம் செய்தேன். "ஓ.. தேவனே, நான் உமக்குக் கீழ்ப்படியவில்லை என்று எனக்குத் தெரியும். நீர் எனக்கு கொஞ்சம் உதவி செய்வீர் என்றால், நான் மரிக்க விரும்பவில்லை. நான் இந்த ஆற்றுக்குள் மூழ்கிப் போக விரும்பவில்லை. தயவு செய்து, இந்த இன்ஜினை (Motor] இயங்க செய்வீராக தயவு செய்து அதைச் செய்வீராக" என்று கூறினேன். எனவே அந்த கம்பியை நான் இழுத்தேன் மேலும் பனிக்கட்டியானது உறைநிலைக்கு சென்று கொண்டிருந்தது, மேலும் இரண்டு முறை அது மெல்ல இயங்குவதைப் போல சத்தம் கேட்டது, அந்த படகானது தண்ணீரின் மேல் கிழித்துக் கொண்டு; இப்படியாக குதித்துக் கொண்டும், மோதிக் கொண்டும் இருந்தது. முக்கிய மின் விசையை பெற்றுக் கொள்ள முடியாமல் வெளியேறியது. எனக்கு என்ன நேரிடப் போகிறது என்று எனக்குத் தெரியவில்லை. ஆகவே நான் மேலும் மேலும் முயற்சி செய்து கொண்டிருந்தேன் அது இயங்கவில்லை. நான் திரும்பவுமாக ஜெபம் செய்தேன். "தேவனே, என்னுடைய ஏழை மனைவி அங்கே சுகவீனமாக படுத்து கிடக்கிறாள். என்னுடைய குழந்தைகளும் சுகவீனமாக கிடக்கிறார்கள், நான் இங்கே இந்த நதியில் மூழ்கிக் கொண்டிருக்கிறேன், தேவனே "நான் என்ன செய்யக் கூடும்" என்றேன். மேலும் தேவனே, நீர் எனக்கு சற்று உதவி செய்வீர் என்றால்" என்றேன். ஆகவே அந்த கம்பியை மீண்டுமாக இழுத்தேன், அது அப்பால் சென்றுவிட்டது, ஓ. நான், சரியாக இயங்க துவங்கியது ஆற்றுக்கு வெளியே வந்து கிளார்க்ஸ்வில் (Clarksville) நோக்கி செல்லும் பாதையில் வந்தேன். சுற்றி வந்து திரும்பவுமாக என்னுடைய வாகனத்திற்கு வந்துவிட்டேன். யாரோ சிலர் "அந்த அணை உடைந்த போது, சிறிது நேரத்தில் அந்த அரசாங்க மருத்துவமனையை வெள்ளம் அடித்து கொண்டு போய் விட்டது என்று கூறினார். என்னால் முடிந்தவரை கஷ்டப்பட்டு மருத்துவமனைக்கு வெளியே சென்றேன். 54. நான் ஜார்ஜ் டி-ஆர்க் [George De-Ark] என்ற ஒரு சகோதரனை அங்கு சந்தித்தேன். சந்தித்தேன். "ஓ...சகோதரன் பில்லி என்றான்" (அவனுடைய கரங்களால் என்னை சுற்றிலுமாக பிடித்துக் கொண்டு) "காரியங்கள் முடிந்து விட்டதைப் போல இருக்கிறது" என்று கூறினான். மேலும் "சகோதரர் பில், நான் மீண்டும் ஒருபோதும் உங்களை சந்திக்க முடியமால் போய்விட்டால் அந்த காலையில் நான் உங்களை சந்திக்கிறேன்" என்று கூறினான். வாழ்க்கையில் அதுவே அவனை நான் சந்தித்தது கடைசி முறையாகும் அவ்வளவுதான்... கொஞ்ச நாளைக்கு பிறகு அவன் கடந்து சென்று விட்டான். மேலும் "ஹோப் எங்கு இருக்கிறாள்" என்று நான் கேட்டேன். "எனக்குத் தெரியாது" என்று கூறிவிட்டான். மேலும் நான் வேகமாக அங்கு ஓடி அரசாங்க அதிகாரிகளில் ஒருவரை சந்தித்தேன். "ஐயா, அந்த மருத்துவமனை என்னவாயிற்று" என்றுகேட்டேன். "அது முழவதுமாக அடித்துச் செல்லப்பட்டுவிட்டது" என்று அவர் கூறினார். "அவர்கள் அனைவரும், அவர்களில் யாராவது நீரில் மூழ்கி விட்டார்களா?" என்று கேட்டேன். "இல்லை, அவர்களை ஒரு இரயிலில் ஏற்றி சார்லஸ் டவுன் (Charles Town] என்ற இடத்திற்கு கொண்டு சென்று விட்டார்கள்" என்று அவர் கூறினார். நான் சென்று என் காரை எடுத்துக் கொண்டு அந்த நெடுஞ்சாலையில் அறுபத்தி இரண்டு மைல் வேகத்தில் சார்லஸ் டவுன் என்ற சிறிய நகரத்திற்கு சென்று கொண்டிருந்தேன். மேலும் நான் அங்கே சென்ற போது, சுமார் ஜந்து மைல் சுற்றளவில் தண்ணீரானது லங்காசாஞ்ச் (Lancarsange Creek) கிரீக் - முழுவதுமாக சென்று அதை துண்டித்து போட்டது. ஆகவே நான் சென்று என்னுடைய படகை எடுத்து வந்தேன். மேலும் என்னால் அந்த படகை தண்ணீரில் இறக்கிவிட முடியவில்லை. சுழலானது படகை இப்படியாக சுற்றச் செய்து கொண்டிருந்தது. ஆகவே நான் ஒரு இரும்பு கம்பியை இந்த கோணத்தில் அமைத்து அதை இயக்க ஆரம்பித்தேன். அதற்கு என்னால் கொடுக்க முடிந்த எல்லா எரிபொருளையும் [Gas) கொடுத்தேன். அலைகள் அடித்துக் கொண்டிருந்தது. மேலும் மிகவும் கடினமாக இருந்தது, நீங்கள் அந்த மரங்களைச் சுற்றி பக்கமாக வந்து என்னுடைய படகை இந்த வழியாக பின்னால் தள்ளினால் நான் மீண்டுமாக நான் பின்புறமே வந்து விடுவேன். மேலும் நான் அந்த அரசாங்க மருத்துவமனைக்கு பின்புறமாக வெளியே வந்து விட்டேன். ஒரு சிறிய தீவில் பிடிபட்டதைப் போல் இருந்தது. அங்கே அந்த தீவின் மேல் நாள் முழுவதும் இருந்து கொண்டு யோசித்துக் கொண்டிருந்தேன். அவர்களில் சிலர், பாலத்தின் அடியில் இருந்த தாங்கும் சட்டம் பாலத்தை விட்டு (Tresters] வெளியே போய்விட்டதால், மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளோடு அந்த இரயிலில் சென்ற அனைவருமே தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டதாகவும் கூறினார்கள். "ஓ தேவனே" எவ்வளவாக நான் பதற்றமடைந்தேன். மாடியின் தரையில் நடந்து கொண்டு இருந்தேன். என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. அவர்கள் சென்று விட்டிருந்தால் நான் என்ன செய்வேன்" என்று நினைத்துப் பார்த்தேன். 55. ஆகவே சிறிது நேரத்திற்கு பிறகு நான் கடந்து செல்ல முடிந்த அளவில் போதுமான தண்ணீர் வடிந்து இருந்தது, அதனால் அவர்கள் என்னை கடந்து போகும்படி செய்தனர், நான் சார்லஸ்டவுன்-க்கு வந்து தேடிக் கொண்டிருந்தேன். நான் என்னுடைய பழைய நண்பன் ஒருவனை சந்தித்தேன். அவன் "guma, அந்த இரயில் ஒரு போதும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படவில்லை" என்றான். மேலும்"அவர்கள் எல்லோரும் கடந்து சென்று விட்டனர். ஆனால் எங்கு இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது" என்று கூறினான். கீழே சென்றேன், அந்த அனுப்பி வைக்கும் (Despatcher)பணியாளர் "ஒரு தாயையும், சுகவீனப்பட்டிருந்த இரு குழந்தைகளையும் கொலம்பஸ்-ல் இருந்து இண்டியானாவுக்கு அனுப்பி அனுப்பி வைத்தேன், ஆனால் அவர்களிடம் உங்களால் செல்ல முடியாது" என்று என்னிடம் கூறினார். "தண்ணீரானது இந்த பகுதி முழுவதையும் துண்டித்து விட்டது" என்றும் கூறினார். நான் திரும்பவுமாக கீழே சாலைக்குச் சென்று கைகளை பிசைந்து கொண்டு அழுது கொண்டு நடக்க துவங்கினேன். தேவனே, என்னை எடுத்துக் கொள்ளும், என்னை வேதனைப்படுத்தாதிரும், தேவனே என்னை எடுத்துக் கொள்ளும், இந்த வேதனைகளின் வழியாக நான் கடந்து போகும்படி செய்ய வேண்டாம்" என்று சொல்லிக் கொண்டிருந்தேன். அந்த சாலையில் நடந்து கொண்டிருந்தேன், கார் ஒட்டிவந்த ஒரு மனிதன் என்னை காருக்குள் ஏற்றிக் கொண்டார். "நீங்கள் என்ன தேடிக் கொண்டிருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும்" என்று கூறினார். மேலும் "நீங்கள் உங்கள் மனைவியைத் தேடிக் கொண்டிருக்கிறீர்கள் இல்லையா?' என்று கேட்டார். நான் "ஆமாம்" என்றேன். "என்னை உங்களுக்குத் தெரியவில்லையா?" என்று கூறினார். "நான் மேரியுடன் மே மாதம் முழுவதும் அங்கே இருந்தேன்" என்றார். "ஆமாம் உங்களை நினைவு இருக்கிறது" என்று கூறினேன். "உங்கள் மனைவி இண்டியானாவில் உள்ள கொலம்பஸ் பாப்டிஸ்ட் சபையில் [Baptist Church] மரித்துக் கொண்டிருக்கிறார்" என்று கூறினார். நான், "நிச்சயமாக அப்படி இல்லை" என்றேன். மேலும் அவள் "ஆமாம்" "அவளுக்கு காச நோய் இருந்தது" என்றும், மேலும் "நீங்கள் அவளை குறித்து எதுவும் தெரிந்திருக்க மாட்டீர்கள்" என்று கூறினேன், மருத்துவர் "அவள் மரித்துக் கொண்டிருக்கிறாள்" என்று கூறினார். என்னுடைய பெண் சிநேகதிக்கு அருகில் இருந்த படுக்கையில் அவர்கள் படுத்துக் கொண்டிருந்தார்கள்". வேண்டுமென்றால் எப்படி செல்ல "நீங்கள் அங்கே போக வேண்டும் என்று எனக்குத் தெரியும்" என்று கூறினார். ஆகவே நான் "நல்லது சகோதரனே நான் அங்கு செல்ல வேண்டும்" என்றேன். அந்த இரவில் அந்த பாப்டிஸ்ட் கட்டிடத்திற்குள் நான் ஓடிச் சென்றது நினைவிருக்கிறது. அவர்கள் ஒரு மருத்துவமனையை உருவாக்கியிருந்தனர். எல்லா இடங்களிலும் இராணுவ கட்டில்கள் போடப்பட்டிருந்தது. நான் அங்கே உள்ளே ஓடினேன், காலணிகள் தண்ணீரின் மேலே மிதந்து கொண்டிருந்தது. "ஹோப், ஹோப் நீ எங்கே இருக்கிறாய் அன்பே" எங்கே இருக்கிறாய்?" என் அலற ஆரம்பித்தேன். எனக்கு அருகில் நேரே பார்த்த போது, ஒரு மெலிந்த கரம் உயர்த்தப்பட்டதை பார்த்தேன் அது அவள்தான் அவளிடம் விரைவாக ஓடிச்சென்று என்னுடைய கரங்களில் தூக்கிக் கொண்டேன். "குழந்தைகள் உயிருடன் இருக்கிறார்களா?" என்று கேட்டேன். "ஆமாம்" என்றாள். "பார்ப்பதற்கு நான் மிக மோசமாக இருக்கிறேன் இல்லையா?" என்று கூறினாள். "இல்லை, அன்பே நீ நன்றாக இருக்கிறாய்" என்றேன். மேலும், நான் "நீ சரியாகி விடுவாய்" என்று கூறினேன். யாரோ என் முதுகில் தட்டுவதைப் போல உணர்ந்தேன். நான் பார்த்த போது அவர் ஒரு மருத்துவரைப் போல காணப்பட்டார். அவர் "இங்கே வாருங்கள்" என்று கூறினார். மேலும் "நீங்கள் அவளுடைய கணவரா" என்று கேட்டார். 'ஆம்" "ஐயா" என்றேன். "நீங்கள் சங்கை பிரன்ஹாம் அவர்கள் தானே?" என்றார். நான் "ஆம்" என்றேன். "நல்லது, இந்த விஷயத்தை நான் உங்களிடம் கூறுவதற்கு வெறுக்கிறேன்" என்று கூறிவிட்டு, "உங்கள் மனைவி மரித்துக் கொண்டிருக்கிறார்கள்" என்றார். "அவளை வெளியில் எங்கும் கொண்டு செல்லவோ அல்லது உணர்ச்சிவசப்பட்டு வேறு எதையும் செய்ய முயற்சிக்க வேண்டாம்" என்று கூறினார். "நிச்சயமாக இல்லை டாக்டர்" என்றேன். "ஆமாம் அவள் மரித்துக் கொண்டிருக்கிறாள்" என்றார். ஆகவே, என்ன டாக்டர்?" என்றேன். "வேகமாக பரவுகிற ஒருவகை காசநோய்" என்று கூறினார். மேலும் "அவள் சிறிது நேரத்தில் இறந்து விடுவாள்" என்று கூறிவிட்டார். மேலும் "கொஞ்சம் முடிந்தவரை நல்லவிதமாக கவனித்துக் கொள்ளுங்கள்"என்று கூறிவிட்டு "மேலும் உங்கள் குழந்தைகள் இரண்டும் சுகவீனமாக இருந்து கொண்டிருக்கிறார்கள். நான் அவர்களை இங்கே வேறொரு வீட்டில் வைத்துக் கவனித்துக் கொண்டு வருகிறேன்" என்று கூறினார். நல்லது, நான் அவளிடமாக திரும்பிச் சென்று"அன்பே நீ நன்றாக இருக்கிறாய்" என்று கூறினேன். 56. மேலும் ஜெபர்சன்வில்-ல் இண்டியானாவில் என்னுடைய நண்பரும் மருத்துவருமான டாக்டர் சாம் அடேயர் (Dr. Sam Adaire] அங்கே இருந்தார். விரைவில் அவர் என்னை அனுமதித்தவுடன் நான் அவர்களை வீட்டிற்கு அழைத்து வந்துவிடுவேன். ஆகவே பிள்ளைகள் குணமாகும் வரையில் அங்கேயே இருந்தனர்; மனைவியோ கொஞ்சம் கொஞ்சமாக சென்று கொண்டிருந்தாள். கடைசியாக அவளை மருத்துவமனையில் சேர்த்தோம். அவளைக் கவனிப்பதற்கு மருத்துவர்களை வர வைத்தேன். அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவளுக்கு நுரையீரல் [Newmothorax] சிகிச்சை மற்றும் எல்லாவற்றையும் கொடுத்துப் பார்த்தனர். அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. நான் அங்கே நின்று கொண்டிருந்தது எனக்கு நினைவிருக்கிறது, அவர்கள் பக்க வழியாக ஒரு துளையை போட்டு நுரையீரலுடன் அந்த குழாயை அங்கே வைத்தனர். கவனியுங்கள், அவள் என் கையைப் பிடித்துக் கொண்டு அழுதாள். கண்ணீர் அவளுடைய கன்னங்களில் இருந்து கீழே விழுந்து கொண்டிருந்தது, கொஞ்சம் சிரமப்பட்டு என்னை கவனித்தாள். சிறிதளவு கூட முன்னேற்றம் இல்லாமல் இருந்தது. நான் அதை கடந்து செல்ல வேண்டும் என்றிருந்தால், நான் ஒரு போதும் மீண்டும் அந்த வழியில் செல்லமாட்டேன். அவ்வளவு தான். அவள் என் கரத்தைப் பிடித்துக் கொண்டிருந்தாள். 57. ஆனால் அளவுக்கு மீறின அந்த கடினமான பாதையை கொஞ்சம் உங்களுக்கு காண்பிக்க வேண்டும். நான் அதை ஒரு போதும் மறக்கவே முடியாது. அந்த இரசீதுக்கு உரிய தொகையை செலுத்துவதற்கு வேலை செய்ய முயன்று கொண்டிருந்தேன். எனவே எல்லாவற்றிற்கும் பிறகு ஒரு நாள்...... நான் வெளியில் இருந்து கொண்டிருக்கும் போது, "உங்களுடைய மனைவியை உயிருடன் இருக்கும் பொழுதே நீங்கள்..... நீங்கள்... பார்க்க விரும்பினால் உடனே வாருங்கள்" என்று ஒரு அழைப்பு வந்தது. நான் வேகமாக மருத்துவமனைக்குச் சென்றேன். ஒரு போதும் அதை மறக்க மாட்டேன். நான் நடுக்கத்துடன் என்னுடைய தொப்பியை வண்டிக்குள் வீசிவிட்டு அங்கே வேகமாக ஓடினேன். இங்கே அந்த வாலிப மருத்துவர் அடேயர் (Adair) அவர்கள் வெளியில் நடந்து வந்து கொண்டிருந்தார். தேவன் அவருடைய சிறிய இதயத்தை ஆசீர்வதிப்பாராக. அவர் ஒரு....அவர் ஒரு அருமையான மனிதராக இருந்து கொண்டிருந்தார். நாங்கள் இருவரும் ஒன்றாக உணவு அருந்தியிருக்கிறோம், ஒன்றாக உறங்கியிருக்கிறோம் ஒன்றாக மீன் பிடிக்கச் சென்றிருக்கிறோம். அவர் என்னுடைய இதயம் நிறைந்த ஒரு நண்பராக இருந்தார். அந்த மருத்துவமனையிலிருந்து கீழே இறங்கி நடந்து வந்து கொண்டிருந்தார். அவர் என்னைப் பார்ப்பதை நான் கவனித்தேன், மேலும் அவருடைய கன்னங்களில் இருந்து பெரிய கண்ணீர் துளிகள் விழுந்து கொண்டிருந்தன; அப்படியே ஒரு பக்கமாக திரும்பிக் கொண்டார். நான் அறைக்குள் ஓடினேன். நான் "என்ன விஷயம் டாக்டர் அவர்களே". மேலும் "அவள் சென்று விடவில்லை" என்று கூறினேன். "அவள் இருந்து கொண்டிருக்கிறாள் என்று நான் நம்புகிறேன்" என்று அவர் கூறினார். "மருத்துவர் அவர்களே என்னுடன் வாருங்கள், உள்ளே போகலாம்" என்று சொன்னேன். "பில் அப்படி என்னிடம் கூற வேண்டாம், "ஹோப் என்னுடைய சகோதரியை போல இருக்கிறாள்", என்று கூறினார். "நான் - நான் நான் அங்கே உள்ளே செல்ல முடியாது என்னிடம் கேட்க வேண்டாம்" என்றார். நர்ஸ் மேலே வந்து"வாருங்கள் சகோதரர் பிரன்காம் அவர்களே" என்றாள். மேலும் "இந்த மருந்தை கொஞ்சம் குடியுங்கள்" என்று கூறினாள். "வேண்டாம், எனக்கு அது தேவை இல்லை" என்றேன். "பில்லி மேலே செல்லுங்கள் அது உங்கள் நரம்புகளுக்கு ஒய்வு அளிக்கும்" என்றாள். "வேண்டாம் எதுவும் எனக்கு விருப்பம் இல்லை" "வேண்டாம்" என்று கூறிவிட்டு உள்ளே சென்றேன். "நர்ஸ் அவர்களே நீங்கள் அவருடன் உள்ளே செல்லுங்கள்" என்று அவர் கூறினார். "வேண்டாம், ஒருவரும் எனக்கு தேவை இல்லை, நான் அவளை நேசிக்கிறேன் நானே செல்கிறேன்" என்று கூறிவிட்டு உள்ளே சென்றேன். திறந்து இருந்த அந்த கதவை நோக்கி நடந்தேன். அங்கே அவள் போர்வையினால் முகம் வரையிலும் போர்த்தப்பட்டு இப்படியாக அவளை படுக்க வைத்திருந்தனர். நான் நடுங்கியவாறு அந்த போர்வையை கீழே இழுத்தேன், என்னுடைய இதயம் சற்று நொறுங்கிக் கொண்டிருந்தது. அவள் மீது என்னுடைய கரத்தை வைத்தேன், அவளுடைய முன் நெற்றியில் இப்படியாக வியர்வை வழிந்து ஒட்டிக் கொண்டிருந்தது. "அன்பே, ஹோப், ஹோப்" "ஒரே ஒரு முறை மட்டும் என்னுடன் பேசு" என்றேன். சரி, கொஞ்சம் ஒரு முறை மட்டும் என்னுடன் பேசு, பேச மாட்டாயா" என்றேன். நான் அவளை அசைத்துக் கொண்டிருந்தேன். 58. நண்பர்களே, நான் நூறு வருடங்கள் வாழ்ந்தாலும், நடந்தவற்றை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. அந்த இரண்டு பழுப்பு நிறக் கண்களும் என்னைப் பார்த்துக் கொண்டே இருந்தன. மிகவும் பலவீனமாக இருந்த அவளால் எதையும் கூறமுடியவில்லை. அவள் புன்னகை செய்தாள். அவள் விரலால் சைகை செய்தாள். நான் கீழே உட்கார்ந்தேன் "ஏன் என்னை அழைத்தீர்கள் அன்பே?" என்று கூறினாள். "நல்லது, "எனக்கு தெரியவில்லை" என்றேன். அவள் "ஒ... நான் - நான் வேறொரு தேசத்தில் இருந்தேன்" அது மிகவும் அமைதியாக இருக்கிறது" என்றாள். "நான் அங்கு வேதனைகளுடன் இருந்து கொண்டிருக்கவில்லை" அருமையான விண்மீன் கூட்டம், மகத்தான பெரிய பறவைகள். மேலும் வெண்மை நிற உடை அணிந்த மனிதர்கள் பக்கத்திற்கு ஒருவராக என்னை பொதிந்து கொண்டு என்னுடைய வீட்டிற்கு சென்று கொண்டிருக்கிறார்கள்." என்றாள். நண்பர்களே, அங்கே அங்கே ஒரு தேசம் இருந்து கொண்டிருக்கிறது. அவள் மரித்துக் கொண்டிருந்த தருணத்தில் அவளுடைய கண்கள் அப்பால் உள்ள பரலோகத்தையும் காணும்படியாக திறந்திருந்தன என்று நான் நம்புகிறேன். ஒரு சிறிய இறுதி ஊர்வலத்தில் அவள் இருந்தாள். நர்ஸ் உள்ளே வந்தாள். எனவே அவள் "நர்ஸ் அருகில் வாருங்கள்" என்றாள். "உனக்கு திருமணம் ஆகும் போது என்னுடைய கணவரைப் போல ஒருவரை மணந்து கொண்டிருப்பாய்" என்று நான் நம்புகிறேன் என்றாள். ஓ அன்பே நான் செய்வதற்கு என்னிடம் ஒன்றும் இல்லை" என்று கூறினேன். ஓ உங்களுடைய இருதயம் இருதயம் ஆசீர்வதிக்கப்படுவதாக" என்று என்னுடைய முதுகில் தட்டிக் கொடுத்தாள். நர்ஸ் திரும்பி அழுது கொண்டே நடந்து சென்று விட்டாள். அவள் "பில், நான் உங்களிடம் சில காரியங்களைக் கூற வேண்டும், நான் மரித்துக் கொண்டிருக்கிறேன்" என்றாள். "அழாதீர்கள்" என்றாள். "சரி" என்றேன். "என்னுடைய குழந்தைகளை அலைக்கழிக்க வேண்டாம்" என்றாள். "மேலும் சில காரியங்களை உங்களிடம் நான் அறிக்கை செய்ய வேண்டும்" என்றும் கூறினாள். "அது என்ன" என்றேன். "ஒரு முறை நீங்கள் மீன் பிடிக்கச் சென்று கொண்டிருந்தீர்கள் நான் உங்களை கூப்பிட்டேன், நினைவு இருக்கிறதா? அந்த இரவு போர்ட் வெயின்-க்கு ஒரு கூட்டத்திற்கு சென்று கொண்டிருந்தோம் அல்லவா?" நான்"நீங்கள் சென்று எனக்கு சில கால் உறைகளை வாங்கிக் கொண்டு வந்தீர்கள்" என்றாள். "ஆமாம்" என்றேன். "ஆமாம் அவைகள் எனக்கு நினைவு இருக்கிறது" என்றேன். "அவைகள் தவறான கால் உறைகளாக இருந்தது அன்பே, அவைகள் சரியானவைகள் இல்லை" என்றாள். 59. அது என்ன என்றால், நான் மீன் பிடித்துக் கொண்டிருந்தேன். போர்ட்வெயினுக்கு (Fort Wayne) பிரசங்கம் செய்வதற்காக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தோம். அவளுடைய தந்தை போர்ட் வெயினில் வசித்து வந்தார். ஆகவே நான் போர்ட் வெயினுக்கு பிரசங்கிக்க சென்று கொண்டிருந்தேன், மேலும் அவள், நீங்கள் வாங்கிய பெண்கள் அணியும் இரண்டு விதமான கால் உறைகள் அங்கே இருந்து கொண்டிருந்தன. அவைகளில் ஒன்றின் பெயர் சிப்ஃபோ (chiffo) சிப்ஃபான் (chiffon) அப்படி ஏதோ ஒரு பெயர். அது சரி. மேலும் அந்த மற்ற ஒன்று எந்த வகையானது? ரேயான் (Rayon) அது ரேய்மாண்ட் (Raymond) அல்லது Rayon அப்படி ஏதோ ஒன்று. சிறந்த ஒன்று எதுவென்றால்? சிஃபான்தான். அவைகளின் விலை அறுபது சென்ட் மற்றும் கொஞ்சம் அதிகம் இருக்கும். அவள் குளித்துக் கொண்டிருந்தாள். "பில்லி, நீங்கள் கீழே சென்று பென்னி ஸ்டோரில் (Benney Store) சில கால் உறைகளை எனக்கு வாங்கி வாருங்கள்" என்றாள். எனவே நான் "சரி" என்று கூறிவிட்டு கீழே உள்ள தெருவுக்குச் சென்று கொண்டிருந்தேன். இப்பொழுது நினைவில் வருகிறது, எனக்கு பெண்களுடைய உடைகளைப் பற்றி பொதுவாக எதுவும் தெரியாது. "சிப்ஃபான் ரக கால் உறைகள் வாங்கி வாருங்கள்" என்று அவள் கூறியிருந்தாள். நான் "சிப்ஃபான், சிப்ஃபான், சிப்ஃபான்" என்று கூறிக் கொண்டே தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தேன். யாரோ சிலர் "ஹலோ சகோதரர் பிரன்ஹாம் அவர்களே" என்று கூப்பிட்டார்கள். நான் "ஹலோ, சிப்ஃபான், சிப்ஃபான், சிப்ஃபான்" என்று கூறிக்கொண்டே சென்றுகொண்டிருந்தேன். அங்கே நான் ஆர்வில் ஸ்பான் [Orvile Spawn) என்பவரை சந்தித்தேன். அவர் " பில்லி, பெர்ச் வகை மீன்கள் கடித்துக் கொண்டிருக்கின்றன அதைக் குறித்து....?" என்று அவர் ஏதோ கூறினார். ஓ நான் அவரிடம் பேசிக்கொண்டிருந்து விட்டேன். அதனால் அவள் என்னிடம் என்ன கூறினாள் என்பதை நான் மறந்து விட்டேன். 60. நான் கடைக்கு(Penney's Store) செல்லவில்லை, காரணம் அங்கு யாரையும் எனக்குத் தெரியாது. ஆனால் டெல்மா போர்ட் (Thelma Ford) என்ற ஒரு சிறிய பெண் சிநேகதி, என்னுடைய சபைக்கு வழக்கமாக வந்து கொண்டிருப்பவள், அங்கே ஒரு பத்து சென்ட் (Ten cent store) கடையில் வேலை செய்து கொண்டு விற்பனை செய்து கொண்டிருந்தாள் என்று எனக்குத் தெரியும். ஆகவே நான் அங்கு சென்றேன்; அந்த டெல்மா மேலே வந்தாள், "பில்லி உங்களுக்கு என்ன வேண்டும்?" என்றாள். "ஹோப்-க்கு சில காலுறைகள் (Socks) வாங்க வேண்டும்" என்றேன். மேலும் அவள் "ஹோப் கால் உறைகளை அணியமாட்டாள்" என்றாள். "அவள் நிச்சயமாக அணிந்து கொள்வாள்" என்று கூறினேன். "அவள் கால் உறைகளை (stockings) அணிந்து கொள்வாள்" என்று கூறினாள். 'அது சரிதான். அது சரிதான்" என்று கூறினேன். நான் ஏற்கனவே என்னுடைய அறியாமையை குறித்து காண்பித்து விட்டேன்" என்று நினைத்தேன். "எந்த வகையானது உங்களுக்கு தேவை?" என்று கூறினாள். "உங்களிடம் எந்த வகையான காலுறைகளை வைத்திருக்கிறீர்கள்?" என்றேன். "நாங்கள் சிப்ஃபான் (Chiffon] மற்றும் ரேயான் போன்றவைகளை வைத் திருக்கிறோம் ரேயான் என்பது விலை குறைவு. "நான் ரேயான் வைத்திருக்கிறேன்" என்று அவள் கூறினாள். நான் "அதுதான் தேவை, அதுதான் எனக்கு தேவை" என்றேன். மேலும் ஹோப்-க்கு ரேயான் தேவைப்படுகிறதா? என்று கேட்டாள். நான்.....எல்லா பெயர்களும் ஒரே மாதிரியாக ஒலிக்கிறது. ரேயான், சிப்ஃபான் எனக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லை என்றாள். "ஆமாம்" என்று அவள் கூறினாள். ஆகவே அவள் அவற்றை ஒரு பையில் வைத்து என்னிடம் தந்தாள். "முழுவதுமாக நாகரீகமாக உடை உடுத்த வேண்டும்" என்று அவர்களுக்குள்ளே அப்படி ஒரு எண்ணம் இருந்து கொண்டிருப்பது உங்களுக்குத் தெரியும். அது என்னவாக இருந்தாலும் "அந்த ஒரு தனித்துவம்" ஓ, நாகரீகமான ஆடை அலங்காரம், முழு ஆடை அலங்கராம் (Full Fashion), அது அப்படியேதான் இருந்து கொண்டி ருக்கிறது. "அந்த வகையானது தான் எனக்கு தேவை" "எனக்கு தேவையான ஒரு பையில் வைத்து கொடுத்தாள். அதன் விலை இருபத்தி ஒன்பது சென்ட்கள் மட்டுமே. எனவே, நான் "அவைகளில் இன்னும் இரண்டு ஜோடி தாருங்கள்" என்று கூறினேன். அவள் "நிச்சயமாகவே நீங்கள் உறுதியாக இருக்கிறீர்களா?" என்று கேட்டாள். "அதைத்தான் அவள் விரும்பினாள்" என்றேன். 61. எனவே நான் திரும்பி சென்றேன்... நிச்சயமாகவே ஆண்களாகிய நீங்கள் உங்களுடைய பெண்கள் எதை விரும்புவார்கள் என்று உங்களுக்கு தெரியும். எனவே "இங்கே பாருங்கள்", என்றேன். மேலும் "நான் ஆபிரகாமின் குமாரான், ஒரு சிறிய யூதனாக இருக்கிறேன். நீங்கள் ஆற்றின் வழியாக கடந்து சென்று கடைகளில் பொருட்களை வாங்குகிறீர்கள், நான் இரண்டு ஜோடி கால் உறைகளை வாங்குவேன், நீங்கள் ஒன்றை மட்டும் வாங்கினால் உங்களுக்கு இன்னும் பணம் மீதியாக இருக்கும்." என்றேன். "வெறுமனே...நான் ஆபிரகாமின் குமாரனாக இருக்கிறேன், அதை எப்படி செய்வது என்று எனக்கு தெரியும் பாருங்கள்?" இப்படியே தான் அது சென்று கொண்டிருக்கிறது. உங்களுக்கு தெரியும். தேவன் தாமே அவளுடைய இருதயத்தை ஆசீர்வதிப்பராக. இந்த இரவில் கொண்டிருக்கிறாள், அவள் கல்லறையில் இருந்து அநேகமாக அதன் மீது பனித்துளிகள் விழுந்து கொண்டிருக்கலாம். ஆனால் அங்குள்ள அனைவரின் மீதும் அல்ல. இன்னுமாக நான் அவளை நினைத்து பார்க்கிறேன் அவ்வளவு தான். அவளோ கடந்து சென்று விட்டாள். மேலும் அங்கே, "இருக்கமாட்டேன்" என்று அவள் கூறின போது நான் அதை வேடிக்கையாக நினைத்தேன் அவள் போர்ட்வெயின்-க்கு சென்ற பொழுது ஒரு ஜோடி காலுறைகள் அவளுக்கு தேவையாக இருந்தது. ஆனால் அவள் ஒரு கண்ணியமிக்க பெண்மணியாக இருந்ததால் அவள் அதை என்னிடம் கூறவே இல்லை. மேலும் அவள் என்னிடம் "பில்லி, நான் அதை உங்கள் அம்மாவிடம் கொடுத்து விட்டேன், அவர்கள் என்னை விட வயதில் மூத்தவர்கள்" என்று கூறினாள். "சரி அது எனக்கு தெரியாது, அன்பே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக" எல்லாம் சரிதான் என்று கூறினேன். 62. அவள் "நீங்கள் சிரமத்துடன் வேட்டையாடிக் கொண்டிருந்த அந்த நேரமானது உங்களுக்கு நினைவு இருக்கும். நாம் லூயிஸ் வில்லில் [Louisville] இருந்தோம், அந்த 22 ரக துப்பாக்கி ஒன்று உங்களுக்கு தேவையாக இருந்தது இல்லையா? அதனுடைய விலை மூன்று டாலர்கள் மற்றும் கொஞ்சம் அதிகம். அதை வாங்குவதற்கு உங்களிடம் பணம் இல்லாமல் இருந்தது? இது இரண்டு வருடங்களுக்கு முன் நிகழ்ந்தது, இல்லையா? என்று கூறினாள். "ஆமாம் அது எனக்கு நினைவிருக்கிறது" என்றேன். "பில் நான் எப்பொழுதுமே அந்த துப்பாக்கியை உங்களுக்கு வாங்கி தர வேண்டும் என்று விரும்பினேன்" என்றாள். மேலும் அவள் "நான் உங்களுடன் இனி இருக்க மாட்டேன் ஆனால் இன்னும் சில நிமிடங்கள் தான் உங்களுடன் இருப்பேன்" என்று கூறி விட்டு, "நீங்கள் வீட்டிற்கு செல்லும் போது, அங்கே மடித்து வைத்துக் கொள்ளும் மெத்தைக்கு [Folding Bed] கீழே பாருங்கள், அந்த துப்பாக்கியை வாங்குவ தற்கான பணத்தை (Nickels] நான் சேமித்து வைத்திருக் கிறேன். "அதை வாங்கிக் கொள்வேன் என்று எனக்கு வாக்கு கொடுப் பீர்களா?" என்றாள். ஓ நான். நான் வீட்டிற்கு சென்று அதைக் கண்டுபிடித்த போது அங்கே கீழே இரண்டு டாலர்கள் மற்றும் கொஞ்சம் இருந்தது. எனக்கு உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டும் போல் இருந்தது. "நிச்சயமாக, அன்பே, நீ போய்விட மாட்டாய்" என்றேன். "நான் உங்களை விட்டுவிட்டு செல்வதை வெறுக்கிறேன்" ஆனால் "நான் போகத்தான் வேண்டும் அதைக்குறித்து நான் கவலைப்படவில்லை" "பரவாயில்லை" என்றாள். மேலும் அவள் "மற்றொரு விஷயம் நான் உங்களிடம் கூற வேண்டும். "நீங்கள் தனிமையில் இருக்க வேண்டாம்" என்றாள். அதை என்னிடம் கேட்க வேண்டாம்" என்றேன். "எங்கு பார்த்தாலும் சுற்றிலும் போதை மருந்துகள் இருந்து கொண்டிருக்கிறது, என்னுடைய குழந்தைகளை விடுதியில் சேர்த்து விட்டு, தனிமையில் இருக்க மாட்டேன்" என்று எனக்கு வாக்கு கொடுங்கள், வாக்கு கொடுங்கள்" என்று கூறினாள். "அன்பே, நான் அப்படி செய்ய மாட்டேன்" என்றேன். மேலும் அவள், "நீங்கள் அப்படி "நீங்கள் அப்படி செய்யமாட்டேன் என்று வாக்குக் கொடுப்பீர்களா?. அப்பொழுதுதான் நான் - நான் நிம்மதியாக போக முடியும்" என்றாள். அவள் அதைப் பொருட்படுத்தவில்லை தண்ணீரை எடுத்து பருகினாள், "நான் நான் "உங்களையும், குழந்தைகளையும் விட்டுவிட்டு செல்ல வெறுக்கிறேன். ஆனால், ஓ பில் இப்படி போய்விடுவது தான் மிகவும் நன்றாக இருக்கும்" என்றாள். எனவே "சரி, என்னால் முடிந்ததை சிறப்பாக செய்வேன்" என்றேன். 63. அவள் "இன்னொரு காரியம்," என்றாள். "நான் ஏன் போய்க் கொண்டிருக்கிறேன் என்று உங்களால் உணர்ந்து கொள்ள முடிகிறதா?" என்று கூறினாள். ஓ, அது என்னை காயப்படுத்தியது. மேலும் அவள் "நான் அம்மாவின் சொல்லைக் கேட்காமல் இருந்திருந்தால்,... கேட்டிருந்தால் அது வித்தியாசமான ஒன்றாக இருந்திருக்கும்..." இல்லையா?" என்று கூறினாள். "சரி அன்பே, "ஓ நான் என்ன செய்ய வேண்டும்?" என்றேன். "இந்த பரிசுத்த ஆவியின் மார்க்கத்தைக் குறித்து வெட்கப்படாதீர்கள். இதைச் செய்யுங்கள். இதற்காக மரிப்பது என்பது உலகத்திலேயே ஒரு மகத்தான காரியமாக இருக்கிறது. மேலும், "இருக்கும் வரையில் இதில் நிலைத்து நின்று, பிரசங்கம் செய்யுங்கள், "நாம் சென்று வந்த ஊழியக்களங்களுக்கு நீங்கள் சென்று "பிரசங்கம் செய்வேன்" என்று வாக்கு கொடுங்கள், மேலும் உங்களால் முடிந்த ஒவ்வொன்றையும் செய்வேன் என்று வாக்கு கொடுங்கள்."இங்கிருந்து நீங்கள் அங்கு மகிமைக்கு செல்லும் போது அது மிகவும் அருமையான ஒன்றாக இருக்கும் என்று ஒவ்வொரு நபரிடமும் சொல்லுங்கள்" என்றாள். ஓ... அன்பே அப்படி நீ போய்க் கொண்டிருப்பதை காணும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது" என்றேன். "உன்னை எந்த இடத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என்று நீ விரும்புகிறாய்?" என்று கேட்டேன். "நீங்கள் என்னை அந்த சிறிய குன்றின் மீது எடுத்துச் செல்லுங்கள்." என்றாள். "நான் உன்னை எடுத்துச் சென்று உன்னுடைய சரீரத்தை வால்நட் (Wallnut Ridge) ரிட்ஜ்க்கு வெளியே இருக்கின்ற அந்த குன்றில் உன்னை அடக்கம் செய்வேன், அன்பே, தேவன் என்னை கைவிட்டுவிடாமல் உபயோகப்படுத்துவார் என்றால் என்னுடைய கடைசி துளி இரத்தம் சிந்தும் வரையிலும் நான் ஒரு போதும் நிறுத்தி விடாமல், அல்லது சரீரத்தை விட்டு என்னுடைய ஜீவன் கொண்டிருந்தாலும் ஊழியக் களங்களுக்கு போய் சென்று கொண்டிருப்பேன். அல்லது பிராயசித்தம் செய்ய முயற்சிப்பேன். அதை செய்வதற்காக சென்று கொண்டி ருப்பேன். சரியான வாழ்க்கை வாழ்வதற்கான அனைத்தையும் நான் செய்வேன்" என்றேன். "நான் எப்பொழுதும் உங்களுடன் இருப்பேன். குட்பை" என்று சொன்னாள். "நீ சென்று கொண்டிருக்கிறாயா?" என்றேன். மேலும் "கவனி அந்த காலைப் பொழுதில் நாம் ஒன்றாக இருப்போம். அந்த காலைப் பொழுதில் அந்த கிழக்கு வாயிலின் பக்கமாக நீ நின்று கொண்டிருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். நானும் அங்கே நின்று கொண்டிருக்க வேண்டும் என்று விருமபுகிறேன். இங்கே எப்பொழுதும் மிகவும் பயங்கரமாக இருந்து கொண்டிருக்கும். அவருடைய வருகைக்கு முன்பாக நான் இறந்து விட்டால் நான் அங்கே நித்திரை செய்து கொண்டிருப்பேன், மேலும் எங்காவது ஊழியக் களத்தில் இருக்கும் பொழுது நான் மேலே எடுத்துக் கொள்ளப்படுவேன் என்றால், நாம் அங்கே ஒன்றுகூடுவோம். நீ அங்கே சென்று பிள்ளைகளுக்காக அந்த வாயில் கதவு அருகே நின்று எனக்காக காத்துக் கொண்டிரு; பிறகு ஆபிரகாம், ஈசாக் மற்றும் யாக்கோபு அவர்கள் உள்ளே வந்து கொண்டிருப்பதை பார்க்கும் பொழுது 'பில், 'பில், பில் என்று உன்னால் முடிந்த அளவு உரக்க கூச்சலிட ஆரம்பித்து விடுவாய் "அங்கேதானே நான் உனக்கு பதில் கூறுவேன்" என்றேன். அவளுடைய பலவீனமான கைகளை மேலே உயர்த்தினாள். நான் அவளுக்கு முத்தமிட்டு விடை கொடுத்தேன், அதுவே அவளுடன் எனது கடைசி நாளாக இருந்தது. நான் என்னுடைய பாதையில் இருந்து கொண்டிருக்கிறேன் அவ்வளவுதான். என்றாவது ஒருநாள் நான் அங்கு செல்வேன். 64. கீழே இருந்த அந்த சவ அறைக்கு நாங்கள் அவளை எடுத்துச் சென்றோம். நான் வீட்டிற்கு சென்றேன். என்னால் எங்கும் ஆறுதல் அடைய முடியாமல் போனது. நான் அம்மாவிடம் சென்றேன், ஓ... என்று கதறி அழுது கொண்டிருந்தேன். மேலும் "இங்கேயே தங்கியிரு" என்று அம்மா கூறினார்கள். "வேண்டாம் என்று கூறிவிட்டு நான் படுப்பதற்காக வீட்டிற்கு போய் விட்டேன். எங்களிடம் மேஜை, நாற்காலி போன்ற மரச்சாமான்கள் இல்லை எங்களுக்கு சொந்தமானது மட்டுமே இருந்தது. அப்படியே நான் படுப்பதற்காக வீட்டிற்கு சென்றேன். சற்று நேரத்தில சகோதரர் பிராங்க் பிராய் அவர்கள் (Frank Broy] மேலே வந்து "மகனே பில்லி, உன்னிடத்தில் ஒன்றைக் கூறுவதற்கு நான் வெறுக்கிறேன் என்றார் "பரவாயில்லை, நான் அங்கே தான் இருந்தேன்" என்று கூறினேன். "அப்படி இல்லை, உன்னுடைய சிறிய குழந்தையும் கூட மரித்துக் கொண்டிருக்கிறாள்" என்று கூறினார். "அப்படி இருக்க முடியாது" என்று நான் கூறினேன். "ஆமாம் அது மரித்துக் கொண்டிருக்கிறது" என்றார். என்னை என் சிறிய சாரோனைப் பார்ப்பதற்கு அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். வேதகாமத்தில் உள்ள ஒரு பெயரை வைத்து நான் அவளை கூப்பிட விரும்பினேன். என்னுடைய சிறிய பையன் பில்லி-க்கு (Billy) 'பில்லி பவுல்' (Billy Paul) என்று அழைத்தேன். அவனுக்கு பிறகு இந்த குழந்தைக்கு வேதாகமத்தில் உள்ள பெயர் வைக்க விரும்பினேன். மேலும் நான் அவளை சாரோனின் ரோஜா என்று அழைக்க முடியாது, எனவே நான் அவளை சாரோன் ரோஜா (Rose of Sharon) என்று அழைத்தேன். 65. ஆகவே நான் மருத்துவமனைக்குச் சென்றேன். அந்த மருத்துவர் என்னை சந்தித்து "பில்லி அவள் மரித்துக் கொண்டிருக்கிறாள். அங்கே உள்ளே போக வேண்டாம்" என்று கூறினார். எனவே, அந்த நர்ஸ் திரும்பிச் செல்லும் வரை அங்கேயே நின்று கொண்டிருந்தேன். நான் வேகமாக ஓடி அவள் வைக்கப்பட்டு இருந்த இடத்திற்குச் சென்றேன். நான் அவளைக் கவனித்தேன். அந்த சிறியவள் அங்கே படுத்துக் கொண்டிருந்தாள் அவளுக்கு எட்டு மாதமே ஆகியிருந்தது. என்னால் அதை மறக்கவே முடியாது. ஆகவே எனக்கு நினைவிருக்கிறது. நான் வழக்கமாக வீட்டுக்கு வந்து கொண்டி ருப்பேன், அவள் முற்றத்தில் அமர்ந்திருப்பாள். நான் இப்படியாக என்னுடைய ஹாரனை அடித்து ஒலி எழுப்புவேன். மூலையை சுற்றி சுற்றி வந்து "கூ.. For... கூ.." என்று நான் வரும் வரை சத்தமிட்டுக் கொண்டிருப்பாள்; இந்த சிறிய கூட்டாளிகளை நான் எவ்வளவாக நேசித்தேன். அவள் மிகவும் வேதனையுடன் இருந்தாள். அவளுடைய கால்களில் ஒன்று தசைப்பிடிப்பால் இறுக்கத்துடன் மேலும் கீழும் அசைந்து கொண்டிருந்தது. நான் அவளைப் பார்த்தேன். அசைந்து கொண்டிருந்தாள். "ஷாரி... சாரோன் அன்பே, அப்பாவை உனக்குத் தெரிகிறதா? என்றேன். நான் என்னை கட்டுப்படுத்திக் கொள்ள வெகுவாக முயற்சித்துக் கொண்டிருந்தேன். "அன்பே உனக்கு அப்பாவை தெரிகிறதா?" என்றேன் அவளுடைய சிறிய உதடுகள் நடுங்கிக் கொண்டிருந்தது. ஆகவே அவள் என்னைப் பார்த்த போது அவள் மிகவும் வேதனையோடு அவளுடைய சிறிய கண்கள் குறுக்காக சென்று விட்டிருந்தது. ஓ நான் அந்த மென்மையான குழந்தையின் நீலநிறக் கண்களை பார்த்த போது....(Blank Spot. Ed;]. 66. அது என்னவென்று அப்பொழுது அறிந்திருக்கவில்லை. ஆனால் இப்பொழுது நான் புரிந்து கொண்டேன். அதைக் குறித்து நான் என்ன நினைக்கிறேன் எப்பொழுதுமே மேடையின் மீது குறுக்கு கண்களை கொண்ட குழந்தை ஒருபோதும் வரிசையில் வந்ததே இல்லை. ஒருபோதும் ஒருவர் கூட மேடைக்கு கடந்து வராமலே அது குணமாகி விட்டது அதை கடினமாக கொண்டு வர வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் இதைப் பார்க்கின்ற வரையிலும் நான் அதைப்பற்றி நினைக்கவே இல்லை. அந்த சிறிய கண் குறுக்காக சென்றுவிட்டிருந்தது, ஆகவே அவள் மிகவுமாக வேதனைப்பட்டுக் கொண்டிருந்தாள். எனவே நான் முழங்கால் படியிட்டேன். இயேசுவே தயவு செய்து, தேவரீர் நான் என்ன செய்திருந்தாலும் அதற்காக வருந்துகிறேன்," அவளை என்னிடத்திலிருந்து எடுத்துக் கொள்ளாதேயும். நான் அவளை என் முழு இருதயத்துடன் நேசிக்கிறேன் தேவரீர். தயவு செய்து" என்றேன். நான் கவனித்த போது இப்படியாக ஒரு பெரிய கருப்புத் திரையானது கீழே விழுந்துகொண்டிருந்தது. அவள் சென்று விட்டாள் என்று நான் அறிந்து கொண்டேன். நான் எழுந்து என்னுடைய கரத்தை அவளுடைய தலையின் மீது வைத்தேன் "என்னுடைய அருமையான இனிமையான சிறிய தேவதையே கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக. நான் சென்று உன்னை அம்மாவின் கரத்தில் வைப்பேன்.இன்னும் சில நிமிடங்களில் தேவ தூதர்கள் உன்னை பொதிந்து எடுத்துக் கொண்டு வீட்டிற்கு செல்வார்கள். ஆனால் அப்பா ஒரு நாள் உன்னை சந்திப்பேன்" என்றேன். நான் தலையை உயர்த்தி "தேவனே நீர் கொடுத்தீர் நீரே எடுத்துக் கொண்டீர். ஏன் என்னைக் கொன்று கொண்டிருக்கிறீர்."மேலும் யோபுவைப் போல நீர் என்னைக் கொன்று போட்டாலும் நான் உம்மேல் நம்பிக்கையாயிருப்பேன். எப்படி இருப்பினும் நீர் என் இதயத்தை உடைத்துக் கொண்டிருக்கிறிர். எப்படி இதை தாங்கிக் கொள்ளப் போகிறேன்" என்று எனக்குத் தெரியவில்லை. ஆனாலும் "தேவனே அவளுடைய சிறிய ஆன்மாவை உம்மிடத்தில் ஒப்படைக்கிறேன் கர்த்தராகிய இயேசுவே அதை எடுத்துக் கொள்ளும்" அவளுடைய அம்மாவுடன்கூட பலிபீடத்தில் வைத்துக் கொள்ளும் நான் அவர்களை காண ஒரு நாளிலே வருவேனாக" என்றேன். நான் அப்படி செய்த போது தேவ தூதர்கள் இனிமையாக இறங்கி வந்து அவளுடைய சிறிய சுவாசத்தை எடுத்து விட்டு அவளுடைய அம்மாவுடன் இருப்பதற்காக அவளை அப்பால் கொண்டு சென்றனர். நான் அவளை அவள் அம்மாவுடன்கூட பூமிக்குள்ளே வைத்தேன். 67. நான் அங்கே நின்று கொண்டிருந்த போது என்னுடைய நண்பர் மெதடிஸ்ட் போதகர் சகோதரர் ஸ்மித் அவர்கள் அவருடைய கையில் சில மண் கட்டிகளை வைத்துக் கொண்டு அங்கே நடந்து வந்தார், நான் அங்கே நின்று கொண்டிருந்தேன்; அவர் தன்னுடைய கரத்தை என் என் மேல் போட்டு அணைத்துக் கொண்டு "இனிமையான பையனே தைரியமாக இரு என்று கூறினார். "ஓ சகோதரர் ஸ்மித் அவர்களே, என்னுடைய ஆத்துமா... ஓ எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை" என்றேன். மேலும் அந்த சிறிய மண் கட்டிகளை "சாம்பலுக்கு சாம்பல் புழுதிக்கு புழுதி, மண்ணுக்கு மண்" என்று சொல்லி அந்த சிறிய சவப்பெட்டியின் மீது போட்டுக் கொண்டிருந்ததை என்னால் கேட்க முடிந்தது. "தேவனே.. நான் என்ன செய்ய முடியும்? என்று நினைத்தேன். அந்த பைன் மரக் கூட்டங்களின் வழியாக காற்று வீசும் சத்தம் வந்து கொண்டிருந்தது. அந்த சத்தமானது எனக்கு ஒரு பாடலை சொல்லிக் கொண்டிருந்ததைப் போல இருந்தது. அங்கே நதிக்கு அப்பால் ஓர் தேசம் உண்டு, அது என்றும் இனிமையானது என்பர், விசுவாச அளவைக் கொண்டு மட்டுமே அதன் கரையை நாம் அடைவோம், ஓவ்வொருவராய் அதன் நுழைவுவாயிலில் நுழைவோம், அங்கே சாகாமையுள்ளவரோடு வாழ்வோம். ஒரு நாள் பொன்னான மணியோசையை அவர்கள் ஒலிப்பார்கள். உனக்காகவும் எனக்காகவும். நான் உடைந்து போன இருதயத்துடன் கல்லறையிலிருந்து வீட்டிற்கு திரும்பிச் சென்றேன். என்னால் இளைப்பாற முடியவில்லை. நாட்கள் கடந்து கொண்டிருந்தன நான் என்னுடைய மனைவியை விட்டுக் கொடுக்க முடியும், ஆனால் ஓ அந்த குழந்தை என் இதயத்தின் விருப்பமாக இருந்தாள் எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அந்த சிறிய இனிமையான சிறுமி... அதன் பிறகு "ஓ, சீக்கிரம் நான் ஏதாவது செய்ய வேண்டும்" என்று நினைத்தேன். 68. நான் பொதுத்துறை நிறுவனம் ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்தேன். ஒரு நாள் அதிகாலையில் அங்கு சென்று ஒரு கம்பத்தின் உச்சிக்கு ஏறிச் சென்று ஒரு மீட்டர் பெட்டியை எடுப்பதற்கு அங்கே நின்று கொண்டிருந்தேன். தொலைவில் ஒரு குன்றின் உச்சியில் ஒரு பழைய கரடுமுரடான சிலுவை நின்று கொண்டிருந்தது..... என்று நான் பாடிக் கொண்டிருந்தேன். மேலும் சூரியன் மேலே எழும்பி வந்து கொண்டிருந்ததை நான் பார்த்து கொண்டிருந்தேன். அந்தக் கம்பத்தின் உச்சியில் கைகளை குறுக்காக வைத்துக் கொண்டு தொங்கிக் கொண்டே வேலை செய்து கொண்டிருந்தேன். பக்கவாட்டில் அங்கே என் உருவம் அசைவது போல இருந்தது. பார்ப்பதற்கு அது அங்கே ஒரு சிலுவையைப் போல இருந்தது. ஓ தேவனுடைய கிறிஸ்துவே, நீர் என் பாவங்களுக்காக அங்கே ஆணிகள் கடாவப்பட்டிருந்தீர் நான் செய்தவற்றிற்காக வருந்துகிறேன்" என்று நினைத்தேன். ஓ, "தேவனே என்னைப் போல் இப்படிப்பட்ட ஒருவனை உம்மால் எப்படி உயர்வாக வைத்திருக்க முடிகிறது. நீர் என் இதயத்தை நொறுக்கி என்னை தரையில் தள்ளிவிட்டீர். ஆனால் நான் என்ன செய்ய முடியும்? என்று கூறினேன். மேலும் நான் மிகவும் பதட்டமடைந்தவனாக பதட்டமடைந்தவனாக இருந்தேன். மின்கம்பியாளர்(Lineman) வைத்திருக்கும் ஒரு ஜோடி ரப்பர் கையுறைகளை வைத்திருந்தேன் உங்களுக்குத் தெரியும். இரண்டாயிரத்து முன்னூறு (2300 Volt)....மின்சாரம் கம்பி வழியாக என் அருகில் சென்று கொண்டிருந்தது. "இங்கே பார்', அந்த பிரதான மின்சாரம் சென்று கொண்டிருக்கும் கம்பியில் என்னுடைய கையை வைக்க முடிந்தால். ஒரே நிமிடத்தில் நான் சாரோனோடு இருப்பேன்" என்று நினைத்தேன். என்னுடைய கையுறையை நடுங்கியவாறு கழற்றினேன். "தேவனே நான் என்னுடைய சிந்தையை இழந்து விட்டேன் அல்லது அப்படி ஏதோ ஒரு காரியம்" என்று கூறினேன். "அன்பே சாரோன் இனிமேலும் என்னால் தாங்கிக் கொள்ள முடியாது, அப்பாவும் உன்னோடுகூட இருப்பதற்கு வீட்டிற்கு வந்து கொண்டிருக்கிறேன்" என்றேன். "அவைகளைக் கவனி" இரண்டாயிரத்து முன்னூறு வோல்ட் அளவில் மின்சாரம் அங்கே ஓடிக் கொண்டிருக்கிறது, உன் உடம்பில் உள்ள ஒவ்வொரு எலும்பும் நொறுங்கி விடும். "பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் துதிக்கப்படுவதாக" என்று கூறினேன். ஆகவே முதலாவது காரியம் என்ன என்று உங்களுக்கு தெரியும், நான் கீழே தரையில் அமர்ந்து கொண்டிருந்தேன். எனக்கு தெரியாது. 69. அந்த வரமானது முன்பே தீர்மானிக்கப்படாமல் இருந்திருந்தால், சரியாக அங்கேயே உங்கள் சகோதரன் பிரன்காமின் முடிவாக அது இருந்திருக்கும் என்று நான் நம்புகிறேன். ஆனால் தேவன் வேறு ஏதோ ஒன்றை செய்வதற்காக வைத்திருந்தார். அந்த இதயத்தை அவர் அரைத்து தூளாக்கி அவரை அறிந்து கொள்ளும்படியாகவும், அவர் ஒருவரே அதை ஆளுமை செய்பவராகவும், ஆட்சி செய்பவராகவும் இருக்கிறார் என்பதை நான் அறிந்து கொள்ளும்படி செய்தார். நான் வீட்டிற்குச் சென்றேன். என்னால் நிற்க முடியவில்லை, வேலை செய்ய முடியவில்லை. அம்மாவின் வீட்டிற்கு சென்றேன். "அன்பே உள்ளே வா, நான் உன்னை அமைதிப்படுத்தட்டும்" என்றார்கள். "நான் வீட்டிற்கு போய்க் கொண்டிருக்கிறேன்" என்று கூறிவிட்டு சென்று விட்டேன். அது ஒருவித குளிர்ச்சியான சீதோஷ்ணமாக இருந்தது. நான் பெட்டியிலிருந்து கடிதங்களை எடுத்து அதை பிரித்து ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தேன். எங்களுடைய வீட்டில் நாங்கள் அதிகமாக எதுவும் வைத்திருக்கவில்லை. எனக்கு ஒரு பழைய கட்டில் மட்டுமே அங்கே பின்னால் போடப்பட்டிருந்தது. ஆனால் அவள் என்னுடன் அங்கு வாழ்ந்தாள். நாங்கள் அங்கே ஒன்றாக இருந்து கொண்டிருந்தோம்; அது தான் எங்கள் வீடு. அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அது ஒரு விஷயமல்ல, அது எனக்கும் அவளுக்கும் சொந்தமானதாக இருந்தது. அங்கேயிருந்த அந்தப் பொருட்களும் மரச்சாமான்களும் மூன்று டாலர் பணத்திற்கு மேல் பெறாது. ஆனால் அது அவளுக்கும் எனக்கும் சொந்தமானதாக இருந்தது. இந்த உலகில் உள்ள மற்ற எந்த ஒரு அருமையான வீட்டில் இருக்கும் பொருட்களை விட எனக்கு அது மேலானதாக இருந்தது. காரணம் அது எங்களுடையதாக இருந்தது. மேலும், நான் அங்கே பின்னால் இருந்த சமையல் அறைக்குள் சென்றேன், குளிர்ந்த உறைபனி தரையின் ஊடாக வந்து கொண்டிருந்தது. மேலும் அதை ஒரு போதும் மறக்க மாட்டேன், நான் கடிதம் ஒன்றை பிரித்தேன் அந்த முதல் கடிதத்தை பிரித்தேன் அதன் மேல் "மிஸ் சாரோன் ரோஜா பிரன்ஹாம்" என்று எழுதப்பட்டிருந்தது. அது அவளுடைய சிறிய கிறிஸ்துமஸ் சேமிப்பாக இருந்தது. அதை இனி போதும் அவள் எடுக்க மாட்டாள் என்று வங்கியாளருக்கு (Banker) தெரியும். அதனால் அந்த ஒரு டாலர் எண்பது சென்ட் பணத்தை அவர் எனக்கு அனுப்பி வைத்திருந்தார். என்னால் தாங்க முடியவில்லை. நான் உடைந்து போனவனாக கீழே அமர்ந்து அழ ஆரம்பித்தேன். இரவு நெருங்கிக் கொண்டிருந்தது. நான் தரையில் முழங்கால் படியிட்டேன். அழுதுகொண்டே பிரார்த்தனை செய்ய துவங்கினேன்.ஓ, அது எப்படிப்பட்ட ஒரு வேளையாக இருந்தது. நிற்பதற்கும் கூட எனக்கு கடினமாக இருந்தது. 70. நான் தூங்குவதற்காக சென்றேன். சென்றேன். கனவு ஒன்றை கண்டேன். நான் மேற்கில் இருப்பதாக நினைத்தேன், மேற்கில் அந்தப் பரந்த புல்வெளியில் நடந்து கொண்டிருந்தேன், மேலும் அந்தப் பாடலை விசில் அடித்துக் கொண்டிருந்தேன். சரக்கு வண்டியின் சக்கரம் உடைந்து போனது, பண்ணை வீடு அடையாளம் "விற்பனைக்கு" நான் இப்படியாக விசில் அடித்துக் கொண்டிருந்தேன் மேலும் நான் ஒரு புல்வெளியில் பழைய பள்ளிக்கூடம் அருகில் சக்கரம் ஒன்று உடைந்து கிடந்ததை பார்த்தேன் அங்கே நின்று கொண்டிருந்தேன். அந்தப் பள்ளிக்கு அருகே வெள்ளை நிற உடை அணிந்து அழகான நீல நிறக்கண்களுடன் பளபளக்கும் அழகான பொன்நிற தலைமயிருடன் ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள். நான் என்னுடைய தொப்பியை வைத்திருந்தேன்.....நான் அருகில் கடந்து சென்று, தொப்பியை இப்படி பின்னால் வைத்துக் கொண்டு "மிஸ் எப்படி இருக்கிறீர்கள்" என்று கேட்டேன். அவள் "ஹலோ அப்பா" என்றாள். "அப்பாவா?" என்று சொல்லிவிட்டு சுற்றிலுமாக கவனித்தேன். "நிச்சயமாக" என்றாள் அவள். "நல்லது, வாலிப பெண்ணே, நான் உன்னுடைய மன்னிப்பை கேட்கிறேன்" என்றேன். மேலும், "நான் - நான்..... நான் இருக்கும் அந்த வயதில் தான் நீயும் இருந்து கொண்டிருக்கிறாய், நான் எப்படி உன்னுடைய அப்பாவாக இருக்க முடியும்? என்றேன். "அப்பா உங்களுக்கு என்னைத் தெரியவில்லையா?" என்றாள். "இல்லை அம்மா. நான் பயந்து கொண்டிருக்கிறேன் எனக்கு தெரியவில்லை" என்று கூறினேன். "அப்பா நீங்கள் எங்கே இருந்து கொண்டிருக்கிறீர்கள் என்று உங்களுக்கு தெரியாது" என்றாள். "நல்லது, நான்.....நீ என்ன சொல்கிறாய்? என்றேன். அவள் "பில்லிபால் (Billy paul) எங்கே?" என்றாள். அது அவளுடைய சிறிய சகோதரன். "நான் ...நான்... என்ன இது? என்றேன். "அப்பா பூமியின் மீது நான் உங்களுடைய சிறிய சாரோனாக இருந்தேன் என்று கூறினாள்.' ''சாரோன்?... என் குழந்தையா?" என்றேன். "ஆமாம் அப்பா" என்றாள். மேலும் அவள், "நினைவில் கொள்ளுங்கள், நாங்கள் இங்கு வந்தது முதல் குழந்தைகளாக இருந்து கொண்டிருக்கவில்லை நாங்கள் என்றென்றும் அழியாத நிலையில் அனைவரும் ஒரே வயதுடையவர்களாக இருந்து கொண்டிருக்கிறோம் என்றாள். 'ஓ, அன்பே, நீ சாரோனா?" என்றேன். அவள் "ஆம்" என்றாள். "அம்மா எங்கே இருக்கிறாள்?" என்றேன். 'அவர்கள் மேலே உங்களுடைய புதிய வீட்டில் இருந்து கொண்டிருக்கிறார்கள்" என்றாள். 'ஒரு வீடா?"" "ஆம்" என்றாள். "சரி அன்பே. இங்கே ஏதோ காரியம் தவறாக இருக்கிறது" என்றேன். மேலும் பிரன்ஹாம் குடும்பத்தாருக்கு ஒருபோதும் வீடுகள் இருந்ததில்லை, நாங்கள் நிலையான இருப்பிடமற்ற அலைந்து திரிகிற மக்களைப் போலவே இருந்து வருகிறோம், எங்களுக்கு வீடுகள் இல்லை" என்றேன். "ஆனால், அப்பா, நீங்கள் இங்கே ஒரு வீட்டைப் பெற்றுக் கொள்வீர்கள்" என்று கூறினாள். எனக்கு வலது பக்கமாக சுற்றிலும் பார்த்தேன், அங்கே அருமையான பெரிய அழகான ஒரு வீடு இருந்தது. அங்கே சுற்றிலும் விளக்குகள் பிரகாசித்துக் கொண்டிருந்தது. "அம்மா உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். நான் இங்கே பில்லிக்காக காத்துக் கொண்டிருக்க போய்க் கொண்டிருக்கிறேன்" என்றாள். நான் "எல்லாம் சரிதான் அன்பே" என்றேன். என்னுடைய தொப்பியை கையில் வைத்துக் கொண்டு, என்னால் முடிந்தவரை வேகமாக ஓடிக் கொண்டிருந்தேன் வலதுபுறம் படியின் வழியாக மேலே ஓடினேன். நான் அங்கே அடைந்த போது, ஹோப் (Hope) வழக்கமாக என்னை சந்திக்கும் விதமாக அவளுடைய கைகளை விரித்துக் கொண்டு வெளியே வந்து கொண்டிருந்தாள். நான் படிக்கட்டுகளின் மேலே முடிந்தவரை வேகமாக ஓடினேன். அந்தப் படிகட்டுகளின் உச்சியை நான் அடைந்த போது அந்த கருமையான தலைமயிர் கீழே தொங்கிக் கொண்டிருக்க, வெண்மைநிற உடை அணிந்தவளாக என்னை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தாள். என்னுடைய தொப்பியை எறிந்து விட்டு அவளை நோக்கி ஓடினேன், அப்படியே அவளுக்கு அருகில் பக்கமாக சென்று மண்டியிட்டேன். அவளுடைய கையை என் தலையின் மீது வைத்தாள். "பில் நீங்கள் எதற்காக கவலைப்பட்டு கொண்டிருக்கிறீர்கள்?" என்றாள். "ஹோப், என்னால் இனிமேலும் தாங்கிக் கொள்ள முடியாது. கீழே இருந்து கொண்டிருப்பது ஷாரோன் ரோஜாதானே? நான் அவளை பார்த்தேன்" என்றேன். "ஆமாம் பில்" என்றாள். மேலும் "ஏன் கவலைப் படுகிறீர்கள்? நீங்கள் என்னையும் சாரோன் ரோஜாவையும் குறித்து ஏன் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்? என்று கூறினாள். "அன்பே.....என்னால் நிற்க கூட முடியவில்லை. நான்...நான்..." என்றேன். "கவலைப்படுவதை நிறுத்துங்கள்." என்றாள். இனிமேலும் கவலைப்பட்டுக் கொண்டிருக்க வேண்டாம், நாங்கள் நீங்கள் இருந்து கொண்டிருப்பதை விட பல மடங்கு சிறப்பாக இருந்து கொண்டிருக்கிறோம்" என்றாள். "அப்படி இருக்கலாம்" என்றேன். மேலும், "அவள் அழகான பெண்ணாக இருக்கிறாள், அவளைக் குறித்து நமக்கு பெருமையாக இருக்கிறது இல்லையா? என்றேன். "நிச்சயமாகவே" என்றாள். மேலும், நீங்கள் சோர்வாக இருக்கிறீர்கள் இல்லையா? என்றாள். மேலும் நான்"அன்பே, இவ்வளவு காலமாக நோயுற்றவர்களுக்காக ஜெபித்துக் கொண்டும், பிரசங்கித்துக் கொண்டும் இருக்கிறேன். அதுதான் நான் செல்ல வேண்டிய வழியாக இருக்கிறது என்று எனக்கு தெரியும்.. அது வரவேண்டும். இன்னும் அது வரவில்லை. என்னால் எழுந்து நிற்க முடியாமல் களைத்துப் போகிற வரையிலும் இன்னுமாக நோயுற்றவர்களுக்காக ஜெபித்துக் கொண்டும் பிரசங்கம் செய்து கொண்டும் இருப்பேன்" என்றேன். நீங்கள் "உட்கார மாட்டீர்களா?" என்று கூறினாள். மேலும், அங்கே நகர்த்திக் (Morris chair) கொள்ளும் வகையிலான ஒரு பெரிய நாற்காலி போடப்பட்டிருந்தது. நான் அவளைப் பார்த்தேன், அவள் என்னை திரும்பிப் பார்த்தாள். "நீங்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும்" என்றாள். இங்கே வீட்டில் ஒருசமயம் நாங்கள் மூன்று அல்லது இரண்டு பழைய நாற்காலிகளை வைத்திருந்தோம்...